உங்களை ஜி.எஸ்.டி பெயரிலும் ஏமாற்றலாம்!
நாம் செலுத்தும் வரி சரியானதா, செலுத்தும் வரி உரிய முறையில் மத்திய/மாநில அரசைச் சேருகிறதா, குறிப்பாக, ஜி.எஸ்.டி வரி வசூலிக்கும் நிறுவனங்கள் அனைத்துமே, அந்த வரி வசூலிக்கத் தகுதியுடையதா என்பதைப் பற்றி நாம் என்றாவது... எப்போதாவது யோசித்திருக்கிறோமா?
ஹோட்டல், டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், திரையரங்கம், மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை அங்காடிகள், பலசரக்குக் கடை, ஜவுளிக் கடை, எலெக்ட்ரிக்கல்ஸ், ஹார்டுவேர் கடை என, அன்றாட நடவடிக்கைகளின் ஒவ்வொரு கணமும் நாம் வரி செலுத்தி வருகிறோம். வரி வசூலிப்போர் உரிய தகுதியுடையவர்தானா என்பதை, வரி செலுத்தும் முன் சற்று யோசிக்க வேண்டும். காரணம், வரிவிதிப்பு முறையின் அடிப்படையில் வரி வரம்புக்குள் இல்லாத சில நிறுவனங்களும் ஜி.எஸ்.டி., சி.ஜி.எஸ்.டி என வரி விதிப்பதாகச் சொல்லப்படுகிறது. நாம் செலுத்தும் பணம் உண்மையிலேயே ஜி.எஸ்.டி வரிதானா அல்லது அந்த நிறுவனம் நம்மை