1

இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பல்வேறு நண்பர்களிடமிருந்தும், பல்வேறு இணைய தளங்களிலும், செய்திதாள்கள் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் இங்கு தொகுத்து பகிரப்படுகிறது.. எனவே இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தன்மை கூற இயலாது.. இத்தகவல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது....

Monday, August 3, 2015

இரத்த தானம் செய்ய தேவையான தகுதிகள்


இரத்ததானம் பற்றிய சிறு விளக்கம், 


"இரத்தம தானம் செய்ய தேவையான தகுதிகள் ",


🔺18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும் இரத்தம் தானம் செய்யலாம் .

🔺நமது எடை 50கிலோவிற்கு குறையாது இருத்தல் வேண்டும்.

🔺 உடலின் ஹீமோகுளோபின் அளவு 12.5. கிராம் இருத்தல் வேண்டும் .

🔺 இரத்த அழுத்தம் இயல்பு நிலையில் இருக்கவேண்டும் .(100-140 மேல் அளவு ,60-90 கீழ் அளவு )

🔺 மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்தம் தானம் செய்யலாம் .





"இரத்த தானத்தை தவிர்க்க வேண்டியவர்கள் "

🔺24 மணி நேரத்திற்கு முன் மது அருந்தி இருத்தல் கூடாது .

🔺பெரிய அறுவை சிகிச்சை செய்த 6 மாதத்திற்குள்ளோ,
சிறிய அறுவை சிகிச்சை செய்த 3மாதத்திற்குள்ளோ இரத்த தானம் செய்யக்கூடாது .

🔺 மலேரியா ,டைஃபாய்டு சிகிச்சை எடுத்த 3 மாதத்தில் இரத்த தானம் செய்யக்கூடாது

🔺மஞ்சள்காமாலை சிகிச்சை எடுத்த 6 மாதத்திற்கு இரத்த தானம் செய்யக்கூடாது .

🔺ஆறு மாதத்திற்குள் பச்சை குத்துதல் ,பல் பிடுங்கி இருத்தல் கூடாது.

🔺பெண்கள் கருவுற்று இருக்கும் காலத்திலும் ,குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும், மாதவிடாய் காலங்களிலும் இரத்த தானம் செய்தல் கூடாது.

 பொது குறிப்புகள் 

🔺நம் ஒவ்வொருவர் உடலிலும் தோராயமாக 5 லிட்டர் இரத்தம் இருக்கும்.

🔺இரத்தம் தானம் செய்யும்போது உடலில் இருந்து எடுப்பது 350 மில்லி லிட்டர் மட்டுமே.

🔺நாம் தானம் செய்த 350 மி.லி இரத்தம் அடுத்த 24 மணி நேரத்தில் புதிதாக நமது உடலில் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும் .

🔺இரத்தம் தானம் செய்ய 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

🔺இரத்தம் தானம் செய்த உடன் வழக்கம்போல் அன்றாட வேலைகள் செய்யலாம்.

இவற்றை நாம் மனதில் வைத்து உதவி செய்வோம்.



🎈உதிரம் கொடுப்போம், உயிர் கொடுப்போம்.🎈