1

இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பல்வேறு நண்பர்களிடமிருந்தும், பல்வேறு இணைய தளங்களிலும், செய்திதாள்கள் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் இங்கு தொகுத்து பகிரப்படுகிறது.. எனவே இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தன்மை கூற இயலாது.. இத்தகவல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது....

Monday, December 26, 2016

வருமான வரி சேமிப்பு


    வருமான வரி சேமிப்பது பற்றிய எளிமையான ஆங்கில கோப்பு இத்துடன் இனைக்கப்பட்டுள்ளது.அக்கோப்பு நமது ஆசிரியர்களுக்கு பயன்படும் என்ற எண்ணத்தில் இங்கு பதிவேற்றம் செய்துள்ளோம்.இக்கோப்பினை Download செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.

Download செய்ய இங்கு click செய்யவும்..

Wednesday, November 2, 2016

மாத சம்பளம் தயார் செய்யும் முறை !!
ஒரு மாத சம்பளத்திலிருந்துஅடுத்த மாத சம்பளம் தயார்செய்ய..




Step:1

www.epayroll.tn.gov.in என்றஇணயதள முகவரிக்குசெல்லவும். தோன்றும் திரையில் D login-க்கான User Name மற்றும்Password  ஐடைப் செய்து Loginசெய்யவும்.

Step:2


Bill Passing (DDO)-க்கானபக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல் உள்ள Edit Installment என்பதைகிளிக் செய்யவும்.

Step:3

Do you want to edit installment Oct-2016 to Nov-2016? Yes No என்பதில் Yes ஐகிளிக் செய்யவும். Edit Installment successfullyஆன பிறகு Logout செய்யவும்.

Step:4

பின்னர் தோன்றும்திரையில் A login-க்கான User Name மற்றும் Password ஐடைப் செய்துLogin செய்யவும்.

Step:5

Bill Preparation (Jr.Asst)-க்கானபக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல் உள்ள Pay Bill Reportsஎன்பதை கிளிக் செய்யவும்.


Step:6

Pay Bill Reports என்பதன் கீழ்வரும் ஆப்ஷன்களுள் Pay Calculation என்பதை கிளிக் செய்யவும். Choose Bill View என்பதில் Bill Selectசெய்து

Submit கொடுக்கவும்.Pay Calculation Completed செய்என வந்தபின் OK கொடுக்கவும்.

Step:7

Pay Statement என்பதைகிளிக் செய்து Bill Type-ல் Bill Selectசெய்து  Generate Report என்பதைகிளிக் செய்யவும். Generate ஆகும்Pay Statement ஐ download செய்துகொள்ளவும்.

Step:8

Schedule என்பதை கிளிக்செய்து Bill Type-ல் Bill Selectசெய்யவும் பிறகு View Option-ல் All Schedule-ஐClick செய்து பின்னர் View Report என்பதை கிளிக் செய்யவும். Generateஆகும் Schedules ஐ download செய்துகொள்ளவும்.


Step:9

ECS Report என்பதை கிளிக்செய்து Select Bill Type-ல் Bill Selectசெய்யவும். பிறகு Generate Report என்பதைகிளிக் செய்யவும். Generate ஆகும்.  ECS Report ஐ download செய்துகொள்ளவும்.

Step:10

Download செய்த Reportsஅனைத்தையும் ஒரு முறைபழைய Bill உடன் சரிபார்த்துக்கொள்ளவும்.சரியாக இருப்பின்Bill Forward என்ற ஆப்ஷனைகிளிக்

செய்து Bill Select செய்யவும்.எத்தனை Employees அந்த Bill-ல்உள்ளனர் என்பதை காட்டும்.அதைசரிபார்த்த பின்னர் கீழே உள்ளBill Forward என்ற பட்டனை அழுத்தவும்.Bill Forwarded Successfully என வந்த பின் Log Out செய்யவும்.

Step:11

பின்னர் தோன்றும்திரையில் D login-க்கான User Name மற்றும் Password ஐடைப் செய்துLogin செய்யவும். Pay Bill Reports என்பதை கிளிக் செய்யவும் அதன் கீழ்வரும் ஆப்ஷன்களுள் Bill Approval என்பதை கிளிக் செய்யவும். Bill Select செய்து Bill Approval கொடுக்கவும். Bill Approved Successfully எனவந்த பின் Log Out செய்யவும்.

Step:12

பின்னர் தோன்றும்திரையில் A login-க்கான User Name மற்றும்  Password ஐடைப் செய்துLogin செய்யவும். Pay Bill Reportsஎன்பதை  கிளிக் செய்யவும்.பின் ECS Report என்பதை கிளிக் செய்துSelect Bill Type-ல் Bill Select செய்யவும்பிறகு Generate Report என்பதைகிளிக்  செய்யவும். Bill Generate ஆனபிறகு Download SES File என்பதைகிளிக் செய்யவும்.Download ஆன SES File ஐ CD யில் Copy செய்துகொள்ளவும். பின் Log Out செய்துவிடவும்.அவ்வளவு தான் Bill Ready.


குறிப்பு:

Form 100 மற்றும் Certificate ஆகியவற்றை தனியாக தயார்செய்து கொள்ள வேண்டும்.

Sunday, October 16, 2016

அரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016 உடற்கல்வி ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு
















Monday, September 12, 2016

NHIS 2016 - பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ள இணைப்பில் புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


CLICK HERE..
Tax benefits on buying and selling a house


     Even though WiFi has become a necessity that we can’t live without in these times, the Roti-Kapda-Makaan trinity remains the eternal Indian dream. Within it, the dream to own a house is a dream that most of us strive very hard to fulfill. All of us want a house of our own, which we can turn into a home. We work hard and save harder to make this dream come true. And to aid our endeavors, we take home loans as well.

It is estimated that a majority of Indians have a home loan. But unfortunately, not everyone who takes a home loan understands the tax benefits that they can claim on the loan. These benefits can reduce your tax burden in a major way. Let’s understand how.
அரசாணை:240 இன் படி மறு ஊதிய நிர்ணயம் செய்வது குறித்த செயல்முறைகள்!!















Sunday, July 24, 2016

A.E.E.O CAN GIVE PERMISSION TO SEC.GR TRS TO STUDY M.PHIL/P.HD PART TIME OR DISTANCE EDUCATION




Wednesday, July 20, 2016


யாண்டெக்ஸ்... ரஷ்யாவின் கூகுள்...



   சீனாவில் பெய்டு, தென்கொரியாவில் நேவர், செக் குடியரசில் செஸ்னம்..!
இவை எல்லாமே தேடியந்திரங்கள். சாதாரணமான தேடியந்திரங்கள் அல்ல, அந்தந்த நாடுகளின் கூகுள்கள் இவை. அதாவது, இந்த நாடுகளில் எல்லாம் இவைதான் அதிகம் பயன்படுத்தப்படும் முன்னணி தேடியந்திரங்களாக இருக்கின்றன. இதன் பொருள், இந்த நாடுகளில் கூகுள் நம்பர் ஒன் தேடியந்திரம் அல்ல என்பதுதான்.

  தேடியந்திரம் என்றால் கூகுள் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இது ஆச்சர்யத்தை அளிக்கலாம். ஆனால், உலகமே கூகுளில்
Rio 2016 Olympics: Complete qualify list of  India players for Olympics

Archery

Atanu Das
Deepika Kumari
Laxmirani Majhi
Bombayla Dev

Atheletics

Ankit Sharma (Long Jump)
Inderjeet Singh (Shot Put)
Vikas Gowda (Discus Throw)
Seema Antil (Discus Throw)
Manpreet Kaur (Shot Put)
Gurmeet Singh (men’s 20km walk)
Baljinder Singh (men’s 20km walk)
Irfan Kolothum Thodi (men’s 20km walk)
Sandeep Kumar (men’s 50km walk)
Manish Singh Rawat (men’s 50km walk)
Nitender Singh Rawat (Marathon)
Thonakal Gopi (Marathon)
Kheta Ram (Marathon)
Muhammad Anas (400m)
Lalita Babar (3000m steeplechase)
Tintu Luka (800m)
Kavita Raut (Marathon)
Sudha Singh (Marathon)
OP Jaisha (Marathon)
Khushbir Kaur (Walk)
Sapna Punia (Walk)
Dutee Chand (100m)
Sarbani Nanda (200m)

Badminton

Saina Nehwal (Women’s singles)
PV Sindhu (Women’s singles)
Kidambi Srikanth (Men’s singles)
Manu Attri and Sumeeth Reddy (Men’s Doubles)
Jwala Gutta and Ashwini Ponnappa (Women’s doubles)

Boxing

Shiva Thapa (56kg)
Manoj Kumar (61kg)
Vikas Krishan (75kg)

Judo:

Avtar Singh

Gymnastics:

Dipa Karmakar

Hockey:

Men’s team – 16 members
Women’s team – 16 members

Rowing:

Dattu Bhokanal (Singles sculls)

Shooting:

Jitu Rai
Apurvi Chandela
Gagan Narang
Abhinav Bindra
Gurpreet Singh
Prakash Nanjappa
Chain Singh
Mairaj Ahmed Khan
Heena Sidhu
Kynan Chenai
Ayonika Paul
Manavjit Singh Sandhu

Table Tennis:

Achanta Sharath Kamal
Manika Batra
Soumyajit Ghosh
Mouma Das

Tennis:

Rohan Bopanna (Men’s doubles, Mixed doubles)
Leander Paes (Men’s doubles)
Sania Mirza (Women’s doubles, Mixed doubles)
Prarthana Thombare (Women’s doubles)

Weightlifting:

Sivalingam Sathish Kumar (Men’s 77kg)
Saikhom Mirabai Chanu

Wrestling:

Narsingh Pancham Yadav (Men’s FS 74kg)
Yogeshwar Dutt (Men’s FS 65kg)
Hardeep Singh (Men’s GR 98kg)
Sandeep Tomar (Men’s FS 57kg)
Ravinder Khatri (Men’s GR 86kg)
Babita Kumari (Women’s 55kg)
Vinesh Phogat (Women’s 48kg)
Sakshi Malik (Women’s 60kg)


WE WISH OUR INDIANS TO WIN AND BRING GLORY TO OUR COUNTRY..

Monday, June 20, 2016

கூடுதலாக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் "due notice" வழங்கியபின்னர் பிடித்தம் செய்யப்பட வேண்டும்...!




தமிழகத்தின் டாப் - 50 இன்ஜினியரிங் கல்லூரிகள்


1)பி.எஸ்.ஜி. இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு ரிசர்ச் - கோவை - 97.32சதவீதம்

2)கே.எஸ்.ஆர். காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - நாமக்கல்- 94.45 சதவீதம்

3)சென்ட்ரல் எலெக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (சிஎஸ்ஐஆர்) காரைக்குடி- சிவகங்கை-93.48 சதவீதம்

4)வி.எஸ்.பி. இன்ஜினியரிங் காலேஜ் - கரூர்- 93.42 சதவீதம்

5)பி.எஸ்.ஆர். இன்ஜினியரிங் காலேஜ் - விருதுநகர்-93.07 சதவீதம்


6)வின்ஸ் கிரிஸ்டின் உமன்ஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - கன்னியாகுமரி-91.78சதவீதம்

7)மெப்கோ இன்ஜினியரிங் காலேஜ் - விருதுநகர்-91.61 சதவீதம்

8)ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம்-91.58 சதவீதம்

9)கே. ராமகிருஷ்ணன் இன்ஜினியரிங் காலேஜ் - திருச்சிராப்பள்ளி-90.37சதவீதம்

10)ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - காஞ்சிபுரம்-89.51சதவீதம்

11)ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - விருதுநகர்-88.52 சதவீதம்

12)விவேகானந்தா மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - நாமக்கல்-88.35சதவீதம்

13)ராமகிருஷ்ணன் காலேஜ் ஆப் டெக்னாலஜி - திருச்சிராப்பள்ளி-87.96சதவீதம்

14)அருணாசலா மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - கன்னியாகுமரி-87.61சதவீதம்

15)ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம்- 86.70 சதவீதம்

16)வேலம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - திருவள்ளூர்-86.36 சதவீதம்

17)ஆதிபராசக்தி இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம் -86.16 சதவீதம்

18)வீரம்மாள் இன்ஜினியரிங் காலேஜ் - திண்டுக்கல்-85.93சதவீதம்

19)விவேகானந்தா மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - சேலம்-85.74சதவீதம்

20)வேலம்மாள் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - மதுரை-85.42சதவீதம்

21)ஆர்.எம்.கே. இன்ஜினியரிங் காலேஜ் - திருவள்ளூர்-85.32 சதவீதம்

22)கவர்மெண்ட் இன்ஜினியரிங் காலேஜ் - திருநெல்வேலி-85.09 சதவீதம்

23)பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம்-84.86 சதவீதம்

24)கவர்மெண்ட் இன்ஜினியரிங் காலேஜ் - பர்கூர் - கிருஷ்ணகிரி-84.74 சதவீதம்

25)ஆர்.எம்.டி. இன்ஜினியரிங் காலேஜ் - திருவள்ளூர் -84.68 சதவீதம்

26)நாடார் சரஸ்வதி இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - தேனி-84.53சதவீதம்

27)ஆர்.எம்.கே. இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - திருவள்ளூர்-83.97சதவீதம்

28)சாராநாதன் இன்ஜினியரிங் காலேஜ் - திருச்சிராப்பள்ளி-83.96 சதவீதம்

29)பொன்ஜெஸ்லி இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம்-83.27 சதவீதம்

30)பி.ஏ. இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - கோவை-83.08 சதவீதம்

31)கொங்குநாடு இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - திருச்சிராப்பள்ளி-83.07 சதவீதம்

32)மீனாட்சி சுந்தரராஜன் இன்ஜினியரிங் காலேஜ் - சென்னை-81.57சதவீதம்

33)வி.எஸ்.பி. இன்ஜினியரிங் காலேஜ் டெக்னிகல் கேம்ஸ் - கோவை-81.52சதவீதம்

34)மஹாராஜா மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - ஈரோடு-81.08 சதவீதம்

35)இன்ஸ்டிடியூட் ஆப் ரோடு அண்ட் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி - ஈரோடு-80.73 சதவீதம்

36)நந்தா இன்ஜினியரிங் காலேஜ் - ஈரோடு-79.96 சதவீதம்37)ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் காலேஜ் - கோவை-79.94 சதவீதம்

38)பி.எஸ்.ஆர். ரங்கசாமி மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - விருதுநகர்-79.68சதவீதம்

39)ஹோலி கிராஸ் இன்ஜினியரிங் காலேஜ் - தூத்துக்குடி-79.44 சதவீதம்

40)அஞ்சலை அம்மாள் மஹாலிங்கம் இன்ஜினியரிங் காலேஜ் - திருவாரூர்-79.31சதவீதம்

41)வேலம்மாள் இன்ஜினியரிங் காலேஜ் - திருவள்ளூர்-79.02 சதவீதம்

42)யுனிவர்சிடி இன்ஜினியரிங் காலேஜ் - திண்டுக்கல்-78.85 சதவீதம்

43)அல்ட்ரா மகளிர் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - மதுரை-78.84சதவீதம்

44)என்.எஸ்.என். இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - கரூர்-78.82 சதவீதம்

45)உடையப்பா இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - தேனி-78.79சதவீதம்

46)ஆதிபராசக்தி இன்ஜினியரிங் காலேஜ் - வேலூர்-78.74 சதவீதம்

47)எஸ்எஸ்எம் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி - திண்டுக்கல்-78.67 சதவீதம

48)தேனி கம்மாவர் சங்கம் காலேஜ் ஆப் டெக்னாலஜி - தேனி-78.58 சதவீதம்

49)பிரின்ஸ் டாக்டர் கே. வாசுதேவன் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - காஞ்சிபுரம்-78.18 சதவீதம்

50)ஸ்ரீ ஷண்முகா இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - சேலம்-78.13சதவீதம்...

Monday, March 28, 2016

விளையாட்டு வீரர்களுக்கு வனத்துறை பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு: 
பணி விதிமுறையில் திருத்தம் செய்து அரசு உத்தரவு.


  விளையாட்டு வீரர்களுக்கு வனத்துறை பணிகளில் 10 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டு 14 ஆண்டுகளுக்குப் பிறகு பணிவிதிமுறையில் திருத்தம் செய்து அரசு உத்தரவு பிறப் பித்துள்ளது.தமிழக அரசின் வனத்துறை யில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தலைமை வனப் பாதுகாவலர், வனப்பாதுகாவலர் என பல்வேறு நிலைகளில் அதிகாரிகளும், வனவர்கள், வனக் காப் பாளர்கள், வனக்காவலர்கள் உள் ளிட்ட சார்நிலைப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
வேலைவாய்ப்பு பதிவு மூப்பை இணையதளத்தில் அறியலாம்.


  வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மூப்பின் நிலையை www.tn.gov.inemployment என்ற இணையதளத்தில் அறியலாம். அனைவரும் தங்களது படிப்பு குறித்த விவரங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர்.

இதுதவிர, கூடுதல் படிப்புகளையும் பதிந்தும், முந்தைய பதிவை அவ்வப்போது புதுப்பிக்கவும் செய்கின்றனர். இந்த பதிவு மூப்பின் நிலவரத்தை இணையதளத்தில் தெரிந்துகொள்ள வழி செய்யப்பட்டுள்ளது

2016 ஜூன் இல் தேர்வு நிலை அடைய உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்காக கீழே உள்ள அரசாணை...










பள்ளிகல்வித் துறை புதிய மாதிரி படிவங்கள் - 
உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி வரன் முறை படிவம் / தகுதிகாண் பருவம் படிவம் /தேர்வு நிலை படிவம் /சிறப்பு நிலை படிவம் / மற்றும் அதனுடன் இணைக்க வேண்டிய படிவங்கள்


  CLICK HERE   TO DOWNLOAD... 
RTI :குறைந்தபட்சம் எத்தனை நாட்கள் மருத்துவ விடுப்பு எடுக்கலாம் ?





Monday, February 22, 2016

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

 
   தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.
சட்டம் எதற்கு?

************************
அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக்
கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும். தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.

Sunday, February 7, 2016

அரசு விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

 
  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

   தமிழக அரசு விளையாட்டுத் துறையின் கீழ் செயல் பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் மூலமாக கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்காக சிறப்பு விளையாட்டு விடுதிகள் சென்னையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

  2016-17-ம் ஆண்டுக்கான சிறப்பு விளையாட்டு விடுதியில் சேருவதற்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர்கள் தடகளம், கூடைப்பந்து, குத்துச் சண்டை, கையுந்து பந்து, டேக்வாண்டோ, நீச்சல், வாள் சண்டை, துப்பாக்கி சுடுதல், பளு தூக்குதல், ஜூடோ, இறகுப் பந்து, மேசைப் பந்து மற்றும் மாணவி களுக்கு தடகளம், குத்துச்சண்டை, கையுந்து பந்து, கால்பந்து, டேக்வாண்டோ, நீச்சல், வாள் சண்டை, துப்பாக்கிச் சுடுதல், பளு தூக்குதல், ஜூடோ, இறகுப் பந்து, மேசைப் பந்து ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படும்.

  இந்த விடுதியில் சேர மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் சம்பந்தப்பட்ட விளையாட்டில் மாநில அளவில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவங் கள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 18-ம் தேதிக்குள் சிறப்பு நிலை விளையாட்டு விடுதி, அறை எண் 76, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை-3 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவும். தேர்வு வரும் 20, 21-ம் தேதிகளில் நடைபெறும்.
பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை - அரசு ஊழியர்களின் விடுப்பு - திருத்தம் மற்றும் புதிய உத்தரவு பிறப்பித்து அரசு முதன்மை செயலர் உத்தரவு - செயல்முறைகள் (19/01/2016)








இரண்டு CPS கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு !!!



ஆன்லைன் மூலம் என்பிஎஸ்... இனி ஈஸியா முதலீடு செய்யலாம்!


   இன்றைய தேதிக்கு இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல பென்ஷன் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்கது நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்பிஎஸ்) எனப்படும் ஒய்வுக் காலத் திட்டம்தான். இதுநாள் வரை இந்தத் திட்டத்தில் நேரடியாக மட்டும் முதலீடு செய்யும்படி இருந்தது. இப்போது அது ஆன்லைன் மூலமாகவும் முதலீடு செய்கிற மாதிரி மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இனி ஆன்லைனில் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.



   என்பிஎஸ் திட்டத்தில் வங்கி, நிதி நிறுவனங்கள் அஞ்சலக அலுவலகங்கள் மூலம் முதலீடு செய்யலாம்.  ஆன்லைனில் முதலீடு செய்ய  https://enps.nsdl.com/eNPS/LandingPage.html என்கிற லிங்கை சொடுக்கினால், நேரடியாக  இ-என்பிஎஸ்-ன் வலைதளத்துக்கு செல்லும். நீங்கள் புதிதாக பதிவு செய்துகொள்ளப் போகிறீர்கள் எனில், ரெஜிஸ்ட்ரேஷன் (Registration) என்பதற்குள் சென்று, நியூ ரெஜிஸ்ட்ரேஷன் என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். பிறகு, நீங்கள் இந்திய குடிமகனா அல்லது என்.ஆர்.ஐ-யா என்பதைக் குறிப்பிட்டு, டயர் 1 திட்டம் மட்டுமா அல்லது டயர் 1 மற்றும் டயர் 2 திட்டம் இணைந்த திட்டமா என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் பான் எண் மற்றும் எந்த வங்கிக் கணக்கு, என்பிஎஸ் திட்டத்துடன் இணைக்கப்பட இருக்கிறது என்பதையும் சொல்ல வேண்டும்.



தனிநபர் விவரம்!

இப்படி பதிவு செய்யும்போது முதலீடு செய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் அதாவது, முதலீடு செய்பவர் பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் கேட்கப்படும். பிறப்புச் சான்றுகளில் (ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, 10, 12-வது பள்ளிக்கூட மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை) ஏதேனும் ஒன்றை அதன்  எண்ணுடன் குறிப்பிட்டால், நாம் பதிவு செய்ததற்கான எஸ்எம்எஸ்  செல்போனுக்கு வரும்.

முகவரி!

இதில் பதிவு செய்யும்போது தற்காலிக மற்றும் நிரந்தர முகவரிச் சான்று தரவேண்டும். ரேஷன் அட்டை, வங்கி பாஸ் புக், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்திய ரசீது, டெலிபோன் பில் ரசீது, சொத்து மற்றும் வீட்டு வரி ரசீது போன்ற ஆவணங்களை இவற்றுக்காக தரலாம்.

 வங்கி விவரம்!

எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் இ-என்பிஎஸ் ஆரம்பித்துவிட முடியும் என்பதில்லை. அலஹாபாத் பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, கார்ப்பரேஷன் பேங்க், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், சவுத் இந்தியன் பேங்க் சிண்டிகேட் பேங்க், தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க், லட்சுமி விலாஸ் பேங்க், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற சில வங்கி களோடு மட்டுமே இந்தத் திட்டம் இணைக் கப்பட்டு உள்ளது.

ஃபண்ட் நிறுவனங்கள்! 

இதுவரை ஆறு பென்ஷன் ஃபண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களே இதில் உள்ளன. அதில் ஏதேனும் ஒரு நிறுவனத்தை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். நீங்களே முதலீடு செய்வதாக இருந்தால் ஆக்டிவ் திட்டத்தையும், அரசு வழிகாட்டுதல்படி செய்வதென்றால் ஆட்டோ திட்டத்தையும் தேர்வு செய்யலாம். இறுதியாக, புகைப்படம் மற்றும் கையொப்பம் Jpeg  ஃபார்மெட்டில் தனித்தனியாக 4 - 12 கேபி அளவில் இருப்பது போல் ஸ்கேன் செய்து குறிப்பிட்ட இடத்தில் அப்லோட் செய்ய வேண்டும்.

பணம் செலுத்துதல்! 

நிறைவாக வங்கியின் நெட் பேங்கிங் / டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு மூலம் முதலீட்டுத் தொகையை (குறைந்தபட்சம் ரூ.500) செலுத்தினால் ஆன்லைனிலோ அல்லது மின்னஞ்சலுக்கோ ஒரு வெல்கம் கிட் அனுப்பப்படும். அந்த கிட்டில் பிரான் எண் (PRAN No), IPIN / TPIN எண்கள் வழங்கப்படும். அதோடு என்பிஎஸ் திட்டம் குறித்த விவரங்கள் அடங்கிய கையேடும் இருக்கும்.

தொடர்ந்து முதலீடு செய்ய! 

இதில் தொடர்ந்து முதலீடு செய்ய https://enps.nsdl.com/eNPS/LandingPage.html என்கிற லிங்கில் கான்ட்ரிபியூஷன் என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்து பிரான் எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டால், உங்கள் செல்போனுக்கு ஓடிபி எண் அனுப்பப்படும். அதன்பின் தந்துள்ள வங்கிக் கணக்கின் நெட் பேங்கிங்/ டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு வசதி மூலம் முதலீடு செய்யலாம்.

இனி ஆன்லைனில் ஈஸியாக என்பிஎஸ்-ல் முதலீடு செய்யலாம்!

Monday, January 18, 2016

பி.எட். தொலைநிலைக் கல்வியில் மாணவர் சேர்க்கை:  புதிய விதிமுறையை கைவிட சாஸ்த்ரா துணைவேந்தர் வலியுறுத்தல்



   இளம் கல்வியியல் (பி.எட்.) மாணவர் சேர்க்
கையில் புதிய விதிமுறையைக் கைவிட வேண்டுமென தேசிய அறிவியல் கல்விக் கழகத்துக்கு சாஸ்த்ரா பல்கல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சேதுராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பாக, டெல்லியில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைவருக்கு சேதுராமன் அனுப்பியுள்ள கடித விவரம்:
பெயின்ட் பொருட்கள் - பள்ளிக் குழந்தைகள் எச்சரிக்கை!


  பள்ளிகளில் “புராஜெக்ட்” என்ற பெயரில் பெயின்டை 3 வயது குழந்தைகள் முதல் பயன்படுத்துவதால், அது குழந்தைகளின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. எனவே, இதைத் தவிர்க்க அரசும், கல்வியாளர்களும் கவனம் செலுத்த வேண்டும். இது குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்தது. எச்சரிக்கை!
பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.

பெயின்ட் பூசப்பட்ட பொருட்கள் குறிப்பாக விளையாட்டுப் பொருட்களை குழந்தைகளிடம் கொடுக்காதீர்கள்!

பெயின்ட் புதிதாக அடிக்கப்பட்ட வீடுகளில் உடனே குழந்தைகளையும் கருவுற்ற பெண்களையும் புழங்க விடாதீர்கள்! சில நாள்கள் கழித்து அந்த நாற்றம் நீங்கியபின் புழங்கவிடுங்கள்.





பெயின்ட்டில் காரீயம் கலக்கப்படுகிறது. அதன் நச்சுத்தன்மை குழந்தைகளை, கருவுற்ற பெண்களைப் பெரிதும் பாதிக்கிறது.

உலகத்தில் ஆண்டுக்கு 43 ஆயிரம் பேர் இதனால் உயிரிழக்கின்றனர். லட்சக்கணக்கில் பாதிக்கப்படுகின்றனர்.

மஞ்சள், சிவப்பு பெயின்டில் காரீயத்தின் அளவு அதிகம். விலை குறைவான, மட்டரக பெயின்ட்டைப் பயன்படுத்தாதீர்கள்

தரமற்ற பென்சில், வாட்டர் கலர், க்ரையான் போன்றவற்றைக் குழந்தைகளிடம் தராதீர்கள்!

பெயின்ட் அடித்த பொம்மைகள், பேட்டரிசெல்கள், கலாய் பூசிய பாத்திரங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், சால்ட்ரிங் பொருட்களை குழந்தைகளிடம் கொடுக்காதீர்கள்.

இவற்றை குழந்தைகள் வாயில் வைக்கும் போது அவற்றிலுள்ள காரீயம் இரத்ததில் கலந்து உடல் நலம் கெடுக்கும்; உயிருக்குக் கேடு விளைவிக்கும்!

- மஞ்சை வசந்தன்
பாஸ்போர்ட்டு அப்ளை செய்வது எப்படி?


முதலில் கீழே உள்ள  link  மூலம் ஆன்லைனில் APPLY செய்து விடுங்கள்



COPY & PASTE THIS LINK
https://passport.gov.in/pms/Information.jsp


Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.

அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்

Service
Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)

Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு
கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)

First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து
ரத்த அழுத்தம் என்றால்.......,?


ஆற்றில் தண்ணீர் ஓடுவது போல ரத்தமானது ரத்தக்குழாய்களில் ஓடுகிறது.

இது, இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும்போது வேறு ஒரு வேகத்திலும் செல்கிறது.

இந்த வேகத்திற்குப் பெயர்தான்  ‘ரத்த அழுத்தம்’ (Blood pressure).
பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம்  120/80 மி.மீ. பாதரச அளவு என்று இருந்தால், அது இயல்பு அளவு.

இதில் 120  என்பது சிஸ்டாலிக் அழுத்தம் (Systolic pressure).

அதாவது, இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகின்ற அழுத்தம்.
இதைத் தமிழில் ‘சுருங்கழுத்தம்’ என்று சொல்கிறோம்.

80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம் (Diastolic pressure).

அதாவது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து உடலில் இருந்து வருகின்ற ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது.

அப்போது ஏற்படுகின்ற ரத்த அழுத்தம் முன்னதைவிடக் குறைவாக இருக்கும்.
இந்த அழுத்தத்தை ‘விரிவழுத்தம்’ என்று அழைக்கிறோம்.

Thursday, January 7, 2016

வருமானவரி செலுத்துவோர் கவனத்திற்கு 













Sunday, January 3, 2016

RTI --குறைந்தபட்சம் எத்தனை நாட்கள் மருத்துவ விடுப்பு எடுக்கலாம் ?