1

இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பல்வேறு நண்பர்களிடமிருந்தும், பல்வேறு இணைய தளங்களிலும், செய்திதாள்கள் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் இங்கு தொகுத்து பகிரப்படுகிறது.. எனவே இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தன்மை கூற இயலாது.. இத்தகவல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது....

Monday, June 1, 2015

மிகக் குறைந்த பிரீமியத்தில் ஒரு இன்சூரன்ஸ் திட்டம்
இந்த வருடம் பிரதம மந்திரியின் பெயரால் ஒரு இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


நல்ல பயனுள்ள திட்டம் என்பதால் இங்கு பகிரப்படுகிறது..



  இன்சூரன்ஸ் என்றால் முதலீட்டையும் காப்பீடையும் சேர்த்து குழப்பும் ஒரு வழக்கம் நமக்கு இருக்கிறது.அந்த வகையில் இது முழுக்க ஒரு காப்பீடு திட்டம் மட்டுமே. அதாவது இதில் கட்டும் பிரீமியம் நமக்கு திருப்பி வழங்கப்பட மாட்டாது.உயிரிழப்பு மற்றும் விபத்துக்கள் நடைபெறும் போது மட்டுமே காப்பீட்டு தொகை வழங்கப்படும்.






Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana Scheme திட்டம்..

  வருடத்திற்கு 330 ரூபாய் பிரீமியம் கட்டினால் இரண்டு லட்ச ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படும். அதாவது மறைவிற்கு பிறகு குடும்பத்தினரிடம் இந்த தொகை வழங்கப்படும்.55 வயது வரை மட்டுமே இந்த காப்பீடு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் இணைய 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.


Pradhan Mantri Suraksha Bima Yojana திட்டம்


 அதே போல் வருடத்திற்கு 12 ரூபாய் கட்டினால் விபத்து காப்பீடு திட்டமும் இந்த பிரிவின் கீழ் வருகிறது.இதிலும் இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு பெறலாம். 70 வயது வரை இழப்பீடு பெறலாம்.


    இந்த இரண்டு திட்டங்களில் கட்டும் தொகையை 80C என்பதன் கீழ் வரி விலக்கிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  மே 31, 2015 க்குள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 31 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

நமது வங்கி கணக்கு எண்ணைக் கொடுத்தால் ஒவ்வொரு வருடமும் தானாகவே பிரீமியம் பிடித்தம் செய்யப்படும்.

இந்த திட்டத்தில் இணைய ஆதார் எண் அவசியமாகிறது.

LIC போன்றவற்றுடன் SBI போன்ற வங்கிகளும் இந்த திட்டத்தினை வழங்குகின்றன.

மிகக் குறைந்த பிரீமியம் என்பதுடன் அரசின் திட்டம் என்பதால் இதில் இணைந்து கொள்ளலாம்...