ரத்தத்தில் கொழுப்பு அதிகமாதல்(Dyslipidemia)
கொழுப்பு என்பது உடலுக்கு மிகவும் அவசியமான, உணவிலிருக்கும் ஒரு முக்கியமான மூலக்கூறு. ஒரு கிராம் கொழுப்பு 9 கலோரி சக்தி தரும் (கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தானது 4½
கலோரியை மட்டுமே தரும்). கொழுப்புச் சத்தானது
கொழுப்பு அமிலங்களாக (Fatty acids) கிளிசரால் ஆகவும் கிளைகோஜென் ஆகவும்
சேமித்து வைக்கப்படுகிறது. இப்படியாக கொழுப்பு, உடலில் சேமித்து வைக்கும் தன்மை உடையதாகவே உள்ளது. உடனடி எனர்ஜி
தேவைக்கு அவசியமான மாவுச்சத்தைவிட அதிகப்படியான மாவுச்சத்தும் (அரிசிப்
பதார்த்தங்கள்) கொழுப்பாகவே சேமிக்கப்படுகிறது. அதனால், உணவில் கொழுப்பு அதிகமாக இருப்பது மட்டுமே பிரச்னை அல்ல. தமிழக
மக்களின் உணவில் அரிசிப் பதார்த்தங்கள், பெரிய
வாழைப்பழம், மாம்பழம், இனிப்பு போன்ற மாவுச்சத்து அதிகமாக இருப்பதும் இதற்குக் காரணமாகலாம்.
கொழுப்பு உடலுக்கு சக்தியையும் சூட்டையும் தருவது மட்டுமல்ல... சிறு
உறுப்புகளையும் நரம்புகளையும் பாதுகாக்கும் உறைகளுக்கும் அவசியம். வைட்டமின்கள் A,
D, E - K போன்ற முக்கிய மான வைட்டமின்கள் கொழுப்பில்
கரையக்கூடியவை.
இதனாலும், கொழுப்பு மிக முக்கியமானது. அட்ரீனல் மற்றும் இனப்பெருக்க
ஹார்மோன்களுக்கும் கொழுப்பு அமிலங்கள் மிக முக்கியமானவை. கொழுப்பில் கரையும்
வைட்டமின்களை வைட்டமின் தி என்று கூறுவார்கள். இவை குறைந்தால் பலவித சரும நோய்கள்,
பித்தப்பை கல், தலைமுடி உதிர்தல், வளர்ச்சி குறைவு, மலட்டுத்தன்மை, சிறுநீரக ப்ராஸ்டேட் மற்றும் மாதவிடாய்
பிரச்னைகள் உருவாகும். குடலில் வைட்டமின் ஙி உருவாவதற்கும் கொழுப்புச்சத்து
அவசியம். மூளையின் நினைவாற்றலுக்கும் கொழுப்பு மூலக்கூறுகள் முக்கியம். பழங்கள்
மற்றும் வறுத்த, பொரித்த மாமிச மற்றும்
பருப்புகளிலிருந்து கிடைக்கும் இந்தக் கொழுப்பு, அளவுக்கு அதிகமாகும்போது ஏற்படும் பிரச்னைகளே டிஸ்லிபிடேமியா.
ஒருவரது உணவில் 65% மாவுச்சத்தும் 25% புரதச்சத்தும் 5-10% கொழுப்புச்சத்தும் இருந்தாலே
போதுமானது. இவற்றோடு, காய்கறிகள், பழம், பருப்பு (Nuts) என இருப்பதையே சமச்சீர் உணவு என்கிறோம். திடீர் உணவு (Fast
Food), வாரக்கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில்
கெட்டுப்போகாமல் இருக்கும்படி தயாரிக்கப்படும் உணவு (Frozen Food), ஹோட்டல் உணவுபோலவே வீட்டுச் சமையலில் எண்ணெய் அதிகமாக்கி வறுத்தவை (Fried
food), அதிகம் பொரித்த உணவுகள் (Deep Fried
Food), நெய்யும் இனிப்பும் அதிகமுள்ள உணவுகள்
ஆகியவையும் கூட, இப்போது பாரம்பரிய உணவுமுறையிலும்
ஊடுருவி விட்டது. இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கச் செய்யும் வீட்டு
உபகரணங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு போன்றவை யும் சேர்ந்து, கொழுப்பை அதிகரித்து, எமனாகிறது.
லைப்போபுரோட்டீன்களை நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு எனப் பிரிக்க முடியும்.
1. TriglyceridesN
< 150 ஈரலிலோ, கொழுப்பு நிறைந்த உணவிலிருந்தோ, உடலுக்குக் கிடைக்கும் டிரைகிளிசைரைடு, VLDL, லைப்போபுரோட்டீனுடன் இணைந்து உடலின் பல பகுதிகளுக்கு எடுத்துச்
செல்லப்பட்டு, ரத்தக் குழாய்களில் மாற்றத்தை
ஏற்படுத்தும்... முக்கியமாக இதய ரத்தக்குழாய்களில்!
2 . LDL (Low Density
Lipid) லைப்போபுரோட்டீன் மூலக்கூறுகளின் எடையைப்
பொறுத்து, LDL (Low Density Lipoprotein), VLDL (Very Low Density
Lipoprotein), HDL (High Density Lipoprotein) எனப்
பிரிக்கிறோம். LDL எனப்படுபவை, பல்வேறு புரதங் களாலும் (லைப்போபுரோட்டீன்) ஆன கொழுப்பு மூலக்கூறுகளை
தண்ணீரில் கரையும் வண்ணம், ரத்தத்தில் எடுத்துச் செல்லும் கொழுப்பு
மூலக்கூறாகும். ரத்தக்குழாய்களில் கொழுப்பு மிக அதிகமாக பரவ வழி ஏற்படுத்திக்
கொடுக்கும் என்பதால் இதை கெட்ட கொழுப்பு என்பர்.
3 . VLDL (Very Low Density Lipid) VLDL எளிதாக LDLலாக மாறிவிடும். VLDL, டிரைகிளிசரைடு போன்ற லைப்போபுரோட்டீன்களை மற்ற இடங்களுக்கு எடுத்துச்
செல்லும்.
4 . HDL (High Density Lipid)> 40 HDL மூலக்கூறுகள் கொழுப்பை செல்களிலிருந்தும், ரத்தக்குழாய் சுவர் திசுக்களிலிருந்தும், ரத்த ஓட்டத்தின் மூலம் வெளியே எடுத்துச் செல்லுவதால், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படராமல் பார்த்துக் கொள்கிறது.
அதனால்தான், இது நல்ல கொலஸ்ட்ரால் எனப்படுகிறது.
இந்தியர்களுக்கு இது குறைவான அளவில் இருப்பதுதான் பிரச்னையே. இதைக் கூட்டும் ஒரே
வழி - உடற்பயிற்சி மட்டுமே. வேறு எதனாலும் முறையாகக் குறைக்க முடியாது. Total
Cholesterol முன்பெல்லாம் 220க்குக் குறைவாக 'டோட்டல் கொலஸ்ட்ரால்' என்பதை மட்டுமே அளவீடாகக் கொண்டு, 'கொழுப்பு அதிகமா' என்பதைச் சொல்லி வந்தோம். இப்போதோ,
LDL , VDL, HDL ஆகிய 3 அளவுகளையும் உள்ளடக்கியதே கொலஸ்ட்ரால் என்பதால், இதில் எது அதிகம் என்பதைப் பொறுத்து, அதற்கு என்ன மருந்து தரவேண்டும், அது அதிகமாக இருந்தால் என்ன தீங்கு செய்யும் என்பதை அறியத்
தருகிறோம். அதனால், Lipid ProfileTest மூலம் மட்டுமே
உடலில் கொழுப்புச்சத்து அறிந்து மருத்துவம் தரப்படுகிறது.மொத்தத்தில், HDL
40க்கு அதிகமாக இருக்க வேண்டும். இது
உடற்பயிற்சியினால் மட்டுமே சாத்தியம். உணவினாலோ, மருந்தின் மூலம் மட்டுமோ சாத்தியமில்லை. Total
Cholesterol,Triglyceride, LDL , VLDL ஆகியவை கட்டுபாட்டுக்குள் வர உணவுடன்
உடற்பயிற்சி மிக மிக அவசியம். இவை அதிகமாவதற்கு பாரம்பரியம் ஒரு காரணம்.
இருந்தாலும், ஒவ்வொரு நாள் உணவிலும் 5 சதவிகிதம் கொழுப்பு, நிறைய காய்கறிகள், குறைவான அளவில் பழம் ஆகியவை அவசியம். மிகக்குறைவான ஆல்ஹகால் மற்றும்
தவிர்க்கப்பட்ட புகைப்பழக்கம் ஆகியவை நல்லது. எடை குறைப்பு மற்றும் ரத்தக்கொதிப்பு,
சர்க்கரை நோய்,சரியான கட்டுப்பாடு என்பது மிக அவசியம்.
LLA Lipid Lowering
Agents Statins எனப்படுபவை கொழுப்பையும் அதன்
மூலக்கூறுகளையும் குறைக்கும் மருந்துகள். ஸ்டாடின்ஸ் காளான்களிலிருந்து
எடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட மருந்து. இப்போது வேதியியல் பொருட்களாக உற்பத்தி
செய்யப்படுகிறது. Atorvastatin Rosuvastatin மருந்துகள் கொலஸ்ட்ரால்களைக் குறைக்கும். இவை கொலஸ்ட்ரால்
உற்பத்தியைக் குறைப்பதுடன், VLDLயைக் குறைத்து, அதன்மூலம் LDL உற்பத்தியையும் குறைக்கும்.
ஸ்டாடின்கள் ரத்தக் குழாய்களில் ஏற்படும் விரிவுகள், பிளவுகளையும் சரி செய்து, கொழுப்பு
படர்வதையும் தடுக்கின்றன. ஸ்டாடின்களின் பக்கவிளைவாக கண் பாதிப்புகளோ, நரம்பு மண்டல பாதிப்புகளோ, ஈரல் பாதிப்போ,
தசைகளில் பாதிப்போ வரக்கூடும். அதனால், ஸ்டாடின் மருந்துகள் உட்கொள்ள ஆரம்பித்தவுடன் பாதிப்புகளைக்
கண்காணித்து, மருத்துவரிடம் கூறி, தேவையான பரிசோதனைகளை செய்துகொள்வது அவசியம்.ஃபிப்ரேட்ஸ் ( Fibrates)
மருந்துகளால் டிரைகிளிசரைடு குறைக்கப்படுகிறது.
டிரைகிள சரைடு உற்பத்தியையும் குறைத்து, டிரைகிளி சரைடு,
லைப்போபுரோட்டினையும் உடைத்து, அளவைக் குறைக்கும் சக்தி வாய்ந்தது இது. டிரைகிளிசரைடு குறையும்போது
பிஞிலி கூடுவதற்கான வாய்ப்பு உண்டு. மிக அதிகமான அளவில் டிரைகிளிசரைடு கூடி
இருப்பதை Hypertriglyceridemia என்கிறோம். இதற்கு ஸ்டாடின் மற்றும்
ஃபிப்ரேட்ஸ் சேர்த்து தரப்படுகிறது. ஃபிப்ரேட்ஸில் மிகக்குறைவான பக்க விளைவுகளே
உண்டு. VLDL, LDL இரண்டையும் குறைப்பதற்கு Nicodin
Acid தரப்படுகிறது. இவற்றுக்குப் பக்க விளைவுகள்
அதிகம்.
40 வயதுக்கு மேலே வரும் பருமன் (Obesity), நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, கொழுப்பு ரத்தத்தில் அதிகமாவது ஆகியவற்றைக் கட்டுப்பாட்டுக்குள்
வைத்து இருந்தாலே போதும்... மருந்துகளுடன், மருத்துவர் ஆலோசனையுடன் ஒவ்வொருவருக்குமான பரிசோதனை விவரங்களுடன்
அந்தந்த நோய்க்கான நம்பர்களை கட்டுப்பாட்டுக்குள் (GOAL) வைத்திருப்பதே இதற்கு வழி. 80 வயது வரை மற்ற
நோய்கள் வராத, வந்த நோய்கள் நம்மை முடக்கிப் போடாத
வாழ்க்கை நடைமுறை மாற்றங்களே (Life Style Modification) நம்மை வாழ வைக்கும். நோய் என்று வருமுன்பே பூமியிலே கால்
பதியுங்கள்...
சுத்தமான காற்றைச் சுவாசித்து, மற்ற மனிதர்களையும் நேரில் கண்டு, உடற்பயிற்சி செய்யுங்கள்... .... உடல் அசைவே உயிர்! Movemet
is life!
நன்றி : வலைப்பக்க நண்பர்கள்
