1

இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பல்வேறு நண்பர்களிடமிருந்தும், பல்வேறு இணைய தளங்களிலும், செய்திதாள்கள் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் இங்கு தொகுத்து பகிரப்படுகிறது.. எனவே இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தன்மை கூற இயலாது.. இத்தகவல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது....

Tuesday, November 21, 2017

புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியீடு


புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை பெற இங்கு click செய்யவும்..

Monday, October 30, 2017

உங்களை ஜி.எஸ்.டி பெயரிலும் ஏமாற்றலாம்! 

     நாம் செலுத்தும் வரி சரியானதா, செலுத்தும் வரி உரிய முறையில் மத்திய/மாநில அரசைச் சேருகிறதா, குறிப்பாக, ஜி.எஸ்.டி வரி வசூலிக்கும் நிறுவனங்கள் அனைத்துமே, அந்த வரி வசூலிக்கத் தகுதியுடையதா என்பதைப் பற்றி நாம் என்றாவது... எப்போதாவது யோசித்திருக்கிறோமா?

ஹோட்டல், டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், திரையரங்கம், மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை அங்காடிகள், பலசரக்குக் கடை, ஜவுளிக் கடை, எலெக்ட்ரிக்கல்ஸ், ஹார்டுவேர் கடை என, அன்றாட நடவடிக்கைகளின் ஒவ்வொரு கணமும் நாம் வரி செலுத்தி வருகிறோம். வரி வசூலிப்போர் உரிய தகுதியுடையவர்தானா என்பதை, வரி செலுத்தும் முன் சற்று யோசிக்க வேண்டும். காரணம், வரிவிதிப்பு முறையின் அடிப்படையில் வரி வரம்புக்குள் இல்லாத சில நிறுவனங்களும் ஜி.எஸ்.டி., சி.ஜி.எஸ்.டி என வரி விதிப்பதாகச் சொல்லப்படுகிறது. நாம் செலுத்தும் பணம் உண்மையிலேயே ஜி.எஸ்.டி வரிதானா அல்லது அந்த நிறுவனம் நம்மை

Thursday, August 24, 2017

செப்டம்பர் 23இல் சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு!


  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தையல், ஓவியம், இசை,
உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களுக்கு, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாசிரியர் பணிக்கு 1,325 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்கள் முதல்முறையாகப் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.


  இது குறித்த தகவல்களைத் தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநரும், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருமான டி.ஜெகன்நாதன் வெளியிட்டுள்ளார். “சிறப்பாசிரியர் போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடந்தது. சிறப்பாசிரியர் தேர்வுக்கு 37,900 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு எழுத்துத் தேர்வு செப்டம்பர் 23ஆம் தேதி காலை 10 மணி முதல் 12.30 வரை நடைபெறும். தேர்வு முறையில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 95 இடம்பெறும். 2.30 மணி நேரம் தேர்வு நடக்கும். தேர்வுக்கான பாடத்திட்டம் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் 40% எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
750pp தனி ஊதியத்தை பதவி உயர்வில் 3% கணக்கீட்டிற்கு பிறகும் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவது சரியே ..மதுரை தொடக்கக் கல்வி அலுவலர் ஆணை





Monday, July 24, 2017

பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்போர் பிறப்பு சான்றிதழ் அளிக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது..



   புதுடெல்லி: பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்போர் பிறப்பு சான்றிதழ் அளிக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பாஸ்போர்ட் விண்ணப்ப முறை தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை எளிமையாக்கப்பட உள்ளது என பதிலளித்துள்ளது. இதுகுறித்து பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் வி.கே.சிங், பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை அதற்கு பதிலாக ஆதார் அல்லது பான் கார்டை சமர்ப்பித்தாலே போதும் என தெரிவித்துள்ளார்.

அதுவே பிறப்பு சான்றிதழாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும்

Monday, June 12, 2017

நோட்டரி பப்ளிக் அட்டஸ்டேஷன் தேவையில்லை என்பதை அறிவீர்களா?


   பள்ளி, கல்லூரி, வேலை வாய்ப்பு என எதற்கு விண்ணப்பித்தாலும், சான்றிதழ் நகல்களுக்கு அட்டஸ்டேஷன் (சான்றொப்பம்) பெற்று அனுப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். விண்ணப்பத்தைப் பெறுபவர்களுக்கு
அட்டஸ்டேஷன் அவசியம் என்கிறார்கள். இதைக் காலம் காலமாகக் கடைப்பிடித்து வரும் வழக்கம் என்றாலும், சட்டப்படி அட்டஸ்டேஷன் அவசியமில்லை.

Sunday, March 12, 2017

அரசு ஊழியர்களின் சேம நல நிதியிலிருந்து (GPF) தொகையை திரும்ப பெறுவதற்கு விதிகள் தளர்த்தி மத்திய அரசு உத்தரவு 









Thursday, February 9, 2017

இடைநிலை ஆசிரியர்,உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு கருத்துரு 


Friday, January 6, 2017

குழந்தையின் கையெழுத்தை அழகாக்குவது எப்படி?


     உங்கள் குழந்தையின் கையெழுத்து அழகாக இல்லை என்ற மனக்குறை உள்ள பெற்றோரா நீங்கள்? அவர்களுக்கு நீங்களே சிறு சிறு பயிற்சிகள்
அளித்து அவர்களின் கையெழுத்தை நேர்த்தியாக மாற்றியமைக்க முடியும்.

 குழந்தையின் கையெழுத்தை அழகாக்குவது எப்படி?

  குழந்தையின் எழுத்து நன்றாக இல்லை என இரட்டைக் கோடு, நான்கு கோடு நோட்டுகளை வாங்கித் தந்து, பக்கம் பக்கமாக அவர்களை எழுதச் சொல்லி வற்புறுத்தினால், அவர்களுக்கு வெறுப்புதான் ஏற்படும். குழந்தையின் கையெழுத்தை அழகாக்க, முதற்கட்டமாக ஃபைன் மோட்டார் ஸ்கில் (Fine Motor Skill) எனப்படும், அவர்கள் கைகளின் தசைகளை வலுப்படுத்தும் திறனை வளர்க்க வேண்டும். கை விரல்களுக்கு அடிக்கடி வேலைகள் கொடுக்க வேண்டும். இதனால் நரம்புகள் உறுதியடைந்து, எழுத்து அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும். அது தொடர்பான பயிற்சிகளை பார்க்கலாம்.





  பல வண்ணங்களில் கிடைக்கும் சைனா களிமண்ணை குழந்தைகளுக்கு வாங்கித் தந்து, பிசைந்து விளையாட, சின்னச் சின்ன உருவங்கள் செய்யப் பழக்கப்படுத்துங்கள். இதனால் குழந்தையின் கைகள், தசைகள், கண்கள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கிடைப்பதுடன், குழந்தையின் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.

   மைதா மாவு, சோள மாவு, கோதுமை மாவு என ஏதேனும் ஒரு மாவினைப் பிசைந்து, பெரிய, அகலமான தட்டில் வைத்து, குழந்தையை அதில் ஏதேனும் எழுதியோ, வரைந்தோ பழகச் சொல்லலாம். இதனால் குழந்தையின் கைகளுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.

   சில்லறைக் காசுகளை எண்ணி, அவற்றை சிறு துளையுள்ள உண்டியலில் குழந்தைகளைப் போடச்சொல்லலாம். மேலும், பல்லாங்குழி போன்ற நம் பாரம்பர்ய விளையாட்டுகளை விளையாடச் செய்யலாம். இதனால் குழந்தைகளின் நரம்புகள் வலுப்படும்; பென்சிலை வழுக்காமல் பிடித்து எழுத அவர்களின் விரல்கள் பழக்கப்படும்.

  குழந்தைகள் விளையாட வைத்திருக்கும் இடுக்கியால் பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு நகர்த்தச் சொல்லுங்கள். இதனால் கைகளுக்கு பிடிமானத்தன்மை அதிகரிக்கும்.

   குழந்தைகள் பேப்பர்களைக் கிழித்து பந்துபோல உருட்டி விளையாடினால், தடை போடாமல் அதை அனுமதியுங்கள். இதனால் மொத்த கை நரம்புகளும் வலுப்படும். அல்லது, அக்குபஞ்சர் பந்துகளை வாங்கித் தந்தும் விளையாடச் சொல்லலாம்.

  குழந்தைகளிடம் உல்லன் நூலைக் கொடுத்து அதில் மணிகள், பாசிகள் போன்றவற்றை கோக்கச் சொல்லலாம். அதேபோல தடிமனான அட்டையில் சிறுதுளைகள் போட்டு அதில் அவர்களை நூலை கோக்கச் சொல்லிப் பழக்கப்படுத்தலாம்.

  உங்கள் குழந்தைக்குப் பிடித்த நிறத்தில் க்ரயான்ஸ் அல்லது கலர் பென்சிலை அவர்களிடம் கொடுத்து, முட்டைக் கூடு, காகிதக் கோப்பை போன்றவற்றில் அவர்களைப் படம் வரைந்து வண்ணம் தீட்டச் சொல்லுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் அவர்களால் எழுத்துக்களை சீராக எழுத முடியும்.

  சில குழந்தைகளுக்கு குறிப்பிட்ட சில எழுத்துக்கள் மட்டும் சரிவர எழுத வராமல் இருக்கலாம். அதனால் அவர்களின் மொத்தக் கையெழுத்தும் பார்க்க சரியில்லாதது போன்று தோன்றும். எனவே, சார்ட் அல்லது கார்ட்போர்டு அட்டைகளில் அந்த எழுத்துக்களை மட்டும் பெரிதாக எழுதி, அதன்மீது க்ளேவை வைத்து அந்த எழுத்து போன்றே வடிவமைக்கச் சொல்லலாம்.

  குழந்தைகளின் நரம்புகள் மெலிதாக இருக்கும் என்பதால் அவர்கள் எழுதப் பழகும்போது பிடிமானத்துக்குக் கடினமாக இருக்கும் பேனா அல்லது பென்சிலை வாங்கிக் கொடுக்காதீர்கள். இதனால் அவர்கள் கை சிரமத்துக்கு உள்ளாகும்.

  குழந்தைகளை அவர்கள் கைகளை இறுக்கமாக மூடி மெதுவாகத் திறக்க சொல்லலாம். இப்படி நாள் ஒன்றுக்கு 10 முறையாவது செய்து பழக வையுங்கள்.


   இதுபோன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவர வைத்தால், உங்கள் குழந்தையின் கையெழுத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.