1

இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பல்வேறு நண்பர்களிடமிருந்தும், பல்வேறு இணைய தளங்களிலும், செய்திதாள்கள் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் இங்கு தொகுத்து பகிரப்படுகிறது.. எனவே இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தன்மை கூற இயலாது.. இத்தகவல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது....

Monday, February 22, 2016

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

 
   தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.
சட்டம் எதற்கு?

************************
அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக்
கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும். தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.

Sunday, February 7, 2016

அரசு விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

 
  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

   தமிழக அரசு விளையாட்டுத் துறையின் கீழ் செயல் பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் மூலமாக கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்காக சிறப்பு விளையாட்டு விடுதிகள் சென்னையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

  2016-17-ம் ஆண்டுக்கான சிறப்பு விளையாட்டு விடுதியில் சேருவதற்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர்கள் தடகளம், கூடைப்பந்து, குத்துச் சண்டை, கையுந்து பந்து, டேக்வாண்டோ, நீச்சல், வாள் சண்டை, துப்பாக்கி சுடுதல், பளு தூக்குதல், ஜூடோ, இறகுப் பந்து, மேசைப் பந்து மற்றும் மாணவி களுக்கு தடகளம், குத்துச்சண்டை, கையுந்து பந்து, கால்பந்து, டேக்வாண்டோ, நீச்சல், வாள் சண்டை, துப்பாக்கிச் சுடுதல், பளு தூக்குதல், ஜூடோ, இறகுப் பந்து, மேசைப் பந்து ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படும்.

  இந்த விடுதியில் சேர மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் சம்பந்தப்பட்ட விளையாட்டில் மாநில அளவில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவங் கள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 18-ம் தேதிக்குள் சிறப்பு நிலை விளையாட்டு விடுதி, அறை எண் 76, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை-3 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவும். தேர்வு வரும் 20, 21-ம் தேதிகளில் நடைபெறும்.
பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை - அரசு ஊழியர்களின் விடுப்பு - திருத்தம் மற்றும் புதிய உத்தரவு பிறப்பித்து அரசு முதன்மை செயலர் உத்தரவு - செயல்முறைகள் (19/01/2016)








இரண்டு CPS கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு !!!



ஆன்லைன் மூலம் என்பிஎஸ்... இனி ஈஸியா முதலீடு செய்யலாம்!


   இன்றைய தேதிக்கு இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல பென்ஷன் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்கது நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்பிஎஸ்) எனப்படும் ஒய்வுக் காலத் திட்டம்தான். இதுநாள் வரை இந்தத் திட்டத்தில் நேரடியாக மட்டும் முதலீடு செய்யும்படி இருந்தது. இப்போது அது ஆன்லைன் மூலமாகவும் முதலீடு செய்கிற மாதிரி மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இனி ஆன்லைனில் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.



   என்பிஎஸ் திட்டத்தில் வங்கி, நிதி நிறுவனங்கள் அஞ்சலக அலுவலகங்கள் மூலம் முதலீடு செய்யலாம்.  ஆன்லைனில் முதலீடு செய்ய  https://enps.nsdl.com/eNPS/LandingPage.html என்கிற லிங்கை சொடுக்கினால், நேரடியாக  இ-என்பிஎஸ்-ன் வலைதளத்துக்கு செல்லும். நீங்கள் புதிதாக பதிவு செய்துகொள்ளப் போகிறீர்கள் எனில், ரெஜிஸ்ட்ரேஷன் (Registration) என்பதற்குள் சென்று, நியூ ரெஜிஸ்ட்ரேஷன் என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். பிறகு, நீங்கள் இந்திய குடிமகனா அல்லது என்.ஆர்.ஐ-யா என்பதைக் குறிப்பிட்டு, டயர் 1 திட்டம் மட்டுமா அல்லது டயர் 1 மற்றும் டயர் 2 திட்டம் இணைந்த திட்டமா என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் பான் எண் மற்றும் எந்த வங்கிக் கணக்கு, என்பிஎஸ் திட்டத்துடன் இணைக்கப்பட இருக்கிறது என்பதையும் சொல்ல வேண்டும்.



தனிநபர் விவரம்!

இப்படி பதிவு செய்யும்போது முதலீடு செய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் அதாவது, முதலீடு செய்பவர் பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் கேட்கப்படும். பிறப்புச் சான்றுகளில் (ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, 10, 12-வது பள்ளிக்கூட மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை) ஏதேனும் ஒன்றை அதன்  எண்ணுடன் குறிப்பிட்டால், நாம் பதிவு செய்ததற்கான எஸ்எம்எஸ்  செல்போனுக்கு வரும்.

முகவரி!

இதில் பதிவு செய்யும்போது தற்காலிக மற்றும் நிரந்தர முகவரிச் சான்று தரவேண்டும். ரேஷன் அட்டை, வங்கி பாஸ் புக், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்திய ரசீது, டெலிபோன் பில் ரசீது, சொத்து மற்றும் வீட்டு வரி ரசீது போன்ற ஆவணங்களை இவற்றுக்காக தரலாம்.

 வங்கி விவரம்!

எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் இ-என்பிஎஸ் ஆரம்பித்துவிட முடியும் என்பதில்லை. அலஹாபாத் பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, கார்ப்பரேஷன் பேங்க், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், சவுத் இந்தியன் பேங்க் சிண்டிகேட் பேங்க், தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க், லட்சுமி விலாஸ் பேங்க், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற சில வங்கி களோடு மட்டுமே இந்தத் திட்டம் இணைக் கப்பட்டு உள்ளது.

ஃபண்ட் நிறுவனங்கள்! 

இதுவரை ஆறு பென்ஷன் ஃபண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களே இதில் உள்ளன. அதில் ஏதேனும் ஒரு நிறுவனத்தை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். நீங்களே முதலீடு செய்வதாக இருந்தால் ஆக்டிவ் திட்டத்தையும், அரசு வழிகாட்டுதல்படி செய்வதென்றால் ஆட்டோ திட்டத்தையும் தேர்வு செய்யலாம். இறுதியாக, புகைப்படம் மற்றும் கையொப்பம் Jpeg  ஃபார்மெட்டில் தனித்தனியாக 4 - 12 கேபி அளவில் இருப்பது போல் ஸ்கேன் செய்து குறிப்பிட்ட இடத்தில் அப்லோட் செய்ய வேண்டும்.

பணம் செலுத்துதல்! 

நிறைவாக வங்கியின் நெட் பேங்கிங் / டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு மூலம் முதலீட்டுத் தொகையை (குறைந்தபட்சம் ரூ.500) செலுத்தினால் ஆன்லைனிலோ அல்லது மின்னஞ்சலுக்கோ ஒரு வெல்கம் கிட் அனுப்பப்படும். அந்த கிட்டில் பிரான் எண் (PRAN No), IPIN / TPIN எண்கள் வழங்கப்படும். அதோடு என்பிஎஸ் திட்டம் குறித்த விவரங்கள் அடங்கிய கையேடும் இருக்கும்.

தொடர்ந்து முதலீடு செய்ய! 

இதில் தொடர்ந்து முதலீடு செய்ய https://enps.nsdl.com/eNPS/LandingPage.html என்கிற லிங்கில் கான்ட்ரிபியூஷன் என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்து பிரான் எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டால், உங்கள் செல்போனுக்கு ஓடிபி எண் அனுப்பப்படும். அதன்பின் தந்துள்ள வங்கிக் கணக்கின் நெட் பேங்கிங்/ டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு வசதி மூலம் முதலீடு செய்யலாம்.

இனி ஆன்லைனில் ஈஸியாக என்பிஎஸ்-ல் முதலீடு செய்யலாம்!