15G மற்றும் 15H படிவங்கள்... சிக்கல் இல்லாமல் தாக்கல் செய்வது எப்படி?
இன்றைய தேதியில் வருமான வரிச் செலுத்துவோரிடம் வரிச் சேமிப்பு முதலீடு பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்துக் கொண்டிருக் கிறது. இருப்பினும் புதிதாக வரும் திருத்தங்கள் மற்றும் மாறுதல்கள் காரணமாகப் பலருக்கு சரியான விவரங்கள் தெரியாமல் அல்லது பழைய விவரங்களை வைத்துக்கொண்டு வருமான வரியைத் தாக்கல் செய்யும்போது தவறாகப் படிவத்தைத் தாக்கல் செய்து, பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு அபராதம் செலுத்துகிறார்கள்.
இப்படி செலுத்தும் அபராத தொகை, நாம் வருமான வரி செலுத்தியிருக்க வேண்டிய தொகையைவிடப் பலமடங்கு அதிகமாக இருப்பதே. இதற்கு நல்லதொரு உதாரணம்தான் பார்ம் 15G மற்றும் 15H படிவங்களைத் தவறாக சமர்ப்பிப்பது.
பெரும்பாலான வரிதாரர்கள் இந்தப் படிவங்களைப் பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்ளாமல் படிவத்தைத் தாக்கல் செய்து பிரச்னைகளில் சிக்கிக்கொள் கிறார்கள். இதுமாதிரியான பிரச்னைகளில் சிக்காமல் இந்தப் படிவங்களை எப்படித் தாக்கல் செய்யவேண்டும், யார் தாக்கல் செய்யலாம் என்று விளக்குகிறார் ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார்.
ஏன் இந்த ஃபார்ம்?
“வங்கியில் செய்யப்பட்டுள்ள டெபாசிட்கள் (எஃப்.டி மற்றும் ஆர்.டி) மூலம் வருடத்துக்கு 10,000 ரூபாய்க்குமேல் வட்டி வருமானம் கிடைத்தால், அந்தத் தொகைக்கு 10% டிடிஎஸ் (Tax Deductable at Source) வசூலிக் கப்படும். வங்கியிடம் பான் எண்ணை தராமல் இருந்தால் டிடிஎஸ் 20% வசூலிக்கப்படும். வங்கி வட்டியைத் தவிர, வேறு வருமானம் இல்லாதவர்கள், இந்த டிடிஎஸ் வரியிலிருந்து விடுபட, வங்கிக் கிளையில் 15G/15H படிவத்தைப் பூர்த்திச் செய்து தரவேண்டும்.
அதேபோல, கடனுக்குத் தந்திருக்கும் தொகை, கடன் பத்திரங்கள், பாண்டுகள், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள், தேசியப் பாதுகாப்பு திட்ட பத்திரங்கள், நிறுவன டெபாசிட்டுகள் ஆகியவைகள் மூலம் கிடைக்கும் வட்டித் தொகை ஆண்டுக்கு 5,000 ரூபாய்க்குமேல் இருந்தால், அவையும் வருமான வரிக்கு உட்பட்டவைகளே. இந்த வகையில் கிடைக்கும் வருமானத்துக் கும் 15G/15H படிவங்களைப் பூர்த்திச் செய்யலாம்.
இந்தப் படிவத்தைப் பூர்த்திச் செய்து தருவதால் டிடிஎஸ் வரியிலிருந்து விடுபடலாமே தவிர, வரிச் சலுகை பெற முடியாது. இந்த 15G/15H படிவத்தைப் பூர்த்திச் செய்து தருவதால், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு (வருமான வரி வரம்புக்கு உட்பட்ட வருமானம் இருந்தா லும்) விலக்குக் கிடையாது.
இதே 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்கள் மட்டும் 15H படிவங்களைத் தாக்கல் செய்வதை வைத்து வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாமல் இருக்கலாம். அதுவும் அடிப்படை வருமான வரி வரம்புக்கு உட்பட்ட வருமானத்தில் இருக்க வேண்டும்.
இந்தப் படிவங்களை இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். என்ஆர்ஐ கள் பயன்படுத்த முடியாது.
15G படிவம் யாருக்கு?
a. தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பம் மற்றும் கூட்டு நபர்கள் (அசோசியேஷன் ஆஃப் பெர்சன்ஸ்) இந்தப் படிவங்களைப் பயன்படுத்த முடியும். 60 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் 15G படிவத்தைப் பயன்படுத்தலாம்.
b. கடந்த நிதியாண்டு வருமான வரி செலுத்தாத நபர்கள் மட்டுமே இந்தப் படிவங்களை நிரப்பி டிடிஎஸ்-ஐ தவிர்க்கலாம்.
c. ஒருவரின் வரிக்கு உட்பட்ட மொத்த வருமானம் ஆண்டுக்கு வருமான வரி அடிப்படை வரம்பான ரூ.2.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் 15G படிவத்தைப் பூர்த்திச் செய்யலாம்.
15H படிவம் யாருக்கு?
a.60 வயது பூர்த்தி அடைந்த வர்கள் 15H படிவத்தைச் சமர்ப்பிக்கலாம்.
b.மூத்த குடிமக்களுக்கான (60 முதல் 80 வயது வரை) அடிப்படை வரி வரம்பான ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வரிக்கு உட்பட்ட மொத்த வருமானம் இருந்தால் 15H படிவத்தைத் தாக்கல் செய்து டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்க்கலாம்.
அதேபோல, மிகவும் மூத்த குடிமக்கள் (80 வயதுக்கு மேல்) 5 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் இருந்தால், 15H படிவத்தைச் சமர்ப்பித்து டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்க்கலாம். நிதியாண்டின் எந்தத் தேதியில் 60 வயது அல்லது 80 வயது பூர்த்தி அடைந்தாலும் அதற்கான சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எப்போது, எங்கு தாக்கல் செய்வது?
இந்தப் படிவத்தை நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் செலுத்தினால்தான் அந்த ஆண்டு டிடிஎஸ் பிடித்தத் திலிருந்து விடுபட முடியும்.
ஒரு வங்கிக் கிளையில் நமக்கு ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் இருக்கிறது. அதன் மூலம் நமக்கு ஆண்டுக்கு 12% வட்டியில் 12,000 ரூபாய் வட்டியாகக் கிடைக்கிறது என்றால், அந்தக் கிளையில் 15G/ 15H படிவத்தைப் பூர்த்திச் செய்து பான் எண்ணுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இப்படி எத்தனை வங்கிகளில் டெபாசிட்கள் இருந்தாலும் வங்கிக்குத் தனித் தனியாக 15G/15H படிவங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். ஒரு வங்கியின் பல கிளைகளில் டெபாசிட் போட்டிருந்தால், ஏதாவது ஒரு கிளையில் இந்தப் படிவத்தைக் தந்தால் போதும்.
இந்தப் படிவத்தைப் பூர்த்திச் செய்து வங்கியிடம் சமர்ப்பித்த தற்குச் சான்றாக வங்கியிட மிருந்து அத்தாட்சிகளைக் கண்டிப்பாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.
அதேபோல, ஒரு நிறுவனத்தின் கடன் பத்திரங்கள், பாண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்திருந்து அதற்கு வட்டி வந்துகொண்டிருந்தால் நாம் முதலீடு செய்த நிறுவனத்தின் இணையம் மூலமாக 15G/15H படிவத்தைப் பூர்த்திச் செய்யலாம்.
அப்படி இணையத்தில் பூர்த்திச் செய்ய முடியாதவர்கள் பூர்த்திச் செய்த 15G/15H படிவத்தை நிறுவனத்தின் தலைமையகத்துக்குப் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். நீங்கள் 15G/15H படிவத்தை அனுப்பியதற்குச் சாட்சியே அந்தப் பதிவுத் தபால் மூலம் கிடைக்கும் அத்தாட்சி கடிதம்தான்’’என்றார்.
டிடிஎஸ் பிடிக்கப்பட்டுவிட்டால்?
வங்கி டெபாசிட் மூலம் வட்டி வருமானம் 10,000 ரூபாய்க்குக் கூடுதலாக இருந்து வங்கி டிடிஎஸ் பிடித்தம் செய்துவிட்டால், நாம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்து, வருமான வரித் துறையிடமிருந்து தான் டிடிஎஸ் பிடித்தம் செய்த பணத்தை மீண்டும் பெற வேண்டியிருக்கும்.
இப்படி வருமான வரித் தாக்கல் செய்து, நம் பணத்தை நாமே எதிர்பார்ப்பதைவிட நிதி ஆண்டின் தொடக்கத்தில் வங்கி களில் இந்தப் படிவங்களைத் தாக்கல் செய்தால் வரிக் கணக்கு தாக்கல் செய்து பணத்தைத் திரும்பப் பெறும் சிரமத்துக்கு ஆளாக வேண்டியதில்லை. பான் எண் உள்ளவர்களுக்கு மட்டுமே டிடிஎஸ் பிடித்தம் திரும்ப வழங்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
தவறாகத் தாக்கல் செய்தால்?
இந்தப் படிவங்களைத் தவறாகத் தாக்கல் செய்தால், அதாவது, இந்தப் படிவத்துக்குத் தகுதி இல்லாதவர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்த்தால் அவர்களுக்கு மூன்று மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை சிறைத் தண்டனையும், அபராத மும் விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது” என்று என்று கூறி முடித்தார் சதீஷ்குமார்.
இனி 15G/15H படிவங்களைச் சரியாகத் தாக்கல் செய்து, டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்த்து, சட்டரீதியாகப் பாதுகாத்துக் கொள்ளலாமே!
விகடன்