பொதுவாக நிலையான வருமானம் கொடுப்பவை என்றால் வங்கிகளின் வைப்பு நிதி (Fixed Deposit) தான் நியாபகம் வரும். அடுத்து அரசின் பல பத்திரங்கள் நினைவுக்கு வரும்.
இது போக, தனியார் நிறுவனங்களும் நிலையான வருமானம் கொடுக்கும் பத்திரங்களை வெளியிட்டு வருகின்றன.
இதில் ஒரு வித பத்திரம் தான் Non Convertible Debentures (NCD).
பொதுவாக நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணத்தினை பெற வங்கிகளை நாடும். ஆனால் வணிக அளவிலான வட்டி என்பது வங்கிகளில் கொஞ்சம் அதிகமே.
அதனால் நிறுவனங்கள் வங்கிகளுக்கு பதிலாக மக்களிடம் பணத்தை பெற்று தங்கள் வியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள சில வழிமுறைகள் உள்ளன.
முதல் வழிமுறை,
Convertible Debentures என்ற பெயரில் பத்திரங்கள் வெளியிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலம் வரை நிலையான வட்டியை அளித்து அதன் பிறகு நிறுவன பங்குகளாக மாற்றி விடும் நடைமுறை இது.
பங்குச்சந்தையிலே எளிதில் பங்கு வாங்கும் நடைமுறைகள் இருப்பதால் தனி நபர்களுக்கு இது ஒத்து வராது.
அதனால் இரண்டாவது வழியை யோசிக்கலாம்.
இதன் பெயர் தான்
Non Convertible Debentures (NCD).இதில் பெறப்படும் பணத்திற்கு நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வட்டி வழங்கும். இந்த வட்டி விகிதம் வங்கி வட்டி விகிதங்களை விட இரண்டு முதல் மூன்று சதவீதங்கள் அதிகமாக இருக்கும். இறுதியில் பணம் திருப்பி அளிக்கப்பட்டு விடும். பங்குகளாக மாற்றப்படாது..