பழுதடைந்தத விளையாட்டுப்பொருட்கள் ஏலம் விடும் முறை :
உடற்கல்வி ஆசிரியர் தனது பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்திய பின் விளையாட்டுப்பொருட்கள் பழுதடைந்துவிடின் அதனை மேலும் பயன்படுத்த முடியாது எனில் கிழ்காணும் விதிமுறைகளைப் பின்பற்றி அப்பொருட்களை ஏலத்தில் விடலாம்.
* பயன்படுத்திய பின் பழுதடைந்தத விளையாட்டுப்பொருட்களின் முழுமையான விவர அறிக்கை தயாரிக்க வேண்டும்.
* நிரந்தர விளையாட்டுப் பொருள்களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளரின் அனுமதி பெற வேண்டும்.
*அனுமதி கிடைத்தபின் ஏலத்தில் விடுவதற்கான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
* ஏலம் விடும் நாளை முன்கூட்டியே மாணவர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக தெரிவிக்க வேண்டும்.
