1

இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பல்வேறு நண்பர்களிடமிருந்தும், பல்வேறு இணைய தளங்களிலும், செய்திதாள்கள் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் இங்கு தொகுத்து பகிரப்படுகிறது.. எனவே இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தன்மை கூற இயலாது.. இத்தகவல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது....

Thursday, April 30, 2015

TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY 


   உடற்கல்வித்துறைக்காகவும்,விளையாட்டின் முக்கியத்துவத்தினை அனைவரும் கற்றுணரவும்  தமிழக அரசால் உருவாக்கப்பட்ட கல்லூரி  TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY.




   இக்கல்லூரியில் பல்வேறு விதமான பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரியில் தொலைதூரக்  கல்வி முறையில் பல்வேறு விதமான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது.அதன் விபரங்களை அறிய இங்கு click செய்யவும்....

ரத்தத்தில் கொழுப்பு அதிகமாதல்(Dyslipidemia)


   கொழுப்பு என்பது உடலுக்கு மிகவும் அவசியமான, உணவிலிருக்கும் ஒரு முக்கியமான மூலக்கூறு. ஒரு கிராம் கொழுப்பு 9 கலோரி சக்தி தரும் (கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தானது கலோரியை மட்டுமே தரும்). கொழுப்புச் சத்தானது கொழுப்பு அமிலங்களாக (Fatty acids) கிளிசரால் ஆகவும் கிளைகோஜென் ஆகவும் சேமித்து வைக்கப்படுகிறது. இப்படியாக கொழுப்பு, உடலில் சேமித்து வைக்கும் தன்மை உடையதாகவே உள்ளது. உடனடி எனர்ஜி தேவைக்கு அவசியமான மாவுச்சத்தைவிட அதிகப்படியான மாவுச்சத்தும் (அரிசிப் பதார்த்தங்கள்) கொழுப்பாகவே சேமிக்கப்படுகிறது. அதனால், உணவில் கொழுப்பு அதிகமாக இருப்பது மட்டுமே பிரச்னை அல்ல. தமிழக மக்களின் உணவில் அரிசிப் பதார்த்தங்கள், பெரிய வாழைப்பழம், மாம்பழம், இனிப்பு போன்ற மாவுச்சத்து அதிகமாக இருப்பதும் இதற்குக் காரணமாகலாம். கொழுப்பு உடலுக்கு சக்தியையும் சூட்டையும் தருவது மட்டுமல்ல... சிறு உறுப்புகளையும் நரம்புகளையும் பாதுகாக்கும் உறைகளுக்கும் அவசியம். வைட்டமின்கள் A, D, E - K போன்ற முக்கிய மான வைட்டமின்கள் கொழுப்பில் கரையக்கூடியவை.



 இதனாலும், கொழுப்பு மிக முக்கியமானது. அட்ரீனல் மற்றும் இனப்பெருக்க ஹார்மோன்களுக்கும் கொழுப்பு அமிலங்கள் மிக முக்கியமானவை. கொழுப்பில் கரையும் வைட்டமின்களை வைட்டமின் தி என்று கூறுவார்கள். இவை குறைந்தால் பலவித சரும நோய்கள், பித்தப்பை கல், தலைமுடி உதிர்தல், வளர்ச்சி குறைவு, மலட்டுத்தன்மை, சிறுநீரக ப்ராஸ்டேட் மற்றும் மாதவிடாய் பிரச்னைகள் உருவாகும். குடலில் வைட்டமின் ஙி உருவாவதற்கும் கொழுப்புச்சத்து அவசியம். மூளையின் நினைவாற்றலுக்கும் கொழுப்பு மூலக்கூறுகள் முக்கியம். பழங்கள் மற்றும் வறுத்த, பொரித்த மாமிச மற்றும் பருப்புகளிலிருந்து கிடைக்கும் இந்தக் கொழுப்பு, அளவுக்கு அதிகமாகும்போது ஏற்படும் பிரச்னைகளே டிஸ்லிபிடேமியா. ஒருவரது உணவில் 65% மாவுச்சத்தும் 25% புரதச்சத்தும் 5-10% கொழுப்புச்சத்தும் இருந்தாலே போதுமானது. இவற்றோடு, காய்கறிகள், பழம், பருப்பு (Nuts) என இருப்பதையே சமச்சீர் உணவு என்கிறோம். திடீர் உணவு (Fast Food), வாரக்கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போகாமல் இருக்கும்படி தயாரிக்கப்படும் உணவு (Frozen Food), ஹோட்டல் உணவுபோலவே வீட்டுச் சமையலில் எண்ணெய் அதிகமாக்கி வறுத்தவை (Fried food), அதிகம் பொரித்த உணவுகள் (Deep Fried Food), நெய்யும் இனிப்பும் அதிகமுள்ள உணவுகள் ஆகியவையும் கூட, இப்போது பாரம்பரிய உணவுமுறையிலும் ஊடுருவி விட்டது. இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கச் செய்யும் வீட்டு உபகரணங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு போன்றவை யும் சேர்ந்து, கொழுப்பை அதிகரித்து, எமனாகிறது.

      மாரடைப்பு என்றவுடன் ரத்தம் கட்டியாகி இதய ரத்தக்குழாய்களில் ரத்தப்போக்கை அடைப்பது, கொழுப்புப் படிந்த குறுகலான ரத்தக் குழாய்களில் ரத்தக்கட்டி (Clot) அடைப்பதும் தோன்றும். இன்றைய இதய வல்லுனர்கள் ஒவ்வொரு நோயாளியின் உயிரைக் காப்பாற்றும்போதும், ரத்தக்குழாய்களை 'டை' அடித்தும், எக்ஸ்ரே, கதிர்வீச்சின் மூலம் அடைப்பையோ, குறுகலான இடங்களையோ ஆஞ்சியோகிராம் ( Angiogram ) மூலம் பார்த்து, அதிக கொழுப்பினால் ஏற்படும் அபாயங்களை கண்கூடாக உறுதி செய்துள்ளார்கள். Coronary Angiography, OCT Infrared Light, Optical Coherence Tomography போன்ற பரிசோதனைகளில் கொழுப்பினால் ரத்தக் குழாய்கள் எவ்வாறு குறுகுகின்றன என்பது தெளிவாகிறது. கொழுப்பு உடலில், ரத்தத்தில் அதிகமாக இருப்பதையே டிஸ்லிபிடேமியா என்கிறோம். கொழுப்பு, ரத்தத்தில் Lipoproteins எனப்படும் பல்வேறு கொழுப்பு மூலக்கூறுகளால் ஆன கொழுப்பு வகைகளாக பிரிக்கப்படுகிறது. லைப்போபுரோட்டீன்கள் நீரில் கரைவதற்கும், உடலின் எல்லா பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதற்கும் எளிதானவை. மூப்பு, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு, டிஸ்லிபிடேமியா போன்ற பிரச்னைகளாலும் ரத்தக் குழாய்களின் பரப்புகளில் ஏற்படும் விரிதல்கள், உடைதல்களால் பல்வேறு லைப்போபுரோட்டீன்கள், நீர்நிலைகளில் நிற்கும் பாசி போல, Atherosclerosis எனும் கொழுப்புக் கட்டிகளாகப் படர்வதால், ரத்தக் குழாய்களில் சுருக்கம் ஏற்படுகிறது.

   லைப்போபுரோட்டீன்களை நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு எனப் பிரிக்க முடியும்.

  1. TriglyceridesN < 150 ஈரலிலோ, கொழுப்பு நிறைந்த உணவிலிருந்தோ, உடலுக்குக் கிடைக்கும் டிரைகிளிசைரைடு, VLDL, லைப்போபுரோட்டீனுடன் இணைந்து உடலின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ரத்தக் குழாய்களில் மாற்றத்தை ஏற்படுத்தும்... முக்கியமாக இதய ரத்தக்குழாய்களில்!

 2 . LDL (Low Density Lipid) லைப்போபுரோட்டீன் மூலக்கூறுகளின் எடையைப் பொறுத்து, LDL (Low Density Lipoprotein), VLDL (Very Low Density Lipoprotein), HDL (High Density Lipoprotein) எனப் பிரிக்கிறோம். LDL எனப்படுபவை, பல்வேறு புரதங் களாலும் (லைப்போபுரோட்டீன்) ஆன கொழுப்பு மூலக்கூறுகளை தண்ணீரில் கரையும் வண்ணம், ரத்தத்தில் எடுத்துச் செல்லும் கொழுப்பு மூலக்கூறாகும். ரத்தக்குழாய்களில் கொழுப்பு மிக அதிகமாக பரவ வழி ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதால் இதை கெட்ட கொழுப்பு என்பர்.

3 . VLDL (Very Low Density Lipid) VLDL எளிதாக LDLலாக மாறிவிடும். VLDL, டிரைகிளிசரைடு போன்ற லைப்போபுரோட்டீன்களை மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லும்.

4 . HDL (High Density Lipid)> 40 HDL மூலக்கூறுகள் கொழுப்பை செல்களிலிருந்தும், ரத்தக்குழாய் சுவர் திசுக்களிலிருந்தும், ரத்த ஓட்டத்தின் மூலம் வெளியே எடுத்துச் செல்லுவதால், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படராமல் பார்த்துக் கொள்கிறது. அதனால்தான், இது நல்ல கொலஸ்ட்ரால் எனப்படுகிறது. இந்தியர்களுக்கு இது குறைவான அளவில் இருப்பதுதான் பிரச்னையே. இதைக் கூட்டும் ஒரே வழி - உடற்பயிற்சி மட்டுமே. வேறு எதனாலும் முறையாகக் குறைக்க முடியாது. Total Cholesterol முன்பெல்லாம் 220க்குக் குறைவாக 'டோட்டல் கொலஸ்ட்ரால்' என்பதை மட்டுமே அளவீடாகக் கொண்டு, 'கொழுப்பு அதிகமா' என்பதைச் சொல்லி வந்தோம். இப்போதோ, LDL , VDL, HDL ஆகிய 3 அளவுகளையும் உள்ளடக்கியதே கொலஸ்ட்ரால் என்பதால், இதில் எது அதிகம் என்பதைப் பொறுத்து, அதற்கு என்ன மருந்து தரவேண்டும், அது அதிகமாக இருந்தால் என்ன தீங்கு செய்யும் என்பதை அறியத் தருகிறோம். அதனால், Lipid ProfileTest மூலம் மட்டுமே உடலில் கொழுப்புச்சத்து அறிந்து மருத்துவம் தரப்படுகிறது.மொத்தத்தில், HDL 40க்கு அதிகமாக இருக்க வேண்டும். இது உடற்பயிற்சியினால் மட்டுமே சாத்தியம். உணவினாலோ, மருந்தின் மூலம் மட்டுமோ சாத்தியமில்லை. Total Cholesterol,Triglyceride, LDL , VLDL ஆகியவை கட்டுபாட்டுக்குள் வர உணவுடன் உடற்பயிற்சி மிக மிக அவசியம். இவை அதிகமாவதற்கு பாரம்பரியம் ஒரு காரணம். இருந்தாலும், ஒவ்வொரு நாள் உணவிலும் 5 சதவிகிதம் கொழுப்பு, நிறைய காய்கறிகள், குறைவான அளவில் பழம் ஆகியவை அவசியம். மிகக்குறைவான ஆல்ஹகால் மற்றும் தவிர்க்கப்பட்ட புகைப்பழக்கம் ஆகியவை நல்லது. எடை குறைப்பு மற்றும் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்,சரியான கட்டுப்பாடு என்பது மிக அவசியம்.

   LLA Lipid Lowering Agents Statins எனப்படுபவை கொழுப்பையும் அதன் மூலக்கூறுகளையும் குறைக்கும் மருந்துகள். ஸ்டாடின்ஸ் காளான்களிலிருந்து எடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட மருந்து. இப்போது வேதியியல் பொருட்களாக உற்பத்தி செய்யப்படுகிறது. Atorvastatin Rosuvastatin மருந்துகள் கொலஸ்ட்ரால்களைக் குறைக்கும். இவை கொலஸ்ட்ரால் உற்பத்தியைக் குறைப்பதுடன், VLDLயைக் குறைத்து, அதன்மூலம் LDL உற்பத்தியையும் குறைக்கும். ஸ்டாடின்கள் ரத்தக் குழாய்களில் ஏற்படும் விரிவுகள், பிளவுகளையும் சரி செய்து, கொழுப்பு படர்வதையும் தடுக்கின்றன. ஸ்டாடின்களின் பக்கவிளைவாக கண் பாதிப்புகளோ, நரம்பு மண்டல பாதிப்புகளோ, ஈரல் பாதிப்போ, தசைகளில் பாதிப்போ வரக்கூடும். அதனால், ஸ்டாடின் மருந்துகள் உட்கொள்ள ஆரம்பித்தவுடன் பாதிப்புகளைக் கண்காணித்து, மருத்துவரிடம் கூறி, தேவையான பரிசோதனைகளை செய்துகொள்வது அவசியம்.ஃபிப்ரேட்ஸ் ( Fibrates) மருந்துகளால் டிரைகிளிசரைடு குறைக்கப்படுகிறது. டிரைகிள சரைடு உற்பத்தியையும் குறைத்து, டிரைகிளி சரைடு, லைப்போபுரோட்டினையும் உடைத்து, அளவைக் குறைக்கும் சக்தி வாய்ந்தது இது. டிரைகிளிசரைடு குறையும்போது பிஞிலி கூடுவதற்கான வாய்ப்பு உண்டு. மிக அதிகமான அளவில் டிரைகிளிசரைடு கூடி இருப்பதை Hypertriglyceridemia என்கிறோம். இதற்கு ஸ்டாடின் மற்றும் ஃபிப்ரேட்ஸ் சேர்த்து தரப்படுகிறது. ஃபிப்ரேட்ஸில் மிகக்குறைவான பக்க விளைவுகளே உண்டு. VLDL, LDL இரண்டையும் குறைப்பதற்கு Nicodin Acid தரப்படுகிறது. இவற்றுக்குப் பக்க விளைவுகள் அதிகம்.


   40 வயதுக்கு மேலே வரும் பருமன் (Obesity), நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, கொழுப்பு ரத்தத்தில் அதிகமாவது ஆகியவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தாலே போதும்... மருந்துகளுடன், மருத்துவர் ஆலோசனையுடன் ஒவ்வொருவருக்குமான பரிசோதனை விவரங்களுடன் அந்தந்த நோய்க்கான நம்பர்களை கட்டுப்பாட்டுக்குள் (GOAL) வைத்திருப்பதே இதற்கு வழி. 80 வயது வரை மற்ற நோய்கள் வராத, வந்த நோய்கள் நம்மை முடக்கிப் போடாத வாழ்க்கை நடைமுறை மாற்றங்களே (Life Style Modification) நம்மை வாழ வைக்கும். நோய் என்று வருமுன்பே பூமியிலே கால் பதியுங்கள்...

சுத்தமான காற்றைச் சுவாசித்து, மற்ற மனிதர்களையும் நேரில் கண்டு, உடற்பயிற்சி செய்யுங்கள்... .... உடல் அசைவே உயிர்! Movemet is life!

நன்றி : வலைப்பக்க நண்பர்கள்

Saturday, April 25, 2015


வருமான வரி இ-படிவம்:

  இனி வருமான வரி படிவங்களை போஸ்டில் அனுப்ப வேண்டாம்.

  கடந்த வருடம் வருமான வரி பதிவு செய்யம் போது யோசித்ததுண்டு.
இ-படிவங்கள் என்று தான் பெயர். ஆனால் எல்லாம் பதிவு செய்த பிறகு பிரிண்ட் எடுத்து போஸ்டில் அனுப்ப வேண்டி இருக்கிறதே என்று நினைத்தேன்.



   இது இ-படிவம் என்பதன் முழுப் பயனை அனுபவிக்க முடியாமல் தடுத்து இருந்தது.தற்போது வருமான வரித்துறை மாற்றி விட்டது. நல்ல முடிவு.

  இனி இ-பைல் செய்த பிறகு போஸ்டில் அனுப்ப வேண்டாம்.அதற்கு உங்களது ஆதார் எண்ணை வருமான வரி படிவத்தில் இணைக்க வேண்டும்.

 உங்கள்  ஆதார் எண்ணில் உள்ள மொபைல் எண்ணுக்கு OTP முறையில் ரகசிய குறியீடு அனுப்பப்படும்.அதில் உள்ள குறியீட்டை டைப் செய்தால் வேலை முடிந்தது.


 இந்த முயற்சிகள் செய்த வருமான வரி அதிகாரிகளுக்கு நன்றிகள்..


 An overview on Professional Tax

Meaning of professional tax:

   Professional Tax is the tax charged by the state governments in India.

   Any one earning an income from salary or any one practicing a profession such as chartered accountant, lawyer, doctor etc. are required to pay this professional tax. 

  Different states have different rate and method of collection. Following states impose this levy in India – Karnataka, West Bengal, Andhra Pradesh, Telangana, Maharashtra, Tamil Nadu, Gujarat, Assam, Chhattisgarh, Kerala, Meghalaya, Orissa, Tripura and Madhya Pradesh etc. Business owners, working individuals, merchants and people carrying out various occupations comes under the purview of this tax.

  Professional tax is levied by particular Municipal Corporations. The maximum amount payable per year is Rs.2,500/- and in line with your salary, there are predetermined slabs every state acts.

  Applicability of Professional Tax as per the Constitution of India:

 Article 276 of the Constitution of India lays down that “there shall be levied and collected a tax on professions, trades, callings and employments, in accordance with the provisions of this Act.”
  As the different states have its own act for its applicability, levy, collection and assessment hence it is imperative to provide you a list of states where professional tax is applicable and acts passed in those states to ritualized its collection.



Saturday, April 18, 2015

நமது GAMES TEACHER இணையதளத்தினை உங்கள் மெயில்  BOX உடன் இணைக்க.



   நமது GAMESTEACHER இணையதளத்தினை உங்கள் மெயில் BOX உடன் மிக எளிதாக இணைத்துக்கொள்வதன் மூலம் தினம்தோறும் புதிய பதிவுகளை இணையதளத்தினை பார்வையிடாமலேயே MAIL ல் பெற்றுக்கொள்ளலாம் .


இந்த வசதியினை பெற கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.


  முதலில் தங்கள் ANDROID மொபலில் எதாவது ஒரு  browser ல் நமது இணையதளத்தின் பெயரான
gamesteacher.blogspot.in/  என  தட்டச்சு  செய்து கொள்ள வேண்டும்.

கவனிக்கவும்..   

 இதனை நீங்கள் TYPE செய்யும்போது கீழே உள்ள படத்தில் உள்ளவாறு  gamesteacher.blogspot.in/?m=0   என்று இருக்க வேண்டும்..(?m=0)..






 பின்னர் FOLLOW BY EMAIL என்ற இடத்தில் தங்கள் MAIL ID யினை தெளிவாக பிழையின்றி  TYPE செய்ய வேண்டும்.



---





    பிறகு SUBMIT என்பதை உள்ளீடு செய்யும்போது ஒரு புதிய கீழே படத்தில் உள்ளவாறு இணைய பக்கம் உருவாகும்.




அதில் நீங்கள் தவறாக முயற்சிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்,இது ஒரு மனித முயற்சி என்பதற்காகவும் ஒரு பெட்டியும் ,சில எழுத்துக்களும் தோன்றும். அந்த எழுத்து எப்படி உள்ளதோ அவ்வாறே கீழே உள்ள பெட்டியில் TYPE செய்யவும்.அதன்பிறகு COMPLETE SUBSCRIPTION REQUEST  என்பதை ENTER செய்யவும்.ஒரு புதிய இணையபக்கம் உருவாகும்..






    இப்பொழுது நீங்கள் உங்கள் பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டீர்கள்.
அதன் பிறகு உங்கள் MAIL BOX ற்குச் சென்று 

Hello there,

You recently requested an email subscription to GAMESTEACHER. We can't wait to send the updates you want via email, so please click the following link to activate your subscription immediately:
https://feedburner.google.com/fb/a/mailconfirm?

என MAIL வந்திருக்கும். அதில் நீல நிறத்திலான LINK கினை CLICK செய்து உங்கள் email subscription உறுதி செய்து கொள்ளவும். இதில் எதாவது ஐயப்பாடுகள் இருந்தால் எனது முகவரிக்கு MAIL செய்யலாம்...


Monday, April 13, 2015

நமது உடற்கல்வி ஆசிரியர்களின் மதிப்பீடு பணியை எளிதாக்க ஒரு புதிய EXCEL தானியங்கி CALCULATOR:


    கல்வி ஆண்டு இறுதியில் விடைத்தாள்களை திருத்தி பருவத் தேர்வு மதிப்பெண்களை கூட்டி அதனை மூன்றால் வகுத்து கிடைக்கும் மதிப்பெண்ணுக்கு GRADE CALCULATION  செய்வது மிகவும் கடினமான செயலாக இருக்கும்.அதனை எளிதாக்கும் வகையில் ஒரு புதிய EXCEL தானியங்கி CALCULATOR வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதனை பயன்படுத்தி பயன் பெற வேண்டுகிறோம்.


முதலில் வரிசை எண்ணை டைப்செய்யவும்.                                       
>மாணவரின் பெயரை ENGLISH அல்லது தமிழில் டைப் செய்யவும் 
> முதல் பருவத்தேர்வு மதிப்பெண்ணை டைப் செய்யவும்..                                    
> இரண்டாம் பருவத்தேர்வு மதிப்பெண்ணை டைப் செய்யவும்..                                    
> மூன்றாம் பருவத்தேர்வு மதிப்பெண்ணை டைப் செய்யவும்..                                     
> தானாகவே GRADE CALCULATION   செய்யப்படும்.                                     
> SAVE AS   செய்து வெளியேறவும்                                   
>PRINT OUT  எடுத்து கையொப்பம் செய்து வகுப்பாசிரியரிடம் கொடுத்து விடலாம்..



    இதில் எதாவது பிழையோ சந்தேகமோ இருப்பின் தயவு செய்து 9842758889  என்ற எண்ணில் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை தொடர்பு கொள்ளலாம்... 

PLEASE CLICK HERE DOWNLOAD                                        

Thursday, April 9, 2015

Investments allowable as deduction under Income Tax Act





   This time you all are waiting for submitting your investment declarations to your employer. Investments are one of the major aspects for minimizing your tax bill. The Income Tax Act provides that on determination of the gross total income of an assessee after considering income from all the heads, certain deductions therefrom may be allowed. Here an attempt is made to explain all types of investment like deduction under income tax act:

Payment of premium for annuity plan of LIC or any other insurer:
   Deduction is available upto a maximum of Rs. 1,00,000/-. The premium must be deposited to keep in force a contract for an annuity plan of the LIC or any other insurer for receiving pension from the fund. The Finance Act 2015 has enhanced the ceiling of deduction under Section 80CCC from Rs.100,000 to Rs. 1,50,000 with effect from A.Y. 2016-17.

Deposit made by an employee in his pension account to the extent of 10% of his salary:
  Where the Central Government makes any contribution to the pension account, deduction of such contribution to the extent of 10% of salary shall be allowed. Further, in any year where any amount is received from the pension account such amount shall be charged to tax as income of that previous year. The Finance Act, 2009 has extended benefit to any individual assesse, not being a Central Government employee.

Investment under Rajiv Gandhi Equity Savings Scheme, 2013:
   The deduction was 50 % of amount invested in such equity shares or Rs. 25,000, whichever is lower. The maximum Investment permissible for claiming deduction under RGESS is Rs. 50,000.

Payment of medical insurance premium:
  Deduction is available upto Rs.15,000/ for self/ family and also upto Rs. 15,000/- for insurance in respect   of  parent/ parents of the assessee.In case of senior citizens, a deduction upto Rs.20,000/- shall be available under this Section. Insurance premium of senior citizen parent/ parents of the assessee also eligible for enhanced deduction of Rs. 20000/-The premium is to be paid by any mode of payment other than cash and the insurance scheme should be framed by the General Insurance Corporation of India & approved by the Central Govt. or Scheme framed by any other insurer and approved by the Insurance Regulatory & Development Authority. The premium should be paid in respect of health insurance of the assesse or his family members. w.e.f. 01.04.2011, contributions made to the Central Government Health Scheme is also covered under this section.

Deduction of Rs.40,000/
    In respect of (a) expenditure incurred on medical treatment, (including nursing), training and rehabilitation of handicapped dependent relative. (b) Payment or deposit to specified scheme for maintenance of dependent handicapped relative: W.e.f. 01 .04.2004 the deduction under this section   has  been enhanced to Rs.50,000/- Further,  if the dependent is a person with severe disability a deduction of Rs.1,00,000/– shall be available under this section. Budget 2015 has Further Proposed to hike the limit from A.Y. 2016-17 to  Rs. 75000 from existing Rs. 50,000/-  and for person with severe disability to Rs. 1.25 lakh from existing Rs. 1 Lakh.

Deduction of Rs.40,000/- in respect of medical expenditure incurred:
   W.e.f.  01.04.2004, deduction under this section   shall be available to the extent of Rs.40,000/- or  the amount actually paid, whichever is less. In case of senior citizens, a deduction upto Rs.60,000/- shall be available under this Section. Budget 2015 has proposed deduction of Rs. 80000/- for senior citizen aged 80 year or More from A.Y. 2016-17.

Deduction in respect of payment in the previous year of interest on loan taken from a financial institution or approved charitable institution for higher studies:
   This provision has been introduced to provide relief to students taking loans for higher studies. The payment of the interest thereon will be allowed as deduction over a period of upto 8 years. Higher education means any course of study pursued after passing the senior secondary examination or its equivalent from any recognized school, board or university.

Deduction in respect of interest on loan taken for residential house property:
  Vide Finance Act 2013, an individual is allowed a deduction upto a limit of Rs 1,00,000 being paid as interest on a loan taken from a Financial Institution, sanctioned during the period 01-04- 2013 to 31-03-2014 (loan not to exceed Rs 25 lakhs) for acquisition of a residential house whose value does not exceed Rs 40 lakhs.

Deduction in respect of interest on deposits in savings account:
    Section 80TTA is introduced wef A.Y. 2013-14 to provide deduction to an individual or a Hindu undivided family in respect of interest received on deposits (not being time deposits) in a savings account held with banks, cooperative banks and post office. The deduction is restricted to Rs 10,000 or actual interest whichever is lower.

Deduction of Rs.50,000/- to an individual who suffers from a physical disability (including blindness) or mental retardation:
    Further, if the individual is a person with severe disability, deduction of Rs.75,000/- shall be available u/s 80U.W.e.f. 01.04.2010 this limit has been raised to Rs. 1 lakh. Budget 2015 proposed to amend section 80U  to raise  limit of deduction in respect of a person with disability from Rs. 50,000/- to Rs. 75,000 and for person with severe disability from one lakh rupees to one hundred and twenty five thousand rupees.

Rebate Of Rs 2000 For Individuals Having Total Income Upto Rs 5 Lakh:
    Finance Act 2013 has provided relief in the form of rebate to individual taxpayers, resident in India, who are in lower income not exceeding Rs 5,00,000/-. The amount of rebate is Rs 2000/- or the amount of tax payable, whichever is lower.

Patent registered;
Deduction in respect of any income by way of royalty in respect of a patent registered on or after 01.04.2003 under the Patents Act 1970 shall be available as :-Rs. 3 lacs or the income received, whichever is less: The assessee who is a patentee must be an individual resident in India. The assessee must furnish a certificate in the prescribed form duly signed by the prescribed authority along with the return of income.


   Now, while filling your investment declarations for FY 2015-16, keep in mind to make it part of your declarations. In case if you are investing in any of the above investments ensure you are getting the benefit while deducting TDS.

IGNOU B.ED-க்கு மதிப்பீடு சான்று தேவை இல்லை -என்பதற்கான அரசாணை


      IGNOU B.ED-க்கு மதிப்பீடு சான்று தேவை இல்லை என்பதற்கான அரசாணை .அரசாணை (நிலை) எண் :160 நாள்02.12.2004

   படத்தினை ZOOM செய்து  பார்க்கவும்.


Wednesday, April 8, 2015

உடற்கல்வி பாடத்தின் பாடத்திட்டம்.


    6,7,8,9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உடற்கல்வி பாடத்தின் பாடத்திட்டம்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.பாடத்திட்டம் பட  வடிவமாக கொடுக்கப்பட்டுள்ளது.


படத்தின்மீது க்ளிக் செய்து ZOOM செய்து பார்க்கவும்..