1

இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பல்வேறு நண்பர்களிடமிருந்தும், பல்வேறு இணைய தளங்களிலும், செய்திதாள்கள் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் இங்கு தொகுத்து பகிரப்படுகிறது.. எனவே இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தன்மை கூற இயலாது.. இத்தகவல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது....

Tuesday, June 30, 2015


தொழில் முனைவோருக்கு `டின்’ நம்பர் அவசியமா ?


  வரி செலுத்துபவர் அடையாள எண் (Taxpayer Identification Number) என்பதைத்தான் டின் நம்பர் என்று சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம். புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் தங்களது தொழிலை மாநில அரசிடம் பதிவு செய்து இந்த எண்ணை வாங்க வேண்டும்.

what is tin number and why it is required?

ஏற்கெனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்களும் அதை முறைப்படுத்தப்பட்ட வகையில் செய்வதற்கு டின் நம்பர் அவசியம். உற்பத்தி, சேவை, வர்த்தகம் என எந்த தொழில் வடிவமாக இருந்தாலும் டின் நம்பர் அவசியம். மாநில அரசின் வணிகவரித் துறை மூலமாக இது வழங்கப்படுகிறது. தொழில் நிறுவனம் பதிவு செய்யப்படும் மாநிலத்தில்தான் டின் நம்பர் வாங்க வேண்டும்.

பிற மாநிலங்களிலும் தொழில் செய்ய வேண்டும் என்றால் தனியாக மத்திய விற்பனை வரி எண் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம். தமிழ்நாடு முழுவதும் உள்ள அந்தந்த பகுதி வணிகவரி அலுவலகங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.இந்த எண் பதினோரு இலக் கங்களைக் கொண்டது. ஒவ்வொரு இலக்கத்துக்கும் ஒரு குறியீடு உள்ளது. இந்த எண் மதிப்பு கூட்டு வரி விதிப்பு (வாட்) கணக்கோடு தொடர்பு கொண்டது.





டின் ஏன் வேண்டும்?

உற்பத்தியாளர்கள், முகவர்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதி செய்பவர்கள் என வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரும் இந்த அனுமதி வாங்க வேண்டும். அரசுக்கு வணிக வரியை முறையாக செலுத்திவிட்டு இந்த தொழிலை செய்கிறோம் என்பதற்கான அடையாளம் இது. ஒரு தொழில்முனைவர் தனது உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை வரி கொடுத்துத் தான் வாங்குகிறார்.

அதுபோல பயனாளிகளிடம் வரியை வாங்கிக் கொண்டுதான் விற்பனை செய்கிறார். குறிப்பிட்ட டின் எண்ணி லிருந்து இந்த வரி வசூலிக்கப்பட்டுள்ளது என்பதை வாடிக்கையாளருக்கும் அரசுக்கும் தெரியப்படுத்த இது உதவுகிறது.டின் நம்பர் பெறுவதற்கான விண்ணப்பதாரரின் புகைப்படம், குடும்ப அட்டை நகல், PAN கார்டு நகல், சொத்து தொடர்பான ஆவணங்கள் நகல், வாடகை ஒப்பந்த பத்திரம் நகல் ஆகியவை விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும்.மேலும் வணிகவரி துறையின் Form F Form A விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்யவேண்டும். நாம் மேற்கொள்ள உள்ள தொழிலுக்கு ஏற்ப கட்டணங்கள் இருக்கும். இந்த கட்டணத்திற்கு மட்டும் வணிகவரித்துறை பெயரில் வங்கி வரைவோலை கொடுக்க வேண்டும். ஏற்கனவே டின் நம்பர் வைத்திருக்கும் இரண்டு நபர்களின் பரிந்துரைக் கடிதத்தை நமது விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும்.


   ஆவணங்கள் சரிபார்ப்புக்குப் பிறகு டின் நம்பர் நமக்கு வழங்கப்படும். ஒரே வாரத்தில் முகவரி தேடி நமக்கு டின் நம்பர் சர்டிபிகேட் வந்துவிடும் ஒரு பான் எண்ணுக்கு ஒரு டின் நம்பர் மட்டுமே வழங்கப்படும்.

இந்த எண்ணை அடிப்படையாக வைத்து ஒருவர் பல தொழில்களையும் செய்யலாம். ஆனால், டின் எண் வாங்கியவரின் பெயரில்தான் இந்த தொழில்கள் தொடங்க வேண்டும். ஒருவரது பெயரில் வாங்கப்பட்ட டின் நம்பரை வைத்து கூட்டாகத் தொழில் செய்ய பயன்படுத்த முடியாது. ஒரே டின் எண்ணின் அடிப்படையில் புதிய தொழில் தொடங்கும்போது வணிக வரித் துறைக்கு கடிதம் மூலமாகத் தெரிவித்துவிட வேண்டும்.

டின் எண் வாங்குவது சிரமமான வேலையல்ல, இதற்கென உள்ள முகவர்கள் மூலமாக எடுத்துக் கொள்ள லாம். மேலும் தொழில் ஆலோசகர்கள், எம்எஸ்எம்இ அலுவலகங்கள், டான்ஸ்டியா அலுவலகங்கள் மூல மாகவும் டின் நம்பர் எடுத்துக் கொள்ளலாம்.

நம் மொபைல் டேட்டாவை பற்றி தெரிந்து
கொள்வோம்


   நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன் 2G, E , 3G , H ,H+ Symbol வருவதை பார்த்திருக்கிறோம்.

இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.

1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet
Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol. இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம்.இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய
165மணி நேரமும்,1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.

2). "E" இதுவும் 2G(2.5G) EDGE (Enhanced Data access for
GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும். 2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது.இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும்,1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும்.இந்த "E" பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.

3). "3G" இது 3G மொபைல் இன்டர்நெட் UMTS (Universal Mobile
Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.இதன் மூலம் நாம் 1GB dataவை 6மணி நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 18மணி நேரத்தில் அனுப்ப இயலும்.



4. Symbol "H" இது 3G மொபைல் இன்டர்நெட் HSPA (High Speed
Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும் இதன் மூலம் நாம் 1GB dataவை 25நிமிட நேரத்தில் டவுன்லோடும்,அதே 1GB dataவை 45நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.

5). "H+" இதுவும் 3G மொபைல் இன்டர்நெட் (Evolved High Speed Packet
Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை.இதன் மூலம் நாம் 1GB dataவை 5-20நிமிடங்களில் டவுன்லோடும்,1GB dataவை 15-39 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.

6). "4G" இச்சேவை 4G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது.இதன் வேகம் மிகவும் அதிகம்.இதை இயங்க அவசியம் 4G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 3நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம்.
அதே 1GB dataவை அனுப்ப 5நிமிடம் மட்டுமே போதும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு முழுவமும் இச்சேவை வரும் என
எதிர்பார்க்க படுகிறது..

Thursday, June 25, 2015

Physical Education Teacher Post Model Question Paper [PDF Format]

  Tamilnadu Teachers Recruitment Board announced all the special teachers for P.E.T., Drawing and music will be appointed by only through the TRB Exam for the Govt. Schools. In Tamilnadu schools the special teachers for P.E.T., Drawing and music were appointed only on the basis of employment seniority and caste roaster.

        Already 1,028 special teachers were appointed on the basis of employment seniority in 2012. In that procedure TRB published the selected candidates list on the basis of employment seniority. But a case was filed against this list by muthuvelan in Madurai High Court Branch.

         In that case the high court suggested the TRB to select the candidates on the basis of requiring eligibility, employment seniority. Written Test and interview as per the court order our Govt indicated the TRB to follow new rules and regulation after that the new rules of TRB was approved and Govt. issued a new G.O on the basis of the rule.

         In the new rule and way of selecting the special teachers are not on the basis of Employment Seniority but through the TRB exam. All the eligible candidates can apply for this exam. The marks are alloted like,

                                   95 Marks for - Exam,
                                     5 Marks for - Interview

                                    Total = 100 Marks.

 The interview will be called for 1:5 ratio. SCERT prepares the Question Paper and the time duration is 3 hours for this exam. Totally 190 Questions are asked. Each question carries 1/2 mark totally 95 marks are the procedure of exam counducting, valuation result announcing all are controlled by TRB.

        The cost of application is Rs.500 for General candidates for differently abled persons and SC, ST candidates can get the application form for Rs. 250.

  உடற்கல்வி ஆசிரியருக்கான தகுதி தேர்வு மாதிரி வினாத்தாள் DOWNLOAD செய்ய இங்கு CLICK செய்யவும்..  [PDF Format]-
இரண்டாண்டு பி.பி.எட்., படிப்பில் யோகா, கராத்தே


         பி.பி.எட்., எனப்படும் உடற்கல்வியியல் இரண்டு ஆண்டு படிப்பில் புதிதாக யோகா, கராத்தே, ஜூடோ உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பி.எட்., மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக எம்.எட்., படிக்க வேண்டும். யு.ஜி.சி., ம ற்றும் தேசிய கல்வியியல் ஆசிரியர் பயிற்சி பல்கலை (என்.சி.டி.இ.,) இணைந்து பி.எட்., படிப்புக்கு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.

       அதன்படி, பி.எட்., எம்.எட்., படிப்புக்காலம் இனி இரண்டு ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் பி.எட்., படிப்புக்கு 723 கல்லுாரிகள், உடற்கல்வியியல் படிப்பான 'பி.பி.எட்.,' படிப்புக்கு 19 கல்லுாரிகள், எம்.எட்.,க்கு 140 கல்லுாரிகள் அனுமதி பெற்றுள்ளன. இதற்கான பாடத்திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. காரைக்குடி அழகப்பா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள  உடற்கல்வியியல், கல்வியியல் கல்லுாரிகள் இரண்டு ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற்றுள்ளன.


  உடற்கல்வியியல் கல்லுாரியில் பி.பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 15. ஒரு யூனிட்டுக்கு 50 மாணவர்கள் வீதம், 2 யூனிட் மாணவர்கள் முதலாண்டில் சேர்க்கப்பட உள்ளனர். இதே போல் 40 இடங்கள் உள்ள, எம்.பி.எட்., படிப்புக்குக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நேர்முகத்தேர்வு வரும் 24-ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
இப்படிப்பில்,கால்பந்து, கையுந்துபந்து, கைப்பந்து, ஹாக்கி, வளைகோல், கூடைப்பந்து, தடகளம் ஆகிய விளையாட்டு மட்டும்முன்பு செய்முறை பயிற்சியாக இருந்தது. கூடுதலாக யோகா, கராத்தே, ஜூடோ, சிலம்பம், மலையேறுதல் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தவும் கூறப்பட்டுள்ளது.

Monday, June 22, 2015

விவசாய வருமானத்தில் வரியை எப்படி சேமிப்பது?


   நமது அரசியல் வாதிகள் வருமான வரித்துறையை ஏமாற்றுவதற்கு உபயோகிக்கும் ஒரு முக்கிய ஆயுதம் விவசாய வருமானம் என்று சொல்லலாம்.


கடந்த முறை, சரத் பவார் அவர்களது மகள் 10 ஏக்கர் நிலத்தில் 114 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றதாக தேர்தல் கமிசன் அறிக்கையில் கூறி இருந்தார்,

அவ்வளவு வருமானம் கிடைக்க அப்படி என்னது தான் பயிர் செய்தார் என்று தெரியவில்லை? சொன்னால் நன்றாக இருக்கும்.


இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்திய அரசின் கொள்கைப்படி விவசாயத்தின் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்திற்கு வரி கிடையாது. அதனால் தான் அரசியல் வாதிகள் போட்டி போட்டுக் கொண்டு விவசாயிகளாக மாறி விடுகின்றனர்.

உண்மையிலே முழுவதுமாக வரி இல்லை என்று சொல்ல முடியாது. Back Door என்ற முறை கணக்கு படி சிறிது வரி கட்ட வேண்டும். அது உங்களது மற்ற வருமானங்களை சார்ந்தும் இருக்கிறது. இருந்தாலும் அதிக அளவு பயன் உள்ளது.

வருடத்திற்கு 5000 ரூபாய் வரை விவசாயத்தில் வருமானம் வந்தால் அதனை வருமான வரி படிவத்தில் குறிப்பிட தேவையில்லை. அதற்கு மேல் வந்தால் குறிப்பிட வேண்டும்.

இதில் விவசாய வருமானம் என்றால், விவசாய நிலங்களில் இருந்து கிடைக்கும் வாடகை, குத்தகை, விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானம் போன்றவை தகுதி பெறுகின்றன. ஆனால் விவசாய நிலம் அரசு குறிப்பிட்ட பகுதியில், அதாவது நகரங்களில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் இருக்க வேண்டும்.

இந்த விவசாய வருமானத்திற்கு வரி விலக்கு பெறுவது எப்படி என்று பார்ப்போம்..இது ஒரு சிக்கலான கணக்கு என்றும் சொல்லலாம்.

இந்த கணக்கிற்கு விடை காண கீழே உள்ள வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

Step 1:  முதலில் விவசாயம் சாராத வருமானத்தை கணக்கிட வேண்டும்.
Step 2:  விவசாயம் சார்ந்த வருமானத்தை கணக்கிடுக.
Step 3:  1 மற்றும் 2ல் கிடைத்த வருமானங்களை கூட்டுக.
Step 4:  3ல் கிடைக்கும் தொகைக்கு வருமான வரி கணக்கிடுக..
Step 5:  விவசாய வருமானத்தை குறைந்தபட்ச வருமான வரி விலக்கு தொகையுடன் கூட்டுக.
Step 6:  5ல் கிடைத்த தொகைக்கு வருமான வரி கணக்கிடுக
Step 7:  4ல் கிடைத்த தொகையை 6ல் கிடைத்த தொகையில் இருந்து கழித்து விடுக. இது தான் நீங்கள் கட்ட வேண்டிய வருமான வரியாகும்.


இனி இந்த கணக்கீடுகளை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்.


கணேசன் என்பவர் வருடத்திற்கு 5,00,000 வருமானம் தனது சம்பளம் மூலமும் 3,00,000 வருமானம் விவசாயத்தில் பெறுகிறார். அவருக்கு எப்படி வரி கணக்கிடுவது என்று பார்ப்போம்.

Step 1:
விவசாயம் சாராத வருமானம் = 500000 ரூபாய்

Step 2:
விவசாயம் சார்ந்த வருமானம் = 3,00,000 ரூபாய்

Step 3:
மொத்த வருமானம்  = 500000 + 250000 = 8,00,000 ரூபாய்

Step 4:
8,00,000 ரூபாய்க்கு வருமான வரி கணக்கிடுவோம்.
முதல் 2.5 லட்சத்துக்கு வரி கிடையாது => 0
2.5 முதல் 5 லட்சத்துக்கு 10% வரி => 25,000
5 முதல் 10 லட்சத்துக்கு 20% வரி => 3,00,000 * 0.20 = 60,000
மொத்த வரி = 85,000 ரூபாய்

Step 5:
விவசாய வருமானத்தை குறைந்தபட்ச வருமான வரி விலக்கு தொகையுடன் கூட்ட வேண்டும்.
3,00,000 + 2.50,000 = 5,50,000 ரூபாய்

Step 6:
இப்பொழுது 5,50,000 ரூபாய் வரி கணக்கிட வேண்டும்.
முதல் 2.5 லட்சத்துக்கு வரி கிடையாது => 0
2.5 முதல் 5 லட்சத்துக்கு 10% வரி => 25,000
5 முதல் 10 லட்சத்துக்கு 20% வரி => 50,000 * 0.20 = 10,000
மொத்த வரி = 35,000 ரூபாய்


Step 7:
4ல் கிடைத்த தொகையை 6ல் கழித்தால்,
85,000 ரூபாய் - 35,000 ரூபாய் = 50,000 ரூபாய்

இந்த 50,000 ரூபாய் தான் நாம் வரி கட்ட வேண்டும். விவசாய வருமானத்தை சார்ந்து இருப்பதால் 35,000 ரூபாய் வரி சேமிப்பாக கிடைக்கிறது.

உங்களுக்கும் விவசாயம் மூலமாக இருந்தால் இவ்வாறு பெருமளவில் வருமான வரியை சேமிக்கலாம்.

இந்த முறை ஊரில் இருக்கும் விவசாய பெருமக்களுக்கு தெரியும் வாய்ப்பு குறைவு என்பதால் பகிரவும் செய்யுங்கள்! பயனாக இருக்கும்..

                                                                                               நன்றி ---முகநூல்
அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி?

  பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்திய சமூக பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்ஷன் யோஜனா. இந்தத் திட்டம் ஜூன் 1, 2015-ல் இருந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் இணைய என்ன செய்ய வேண்டும், எப்படி பணம் வசூலிக்கப்படும், யார் இதை நிர்வகிப்பார்கள், எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்கும் என்று பல கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் தந்தார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வங்கிப் பரிமாற்றம் மற்றும் அரசுக் கணக்குகள் பிரிவின் இணைப் பொது மேலாளர் வி.வி.கணேசன்.

‘‘இந்தத் திட்டத்தின் நோக்கமே அமைப்பு சாராத (Unorganised) துறையில் வேலை செய்பவர்கள், ஓய்வுக்காலத்துக்குப் பின், அதாவது 60 வயதுக்குப்பின் மாதம் ரூ.1,000 - 5,000 வரை ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதுதான். அதற்காக அரசு தன் சார்பாக ஒரு சிறு தொகையைச் செலுத்தும்.

யார் இணையலாம்?

18  வயது முதல் 40 வயதுடைய, இந்தியாவில் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியர் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் இணையலாம். ஒரே குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்டு 40 வயதுக்குள் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.

இந்தத் திட்டத்தில் டிசம்பர் 31, 2015-க்குள் இணைபவர்களுக்கு அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000 அல்லது நாம் செலுத்தும் தொகையில் 50 சதவிகிதம், இவற்றில் எது குறைவோ அந்த தொகையைச் செலுத்தும்.

பென்ஷன் தொகை தரக்கூடிய திட்டங்களில் ஏற்கெனவே இணைந்திருப்பவர்கள், சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இணைந்திருப்பதாக கருதப்படு வார்கள். அப்படிப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் இணைய முடியும் என்றாலும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை இவர்களுக்கு வழங்காது. அதேபோல், வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களும் இந்தத் திட்டத்தில் சேரலாம் என்றாலும் அவர்களுக்கும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகை கிடைக்காது.

ஒருவேளை இப்போது அமைப்புசாரா துறையில் பணியாற்றிக் கொண்டிருந்து, பிற்காலத்தில் அமைப்பு சார்ந்த துறையில் பணியில் சேர்ந்தால், எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்தார் களோ, அந்த வங்கிக் கிளைக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். அரசுக்கு தெரியப் படுத்தியவுடன் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை நிறுத்திக்கொள்ளும்.

எப்படி இணைவது?

எந்த வங்கிக் கிளையில் உங்களுக்கு சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக் கிளையில் இந்த பென்ஷன் திட்டத்துக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, முகவரி சான்று, புகைப்பட அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றைத் தரவேண்டும். வங்கி உங்களுக்கு ஒரு ‘ப்ரான் எண்’ணை (PRAN NO) வழங்கும். அந்த ‘ப்ரான் எண்’ணுக்கு நம் கணக்கிலிருந்து பணம் கிரெடிட் செய்யப்படும். இந்த ‘ப்ரான் எண்’ நாம் அடல் திட்டத்தில் இணைந்ததற்கு ஆதாரமாக இருக்கும்.

யார், எவ்வளவு தொகை செலுத்தலாம்?

நாம் விண்ணப்பம் பூர்த்தி செய்து தரும்போதே 60 வருடங்களுக்குப் பிறகு எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்க வேண்டும் என்பதைக் கேட்பார்கள். குறைந்தபட்சம் ரூ.1,000 தொடங்கி அதிகபட்சமாக ரூ.5,000 வரை ஒருவர் பென்ஷனாக பெற நினைக்கும் தொகையைக் குறிப்பிடலாம். பென்ஷனாக பெற நினைக்கும் தொகைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் பணம் கட்ட வேண்டியிருக்கும். (பார்க்க அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணை!)

முதல்முறையாக இந்தத் திட்டத்தில் இணைந்தவுடன், இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கு சாட்சியாக ஒரு சான்றிதழ் வழங்கப்படும். அதுதான் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம். அதேபோல் ஒவ்வொரு தவணை செலுத்தும்போதும் உங்களுக்கு ரசீதோ அல்லது குறுஞ்செய்தியோ அனுப்பப்படும்.

எப்படி பணம் செலுத்துவது?

ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தபின் மாதாமாதம் செலுத்த வேண்டிய தொகையை ஆட்டோடெபிட் மூலம் செலுத்தலாம்.  நம் வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து வரவு வைக்கப்படும். நம் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, அது நம் ‘ப்ரான்’ கணக்கில்   வரவு வைக்கப் பட்டதும் நமக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.




எப்போது பணம் எடுக்கப்படும்?

நாம் முதல் முறையாக அடல் திட்டத்தில் இணையும்போது எந்த தேதியில் பணம் செலுத்து கிறோமோ, அந்த தேதிதான் நம் அடுத்தடுத்த  மாதத்தின் கெடு தேதி. உதாரணமாக, ஜூன் மாதம் 8-ம் தேதி முதல் தவணை செலுத்தி இருந்தால், அடுத்தடுத்த மாதம் 8-ம் தேதி அன்று தவணைக்கான பணம் எடுக்கப்படும்.

தொகையை அதிகரிக்கலாமா?

வருடத்துக்கு ஒருமுறை நாம் செலுத்தும் தொகையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரல் மாதம் மட்டும் இந்த வசதி மூலம் நாம் மாதாமாதம் செலுத்தும் பென்ஷன் தொகையை அதிகரித்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும்.

பணம் கட்டாவிட்டால்..?

இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின் சரியாக பணம் கட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கப் படும். ரூ.1 முதல் 100-க்கு ஒரு மாதத்துக்கு 1 ரூபாயும், ரூ.101 முதல் 500 வரை ஒரு மாதத்துக்கு 2 ரூபாயும், ரூ.501 முதல் 1,000 வரை ஒரு மாதத்துக்கு 5 ரூபாயும், ரூ.1001-க்கு மேல் ஒரு மாதத்துக்கு 10 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு பணம் செலுத்தவில்லை என்றால், நம் சேமிப்புக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும். தொடர்ந்து 24 மாதங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் சேமிப்புக் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டு, திட்டத்திலிருந்து நீக்கப்  படுவார்கள்.

யார் நிர்வகிக்கிறார்கள்?

இந்தத் திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) என்கிற அரசு அமைப்பு நிர்வகிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதியில் 85%  அரசுப் பத்திரங்கள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்யப் படும். மீதமுள்ள 15% பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.

என்ன உறுதி?

நாம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு  கூடுதல் தொகை கிடைத்தால், அந்த தொகை திட்டத்தில் முதலீடு செய்தவருக்கே  வழங்கப்படும். ஒருவேளை உறுதி செய்யப்பட்ட தொகையைவிட குறைந்த அளவே வருமானம் ஈட்டி இருந்தால், அதை அரசாங்கம் சரிகட்டும்.

எப்போது க்ளெய்ம் கிடைக்கும்?

இந்தத் திட்டத்தில் இணைந்தவர் 60 வயதுக்குப் பிறகு இறந்துவிட்டால், அவரது இறப்புச் சான்று, இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழ், ஆதார்  அட்டை விவரங்கள், நாமினியின் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை திட்டத்தை நிர்வகிக்கும் வங்கிக் கிளையில் சமர்பித்தால், வங்கி அந்த ஆவணங்களின் நகலை பிஎஃப்ஆர்டிஏவுக்கு அனுப்பும். பிஎஃப்ஆர்டிஏ  சான்றிதழ்களை சரிபார்த்து பென்ஷன் தொகையை நாமினிக்கு வழங்கும். ஒருவேளை 60 வயதுக்குமுன் இறந்தால் அல்லது உயிர் போகக்கூடிய நோய் காரணமாக பணத்தைத் திட்டத்திலிருந்து எடுக்க வேண்டும் என்றால், திட்டத்தில் இணைந்தவர் எவ்வளவு தொகை செலுத்தினாரோ அந்த தொகையும், அரசு தன் சார்பாக வழங்கிய தொகை மட்டும்தான் வழங்கும்.

60 வயதுக்குப் பின் இறந்தால்...?

இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, ஒருவர் 60 வயது முடித்து எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகளுக்கும் அவர் கோரி இருந்தபடி பென்ஷன் தொகை கிடைக்கும்.

அவருக்குப்பின் அவர் சொல்லும் நாமினி, அதாவது முதல் நாமினி, இறக்கும் வரை அதே அளவு தொகை ஒவ்வொரு மாதமும் பென்ஷனாக கிடைக்கும். முதல் நாமினியும் இறந்துவிட்டால், அவர் நாமினியாக நியமித்தவருக்கு, அதாவது இரண்டாவது நாமினிக்கு உறுதி செய்திருந்த மொத்த தொகையும்  (Lumpsum) வழங்கப்படும்.

உதாரணமாக, சேகர் என்பவர் தன் 30-வது வயதில் இந்தத் திட்டத்தில் இணைந்து மாதம் ரூ.577 செலுத்தி வருகிறார். அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000 செலுத்தி வருகிறது. இவருக்கு 61-ஆவது வயதிலிருந்து மாதம் ரூ.5,000 கிடைக்கும். சேகர் தன் 71-வது வயதில் இறந்துவிடுகிறார். ஆக சேகருக்கு  61 - 71 வயது வரை 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 கிடைத்திருக்கும்.

சேகர் இந்தத் திட்டத்தில் இணையும்போது நாமினியாக தனது மனைவி கமலாவைக் குறிப்பிட்டிருக்கிறார்.  (நாமினி கணவன் /மனைவி யாகத்தான் இருக்க வேண்டும்) எனவே, சேகர் இறந்தபின், கமலா உயிரோடு இருக்கும் வரை மாதம் ரூ. 5,000 கிடைக்கும். கமலா தனது நாமினியாக தன் மகன் ரமேஷை நியமித்திருப்பார். கமலா இறந்த பிறகு, ரமேஷுக்கு மொத்தத் தொகையான 8.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

நாமினியை மாற்றிக் கொள்ளலாமா?

இந்தத் திட்டத்தில் இணைபவர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது கட்டாயம் நாமினியை குறிப்பிட வேண்டும். ஒருவேளை, நாமினி இறந்துவிட்டால், எந்த வங்கிக் கிளையில் இந்தத் திட்டம் நிர்வகிக்கப்பட்டு வருகிறதோ, அந்த வங்கியில் சென்று புதிதாக வேறு ஒரு நாமினியை நியமித்துக் கொள்ளலாம்.

வேறு வங்கிக் கிளைக்கு மாற்றலாமா?

இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின், ஒருவர் எந்த வங்கிக் கிளைக்கு வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், க்ளெய்ம் சமயத்தில் ஒருவரின் ‘ப்ரான் கணக்கு’ எங்கு நிர்வகிக்கப்படுகிறதோ, அங்குதான் க்ளெய்ம் கிடைக்கும்.

தரப்பட்ட தகவல்கள் தவறாக இருக்கும்பட்சத்தில், திட்டத்தில் இணைந்தவர் செலுத்திய தொகை மட்டும் திரும்ப வழங்கப்பட்டு திட்டத்திலிருந்து நீக்கப்படுவார். அரசு தன் சார்பாக வழங்கிய தொகை கிடைக்காது'' என்றார் கணேசன்.
---விகடன்

Tuesday, June 16, 2015

உடல் எடை குறைய வேண்டுமா ? சிம்பிள் டயட் ..



(டாக்டர் விகடன் டிப்ஸ்)

ஆனா சீரியஸா பாலோ பண்ணுங்க ..

ஒரு நாள் உணவு!

காலையில் எழுந்ததும், 10 நிமிடங்கள் வார்ம் அப்.
பிறகு இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர்.

அரை மணி நேர நடைப்பயிற்சி.

வீடு திரும்பியதும் கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப்.
(சர்க்கரை சேர்க்காமல்)

புரதச் சத்து நிறைந்த முளைகட்டிய பயறு சாலட்
போன்ற மிதமான பிரேக் ஃபாஸ்ட். (100 கிராம்)

10 மணிக்கு மோர்

11 மணிக்கு எலுமிச்சை ஜூஸ்

12 மணிக்கு இளநீர்

மதியம் ஒரு மணிக்கு 150 கிராம் அரிசி சாதம்.

வளரும் குழந்தைகளுக்கு 200 கிராம் சாதம்.
(இந்த சாதத்தை மூன்றாகப் பிரித்து, கீரை, காயுடன்
ஒரு பங்கு, அடுத்து மிளகு, பூண்டு ரசம்,
கடைசிப் பங்கு தயிர் / மோர் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.)

200 கிராம் பருப்பு மற்றும் காய்கறிகள். துளியும்
எண்ணெய் சேர்க்கக்கூடாது. அதிகம் வேக வைக்க
வேண்டியதும் இல்லை.

நான்வெஜ் பிரியர்கள் இரண்டு துண்டு மட்டன் /
சிக்கன், முட்டையின் வெள்ளைப்பகுதி மட்டும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் மதிய தூக்கத்தைத்
தவிர்க்கவும்.

நான்கு மணிக்கு ஒரு கப் பப்பாளி.

ஐந்து மணிக்கு புரதம், நார்ச் சத்து நிறைந்த வேக
வைத்த ஏதேனும் சுண்டல் ஒரு கப்.

காபி பிரியர்கள், ஒரு சின்ன கப்பில் காபி எடுத்துக்
கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சமாக காபியைக்
குறைத்து க்ரீன் டீ குடிக்கலாம்.

இரவு எட்டு மணிக்குள் இரண்டு சப்பாத்தி அல்லது
இரண்டு இட்லி, எண்ணெய் இல்லாத இரண்டு தோசை,
தொட்டுக்கொள்ள சாம்பார் அல்லது சட்னி.

தூங்கப் போவதற்கு முன்பு கொழுப்பு நீக்கிய பால்
ஒரு கப்...
கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்.


       நம் வாழ்க்கையின் முதல் 25 வருடம் பெற்றோரை நம்பியே இருக்கிறோம். அடுத்த 35 வருடங்கள் நம்மை நம்பியே நாம் இருக்கிறோம். அதற்குமேல் இருக்கும் 20 ஆண்டுகள் வாரிசுகளையே நம்பி காலத்தை ஓட்டவேண்டிய கட்டாயம்தான் இன்றைக்கு பலருக்கும் இருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனும் தனது ஓய்வுக்காலத்துக்காக திட்டமிட்டு பணத்தை சேமித்து வைத்திருந்தால், 60 வயதுக்கு மேல் எந்த பெரிய பிரச்னையும் இல்லாமல் காலத்தை ஓட்டிவிடலாம். ஆனால், அந்த வயதில் நிம்மதியாக காலத்தைக் கழிக்க எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் விட்டிருந்தால், ஓய்வுக்காலமானது நரகமாகிவிடும்.







    இன்றைக்கு 55 வயதில் இருப்பவர்களில் எத்தனை பேர் தங்கள் ஓய்வுக்காலத்துக்காக சரியாகத் திட்டமிடுகிறார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, ஓய்வுக்காலத்துக்கான திட்டமிடலில் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

1. கடன் சுமை இல்லாத ஓய்வு!

ஒருவர் ஓய்வுக் காலத்தை நெருங்கும்போது எந்தவித கடன் பாக்கியும் இல்லாமல் இருப்பது அவசியம். தற்போதைய நிலையில், ஓய்வுபெற இன்னும் சில ஆண்டுகளே இருக்கும் நிலையில், வீட்டுக் கடனை கணிசமாக வைத்திருக்கிறார்கள் சிலர். இன்னும் சிலர் மகன் அல்லது மகளின் திருமணத்துக்கு கடன் வாங்கிவிடுகிறார்கள்.

இந்தக் கடன்கள் ஓய்வுக் காலத்திலும் தொடர்ந்தால், வருமானம் இல்லாதபோது அதை சரியாகக் கட்டுவதற்கான வாய்ப்பு இருக்காது. அப்போது வட்டி அதிகரித்து, நிலைமை மேலும் சிக்கலுக்குள்ளாகும். எனவே, ஏதாவது கடன் பெறும்போது அந்தக் கடனை ஓய்வுக்காலத்துக்கு முன்னர் திருப்பிச் செலுத்த முடியுமா எனக் கவனித்துப் பெறுவது நல்லது. அதிக வட்டி செலுத்தக்கூடிய தனிநபர் கடன், கடன் அட்டை, நகைக்கடன் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

2. அவசரக் கால நிதித் திட்டமிடல்!

ஓய்வுக் காலத்தின்போது அவசரத் தேவைகளுக்கு என குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைப்பது முக்கியம். காரணம், அந்த வயதில்தான் பல செலவுகள் வந்து சேரும். முக்கியமாக, இந்த வயதில் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்புண்டு.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து வைத் திருந்தாலும் அவசரக் கால நிதித் திட்டமிடல் படி கொஞ்சம் பணத்தைச் சேர்த்து வைத்திருந்தால்தான், கவலைப்படாமல் திடீர் செலவுகளை நம்மால் சமாளிக்க முடியும்.

இந்த வகையான சேமிப்பு எந்த நேரத்திலும் திரும்பப் பெறக்கூடிய முதலீடுகளில் இருப்பது அவசியம். அன்றாடத் தேவைகளுக்குத் தேவையான தொகையை வங்கி சேமிப்பிலும் இதரத் தேவைகளுக்குத் தேவையான தொகையை லிக்விட் மியூச்சுவல் பண்ட் திட்டங்களிலும் வைத்துக் கொள்ளலாம்.

3. செலவுகளுக்கான திட்டமிடல்!

ஓய்வுக் காலத் தின் போது நாம் செய்யும் செலவு களை மறு ஆய்வு செய்வது அவ சியம். பணியிலி ருக்கும்போது அன்றாடப் போக்குவரத்துச் செலவு, உடைகளுக்கான செலவு மற்றும் இதரச் செலவுகள் அதிகமாக இருக்கும். ஓய்வுக் காலத்தின்போது இத்தகைய செலவுகளைக் குறைத்துக் கொள்வது அவசியம். நாம் செய்யும் மொத்தச் செலவு நம் வருமானத்துக்குள் அடங்கி உள்ளதா என்பதை உறுதிச் செய்துகொள்வது அவசியம்.

4. முதலீடுகளின் விவரங்களைத் தெரியப்படுத்துதல்!

நாம் செய்யும் அனைத்து முதலீடுகளின் விவரங்களையும் அது சம்பந்தமான ஆவணங்களை யும் நமது குடும்ப உறுப்பினர்கள் நன்கு அறியும்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம். அந்த முதலீடுகள் சம்பந்தமாகத் தொடர்புகொள்ள வேண்டிய நபர்கள் அவர்களது தொலைபேசி எண்கள், முகவரி அனைத்தையும் அதனுடன் இணைத்து வைத்துக் கொள்வது அவசியம்.

சிலர் சம்பாதிக்கும் காலத்தில் வங்கி எஃப்டி-களில் பணத்தைப் போட்டு வைக்கிறார்கள். இன்னும் சிலர் பல்வேறு இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் எடுக்கிறார்கள். ஆனால், இதைப் பற்றி எல்லாம் குடும்பத்து உறுப்பினர்களிடம் அவர்கள் சொல்லாமலே இருந்து விடுகிறார்கள். இதுமாதிரியான சமயத்தில் திடீரென அவர்கள் மறைந்துவிடும்போது, அந்த பணம் குடும்பத்து உறுப்பினர்களுக்கு சேராமலே போய்விடுகிறது. இந்தியா முழுக்க பல வங்கிகளில் கேட்பாரற்றுக் கிடக்கும் பணம் மட்டுமே பல ஆயிரம் கோடி ரூபாயாகும். எனவே, எந்த முதலீடாக இருந்தாலும் அது பற்றிய விவரங்களை குடும்பத்து உறுப்பினர்களுக்கு அவசியம் தெரியப்படுத்த வேண்டும்.

5. முதலீடுகளில் இரண்டாவது நபரை நியமித்தல்!


முதலீடு பற்றிய விவரங்களை குடும்பத்து உறுப் பினர் களுக்கு தெரியப் படுத்துவது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியம், முதலீடுகளை மேற்கொள்ளும்போது குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவரை இரண்டாவது நபராகச் சேர்த்துக் கொள்வது.

இதனால் பிற்காலத்தில் நடைமுறை சிக்கல்களைத் தவிர்க்க உதவியாக இருக்கும். உதாரணமாக, முதலீடுகளை மேற்கொள்ளும் போது மனைவியின் பெயரை இரண்டாவது நபராகச் சேர்க்கும்போது இருவரும் அந்த முதலீடு சம்பந்தமான பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும். ஓய்வுக்காலத்தில் உடல்நிலை சரியில்லாத நேரங்களில் முதலீடுகளில் ஏதேனும் பரிவர்த்தனைகள் செய்ய வேண்டுமாயின் யாரேனும் ஒருவர் அதனைக் கவனிக்க ஏதுவாக இருக்கும்.

6. ஓய்வுக்காலத்துக்குத் தேவையான நிதியை கண்டறிதல்!

ஒருவரின் ஓய்வுக்காலம் முதல் தோராயமாக எத்தனை ஆண்டுகள் வரை ஓய்வுக்காலம் தொடரும் என்பதைக் கணித்து அத்தனை ஆண்டுகளுக்குத் தேவையான தொகையை முதலீடுகளின் மூலம் பெருக்குவது அவசியம். உதாரணமாக, ஒருவர் 60 வயதில் ஓய்வுபெற வேண்டுமானால் அன்றிலிருந்து குறைந்தபட்சம் அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தேவையான தொகையைச் சேமித்து வைத்திருக்க வேண்டும்.

தற்போது நம் நாட்டில் சராசரி ஆயுள் காலம் கணிசமாக அதிகரித்திருப்பதால், 80 வயது வரைக்கும் தேவையான தொகை கிடைக்கிறமாதிரி திட்டமிடுவது அவசியம். இல்லாவிட்டால், மீதமிருக்கும் காலத்தை வாரிசுகளை நம்பி கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும்.

7. பணத்தேவையைத் திட்டமிடல்!

முதலீடுகளின் மீதான வருமானத்தை தேவைக்கு ஏற்றாற்்போல் ஒவ்வொரு மாதமோ, மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ கிடைக்கும்படி திட்டமிடுவது தேவையற்றப் பணச் சிக்கல்களைத் தவிர்க்கும்.

நாம் செய்யும் செலவுகளில் அன்றாடம் செய்யும் செலவு, மாதம் ஒருமுறை செய்யும் செலவு, வருடத்துக்கு ஒருமுறை செய்யும் செலவு எனப் பிரித்துப் பட்டியல் இடுவதன் மூலம் எந்த நேரத்தில் எவ்வளவு பணத்தை முதலீடுகளிலிருந்து பெற வேண்டும் என்பதைத் திட்டமிடுவதற்கு உதவியாக இருக்கும்.

8. வருமான வரித் திட்டமிடல்!

முதலீடுகளில் வரும் வரு மானத்துக்கான வரியைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரியைக் குறைக்கவோ, தவிர்க்கவோ முடியும். உதாரணமாக, மூத்த குடிமக்களுக்கு எனப் பிரத்யேகமாக வழங்கப்படும் வரிச்சலுகைகள், சேமிப்புத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வரிச்சுமையைக் குறைக்கலாம்.

9. போதுமான மருத்துவக் காப்பீடு பெறுதல்!

தற்போது நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவதால், பெரும்பாலானவர்கள் தனியாக மருத்துவக் காப்பீடு எடுக்கத் தயக்கம் காட்டுகிறார்கள். பணி முடிந்து ஓய்வு பெறும்போது மருத்துவக் காப்பீடு பெறுவது என்பது பல்வேறு நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும்.

இதனைத் தவிர்க்க முன்கூட்டியே மருத்துவக் காப்பீடு எடுத்தல் அவசியம். அறுபது வயதுக்குப் பிறகு மருத்துவ சிகிச்சைக்காக ஆகும் செலவு அதிகமாக இருக்கும் என்பதால், போதுமான மருத்துவக் காப்பீடு அவசியம் தேவை.

10. வாரிசுகளுக்குப் பிரித்தளித்தல்!

நமது காலத்துக்குப் பின், நம் சொத்துக்களை நமது வாரிசு களுக்கு எவ்வாறு பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்து உயில் மூலம் அதனைச் செயல்படுத்த வேண்டும். நாம் சேமித்த பணத்தை நம் காலத்துக்குப் பின் சரியான நபர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தல் நமது கடமையாகும். இதைச் செய்யத் தவறினால் பிற்காலத்தில் வாரிசுகளுக்குள் தேவையற்ற மனக்கசப்புகளுக்கு வழி வகுக்கும்.

மேற்குறிப்பிட்ட வழிகளை ஒருவர் சரியாகப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் தனது ஓய்வுக்காலத்தை நிம்மதியாகக் கழிக்க முடியும்.

                                                                              --நன்றி  ... விகடன்

Saturday, June 13, 2015

வானவில் மற்றும் ஔவையார் Vanavil Avvaiyar  Font களை Android மொபைலில் படிக்க 

  முதலில் WPS Office with PDF மென்பொருளை Google Play Store க்கு சென்று Install செய்துகொள்ளவும்

  பின்னர் Vanavil Avvaiyar Font ஐ தரவிறக்கம் செய்யவும்  அல்லது உங்களுக்குத் தேவையான தமிழ் Font ஐ தரவிறக்கம் செய்து கொள்ளவும்

Click here to download Vanavil Avvaiyar Font

WPS Office with PDF மென்பொருள் தங்களின் Android Phone ல் எந்த நினைவகத்தில் Install செய்யப்பட்டுள்ளது (Internal Memory / Memory Card ) என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.

பின்னர் File Manager ஐ Open செய்யவேண்டும்.  அதில் உள்ள Settings ல் Show Hidden Files என்பதை On செய்யவேண்டும்.

Vanavil Avvaiyar  Font அல்லது உங்களுக்குத் தேவையான தமிழ் Font உள்ள Folder ஐ Open செய்து பிறகு Font ஐ Copy  செய்து கொள்ளவும்.

WPS Office with PDF மென்பொருள் எங்கு Install செய்யப்பட்டுள்ளதோ (Internal Memory / Memory Card ) அதைத் திறக்கவும்.  கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து Folder களை ஒன்றன்பின் ஒன்றாகத் திறக்கவும்.

Android

data

cn.wps.moffice_eng

.cache

KinsoftOffice

.fonts

பின்னர் Copy செய்த Font ஐ Paste செய்யவும்.

Paste செய்த Font ஐ இரண்டு முறை Tap செய்யவும்.

கடைசியாக தங்களுடைய Phone ஐ Reboot செய்யவும்.

பின்னர் தங்களுடைய அனைத்து ஆவணங்களை WPS Office கொண்டு Open செய்யவும்...



ஊதிய உயர்வு குறித்த அரசாணைகள்




ஊதிய உயர்வு குறித்த  பழைய அரசாணைகள் download செய்ய இங்கு click செய்யவும்..
ஆண்கள் பள்ளிக்கு ஆண் ஆசிரியர்,பெண்கள் பள்ளிக்கு பெண் ஆசிரியை -அரசாணை


   ஆண்கள் மட்டும் பயிலும்  பள்ளிக்கு ஆண் ஆசிரியர் நியமனம் ,பெண்கள் மட்டும் பயிலும்  பள்ளிக்கு பெண் ஆசிரியை நியமனம் என்பதற்கான அரசாணை பெற
இங்கு கிளிக் செய்யவும்.
பணிபதிவேடு பராமரிப்பு 


    அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு தங்களது துறை சார்ந்த அனைத்து விவரங்களும் பதிவு செய்ய அவர்களது அலுவலகங்களில் பணிபதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.அந்த பணிபதிவேட்டில் பதிவுகளை மேற்கொள்வது குறித்த சில தெளிவுரைகளை அரசு வெளியிட்டுள்ளது.

 பணிபதிவேடு பராமரிப்பது பற்றிய அரசாணையை காண இங்கு க்ளிக் செய்யவும்..

Monday, June 8, 2015

நூடுல்சில் காரீயம் சேர்ந்தால் என்ன?
                                                                                                                               
  பிரபல நிறுவனம்  நெஸ்லே  தயாரிக்கும்  மேகி நூடுல்ஸில் குறிப்பிட்ட வேதிப் பொருள் அதிக அளவில் இருந்ததுடன் அதில் காரீயமும் (lead) கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.  அதைத் தொடர்ந்து தமிழ்நாடு உட்ப்ட சில மாநிலங்களில் அதன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது   மேலும் பல மாநிலங்களில் அந்த நூடுல்ஸ் சாம்பிள்கள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் பற்றி செய்தி வெளியிட்ட சில தமிழ் டிவி சேனல்கள் காரீயம் வேறு, ஈயம் வேறு என்பது தெரியாமல் நூடுல்ஸ் சாம்பிள்களில் ஈயம் இருந்ததாகத் தெரிவித்தன. ஒரு பத்திரிகை  lead  என்பதை அலுமினியம் என்று மொழி பெயர்த்தது.

இன்னொரு தமிழ்ப் பத்திரிகையோ உடலில் ஈயம் கலந்தால் ஆபத்து என்பதாக செய்தி வெளியிட்டது. ஈயத்தையும் காரீயத்தையும் குழப்பிக் கொண்டதால் ஏற்பட்ட வினை இது. Lead  என்றால் ஈயம் என்று தவறாகப் புரிந்து கொண்டதே அதற்குக் காரணம்.




  உண்மையில் ஈயம் வேறு, காரீயம் (Lead) வேறு, அலுமினியம் வேறு. ஈயம் என்பது  Tin  ஆகும். ஈயம் உடலுக்கு கெடுதல் செய்யக்கூடியது அல்ல.  Lead  அதாவது காரீயம் கெடுதல் செய்வதாகும்.

காரீயம் நுண்ணிய துகள் வடிவில் காற்றில் கலந்து சுவாசிக்கும் போது உடலுக்குள் சென்றாலும் சரி, தண்ணீர் அல்லது உணவில் கலந்து உடலுக்குள் சென்றாலும் சரி உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும்

காரீயம்   குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கும். காரீயம் காரணமாக மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். உடல் வளர்ச்சி பாதிக்கப்படும்.

பொதுவில் காரீயம் சிறு நீரகம், கல்லீரல் போன்று உடலில் பல உறுப்புகளையும் பாதிக்கக்கூடியதாகும். எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி பாதிக்கப்படும். சில தீங்கான பொருட்கள் உடலுக்குள் சென்றால் காலப் போக்கில் வெளியே கழித்துக் கட்டப்படும். ஆனால் காரீயம் உடலுக்குள் செல்லச் செல்ல மேலும் மேலும் சேர்ந்து கொண்டே போகும்.

  இப்போது ஈயத்துக்கு வருவோம். எவர்சில்வர் எனப்படும்  Stainless Steel  வந்ததற்கு முன்னர் வீடுகளில் சமையலுக்கு பித்தளைப் பாத்திரங்களே பயன்படுத்தப்பட்டன. பித்தளைப் பாத்திரங்களில் உணவை வைத்தால் கெட்டு விடும். ஆகவே பித்தளைப் பாத்திரங்களின் உட்புறத்தில் ஈயம் பூசிப் பயன்படுத்தினர். அந்த நாட்களில் ஈயம் பூசுவதற்கு என்றே தொழிலாளர்கள் இருந்தனர். "ஈயம் பூசலையா" என்று கூவியபடி தெருவில் செல்வர். முற்றிலும் ஈயத்தால் ஆன பாத்திரங்களும் (ஈயச் சொம்பு) இருந்தன.

இதல்லாமல் ஈயம் பூசப்பட்ட தகர டப்பாக்களில் பல பொருட்களும் அடைக்கப்பட்டு விற்கப்பட்டன. ஈயம் உடலுக்கு கெடுதல் செய்கிற உலோகமே அல்ல.

ஆனால் காரீய உலோகம் நிச்சயம் கெடுதல் செய்யக்கூடியது. சிறிதளவு காரீயம் சேர்ந்தால் பரவாயில்லை என்று கூடச் சொல்ல முடியாது. எந்த உணவுப் பொருளிலும் மிகச் சிறு அளவுக்குக் கூட காரீயம் இருத்தல் ஆகாது.

ஒரு காலத்தில் வாஷ் பேசின் குழாய், தண்ணீர் குழாய் போன்றவற்றை செய்ய காரீயம் பயன்படுத்தப்பட்டது.  விளையாட்டுப் பொருட்கள் காரீயம் கலந்த பெயிண்ட் பூசப்பட்டவையாக இருந்தன. டார்ச் செல்கள் காரீயத்தில் செய்யப்பட்டவையாக இருந்தன.

இதல்லாமல் பெட்ரோலில் குறிப்பிட்ட காரணத்துக்காக சிறிதளவு காரீயம் சேர்க்கப்பட்டது. காரீயம்  தீங்கானது என்பது தெரிய வந்ததும் பெட்ரோலில் காரீயத்தைக் கலக்கக்கூடாது என்று மேலை நாடுகளில் தடை விதிக்கப்பட்டது.

அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்தியா போன்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. உலகில் இன்னமும் சில நாடுகளில் காரீயம் கலந்த பெட்ரோல் விற்கப்படுகிறது.

ஒரு கால கட்டத்தில் காரீயம் எந்த அளவுக்கு உலகைப் பாதித்தது என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கூறலாம். அமெரிக்க விஞ்ஞானி கிளேர் பேட்டர்சன் பூமியின் வயதைக் கணக்கிட மிக வயதான பாறையைத் தேடினார். ஆனால்  அவர் உலகில் எந்தப் பாறையைத் தேர்ந்தெடுத்தாலும் அது காரீயத் துணுக்குகள் படிந்ததாக இருந்தது. உலகில் கார்களிலிருந்து வெளிப்படும் புகையில் அடங்கிய காரீயத் துணுக்குகள் பூமியின் பாறைகளில் படிந்திருந்ததே காரணம். கடைசியில் அவர் விண்ணிலிருந்து விழுந்த விண்கல்லை வைத்துத் தான் பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள் என்று 1956 ஆம் ஆண்டு வாக்கில் கண்டுபிடித்தார்.

அதே பேட்டர்சன் பின்னர் பெட்ரோலில் காரீயத்தைத் கலப்பதைத் தடுக்க வேண்டும் என சர்வ வல்லமை படைத்த பன்னாட்டு பெட்ரோலிய எண்ணெய்க் கம்பெனிகளுக்கு எதிராக பெரிய இயக்கத்தைத் தொடங்கி அதில் வெற்றி பெற்றார்.

பெயிண்டுகளில்   குறிப்பிட்ட அளவுக்கு மேல் காரீயம் இருக்கக்கூடாது என்று அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் தடை உள்ளது. இது கண்டிப்புடன் அமலாக்கப்படுகிறது. இந்தியாவில் அப்படி இல்லை.

பெயிண்டுகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் காரீயம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என வெறும் அறிவுரை மட்டும் கூறப்பட்டுள்ளது. நடைமுறையில் அறிவுரை கூறப்பட்ட அளவை விட பல மடங்கு காரீயம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட ஜார்ஜ் பவுண்டேஷன் என்னும் அமைப்பு காரீய ஆபத்து பற்றிக் கரடியாகக் கத்தி வருகிறது. 1995 ஆண்டிலிருந்து செயல்படும் அந்த அமைப்பு உடல் நலத்துக்கான செயிண்ட் ஜான்ஸ் அகாடமியுடன் சேர்த்து பல நகரங்களிலும் குழந்தைகளிடம் ரத்த பரிசோதனை நடத்தி வந்துள்ளது.

 பல நகரங்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் இப்படி நடத்தப்பட்ட ரத்த சோதனைகளில் அவர்களில் 51 சதவிகிதத்தினரிடம் ரத்தத்தில் காரீய அளவு அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க, குறிப்பிட்ட பிராண்ட் நூடுல்ஸ் மீது தடை விதிப்பதால் பிரச்சினை தீர்ந்து விடப் போவதில்லை. இந்த நூடுல்ஸ் பற்றிய டிவி விளம்பரங்களில் நடித்த பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாலும் பிரச்சினை தீரப் போவதில்லை.

 இவற்றையெல்லாம் தடுப்பதற்கு ஒருங்கிணைந்த கடுமையான சட்டங்கள் இல்லை .மத்திய அரசிலிருந்து முனிசிபாலிடி வரை ஒவ்வொரு அதிகார அமைப்பும் வெவ்வேறான அதிகாரங்களைப் பெற்றுள்ளன. அகில இந்திய அளவில்  நாடு முழுவதுக்குமாகப் பொருந்துகிற தகுந்த ஏற்பாடு இல்லை. ஆகவே தான் ஒவ்வொரு மாநிலமும் நூடுல்ஸை சோதிக்க தனித்தனியே நடவடிக்கை எடுக்கிறது. .


தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் 

   வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி,

அதற்குரிய வழிமுறைகள் என்ன?

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:

* தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.

* விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.


தேவையான ஆவணங்கள்:

 பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

 சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.

 பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.

 தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.

மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.

கட்டணம்,
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.

தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ.65.

செலுத்தும் முறை:

அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.

அஞ்சல் மூலம் செலுத்த: 

உதவி இயக்குநர் (வெளியீடுகள்),
எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,
சென்னை-600 002
என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.

பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.


விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:

பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.

பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.

பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.

பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.

நிபந்தனைகள்:

விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.

பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.

இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

எப்படி பெறுவது?

 அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.

தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.

விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:

 சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.

விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:

உதவி இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்

http://www.stationeryprinting.tn.gov.in/servicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.
http://www.stationeryprinting.tn.gov.in/forms.htmவிண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்..

Monday, June 1, 2015

மிகக் குறைந்த பிரீமியத்தில் ஒரு இன்சூரன்ஸ் திட்டம்
இந்த வருடம் பிரதம மந்திரியின் பெயரால் ஒரு இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


நல்ல பயனுள்ள திட்டம் என்பதால் இங்கு பகிரப்படுகிறது..



  இன்சூரன்ஸ் என்றால் முதலீட்டையும் காப்பீடையும் சேர்த்து குழப்பும் ஒரு வழக்கம் நமக்கு இருக்கிறது.அந்த வகையில் இது முழுக்க ஒரு காப்பீடு திட்டம் மட்டுமே. அதாவது இதில் கட்டும் பிரீமியம் நமக்கு திருப்பி வழங்கப்பட மாட்டாது.உயிரிழப்பு மற்றும் விபத்துக்கள் நடைபெறும் போது மட்டுமே காப்பீட்டு தொகை வழங்கப்படும்.






Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana Scheme திட்டம்..

  வருடத்திற்கு 330 ரூபாய் பிரீமியம் கட்டினால் இரண்டு லட்ச ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படும். அதாவது மறைவிற்கு பிறகு குடும்பத்தினரிடம் இந்த தொகை வழங்கப்படும்.55 வயது வரை மட்டுமே இந்த காப்பீடு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் இணைய 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.


Pradhan Mantri Suraksha Bima Yojana திட்டம்


 அதே போல் வருடத்திற்கு 12 ரூபாய் கட்டினால் விபத்து காப்பீடு திட்டமும் இந்த பிரிவின் கீழ் வருகிறது.இதிலும் இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு பெறலாம். 70 வயது வரை இழப்பீடு பெறலாம்.


    இந்த இரண்டு திட்டங்களில் கட்டும் தொகையை 80C என்பதன் கீழ் வரி விலக்கிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  மே 31, 2015 க்குள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 31 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

நமது வங்கி கணக்கு எண்ணைக் கொடுத்தால் ஒவ்வொரு வருடமும் தானாகவே பிரீமியம் பிடித்தம் செய்யப்படும்.

இந்த திட்டத்தில் இணைய ஆதார் எண் அவசியமாகிறது.

LIC போன்றவற்றுடன் SBI போன்ற வங்கிகளும் இந்த திட்டத்தினை வழங்குகின்றன.

மிகக் குறைந்த பிரீமியம் என்பதுடன் அரசின் திட்டம் என்பதால் இதில் இணைந்து கொள்ளலாம்...
பாஸ்போர்ட்: அரசு ஊழியர்களுக்கு தடையின்மை சான்று கட்டாயமல்ல


  அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு தடையின்மைச் சான்று அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.


இது குறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

   பொதுத்துறை மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது தடையின்மைச் சான்றிதழ் அளித்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. சில அரசு அலுவலகங்களில் தடையின்மைச் சான்று பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய வெளியுறவுத் துறை, தடையின்மைச் சான்றுக்குப் பதிலாக புதிய நடைமுறையை பின்பற்றக் கூறியுள்ளது.

  இதன்படி அரசு ஊழியர்கள் தங்களது அலுவலகத்தில் தடையின்மைச் சான்று வழங்கும் அதிகாரியின் முகவரிக்கு பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதை முன் அறிவிப்பாக அதற்குரிய படிவத்தில் தெரியப்படுத்த வேண்டும். அதன் நகலை பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தால் போலீஸ் அறிக்கை பெற்று பாஸ்போர்ட் வழங்கப்படும்.  ஊழியருக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் ஆட்சேபனை இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் சென்று தெரிவிக்க வேண்டும். பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும். இதற்குரிய படிவத்தை பாஸ்போர்ட் அலுவலக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.