1

இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பல்வேறு நண்பர்களிடமிருந்தும், பல்வேறு இணைய தளங்களிலும், செய்திதாள்கள் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் இங்கு தொகுத்து பகிரப்படுகிறது.. எனவே இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தன்மை கூற இயலாது.. இத்தகவல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது....

Thursday, March 12, 2015

உடற்கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்குச் சில அறிவுரைகள்

  • உடற்கல்விப்  பாடம் கற்பிக்க,முடிந்தவரை நிழல் உள்ள  இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்
  • மாணவர்களைச் சூரியனைப் பார்த்து நிற்கும்படி நிறுத்தக் கூடாது.
  • மாணவர்கள் அரைக்கால் சட்டை, அரைக்கை பனியன் அணிந்து பயிற்சியில் பங்குபெறச் செய்தல் நலம்.                                                                                                                      
  • காலை பதினோரு மணி முதல் மாலை மூன்று மணிவரை உடற்கல்வி பாடம் கற்பிக்க தேர்ந்தெடுக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
  • மாணவர்கள் தன சுத்தம் ,உடல் தூய்மை கவனிக்க வேண்டும்.
  • தேவையான ஆயத்தப் பயிற்சிகள்(Warming-up) செய்யாமல் பயிற்சிகள் தொடங்கக்கூடாது .
  • மாணவர்களுக்குப்  பயிற்சிகளை சிறுகச் சிறுகப் பிரித்து கற்பித்து பிறகு முழுமையாகக் கற்பிக்க வேண்டும்.
  • எல்லா பயிற்சிகளிலும் ஆசிரியர் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
  • விளையாட்டுக் கருவிகள் ஆசிரியரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
  • பள்ளி வளாகத்தினுள் மாணவர்களை வரிசை கலையாமல் செல்ல   அறிவுறுத்த வேண்டும். 
  • கட்டளைச் சொற்கள் தெளிவாகவும், அழுத்தமாகவும் இருக்க வேண்டும்.
  • தேவையானபோது மட்டுமே ஊதலை(Whistle) பயன்படுத்த வேண்டும்.
  • மாணவர்களுக்கான தலைமைப்பண்பு(Leadership Quality)வளரும் வகையில் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
  • மாணவர்களுக்கு உடல் நிலை சரியில்லாத போது  அவர்களுக்கு உடற்கல்வி கற்பிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • விளையாட்டுப் பயிற்சிகளினால் ஏற்படும் நன்மைகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
  • சுருங்கக்கூறின் மாணவன்  அவனை முழுமனிதனாக ஆக்குவதே குறிக்கோளாகக் கொண்டு ஆசிரியர் செயல் பட வேண்டும்.