உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே ...
'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே ' என்ற திருமூலரின் பாடல்,உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. சீரான நல்வாழ்வுக்கு ஆரோக்கியமான உடல் நலம் அவசியம்.இதற்கு உடற்பயிற்சிகள் அவசியம். இரஷ்யா ,ஜெர்மனி போன்ற மேலை நாடுகளில், அனைத்து மக்களும் உடற்பயிற்சிகளிலும்,விளையாட்டுகளிலும் முழுமையாக கொள்வதால் அந்நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி வாகை சூடுகிறது .இது போன்று நம் நாட்டிலும் அனைத்து மக்களும் உடற்பயிற்சியிலும் விளையாட்டுகளிலும் முழுமையாக ஈடுபாடு கொண்டால் ஒலிம்பிக் போட்டிகளிலும் நம் நாடும் வெற்றி வாகைசூடும் என்பதில் ஐயமில்லை..