1

இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பல்வேறு நண்பர்களிடமிருந்தும், பல்வேறு இணைய தளங்களிலும், செய்திதாள்கள் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் இங்கு தொகுத்து பகிரப்படுகிறது.. எனவே இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தன்மை கூற இயலாது.. இத்தகவல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது....

Saturday, October 24, 2015

அரசாணைகளை படித்து பொருள் அறியும் போது கவனிக்க வேண்டியவைகள் பற்றிய சில கருத்துக்கள் 


   பொதுவாக அகவிலைப்படி மற்றும் பொங்கல் போனஸ் அரசாணைகளே தமிழிலும்ஆங்கிலத்திலும் வெளிவருகின்றன. பிற ஆங்கிலத்தில் வெளியிடப்படும்அரசாணைகள் தமிழில் வெளியிடப்படுவதில்லை.அதனால் பல நேரங்களில் முழுமையான பொருள் புரியாமல், தகுதியானவர்களுக்கு உரிய பலன் கிடைப்பதில் தேவையற்ற சிரமங்கள் ஏற்படுகின்றன.


  தமிழில் வெளியிடப்படாமல் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டாலும், ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் அரசாணைகளை தெளிவாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவராக இருந்து அதன் வழிமுறைகளை அறிந்திருப்பது அவசியமானதாக கருதப்படுகிறது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் சில எளிய கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.

TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY(TNPESU) 2015-2015 

ACADEMIC YEAR ADMISSION NOTIFICATION - 

LAST DATE : 31.12.2015




கலப்பு திருமணம் செய்து கொண்ட SC/ST பிரிவினரின் குழந்தைகளுக்கு சாதி சான்று வழங்குவதில் பின்பற்ற வேண்டியவைகள் - ஆணை.G.O.No.(2D) 17 Date.16.8.1994.



CLICK HERE-G.O.NO;17 CERTIFICATE FOR SC/ST INTERCASTE MARRIAGE COUPLE CHILD REG...
UG-TRB-Physical Education study Materials.


UG-TRB-Physical Education study Materials. Click here...

Saturday, October 10, 2015

பிக்ஸ்ட் டெபாசிட் செய்யும் போது வரியை தவிர்ப்பது எப்படி?



   பொதுவாக நாம் பிக்ஸ்ட் டெபாசிட் செய்யும் போது வரும் வட்டியை ஒழுங்காக கவனிப்பதில்லை.ஆனால் உன்னித்து கணக்கிட்டு பார்த்தால் நமக்கு வரும் வட்டியில் 10% பிடிக்கப்பட்டதை கண்டுபிடிக்கலாம்.


   ஆமாம். பிக்ஸ்ட் டெபாசிட்டில் வரும் வட்டிக்கு வருமான வரி மூலத்திலே வங்கிகளால் பிடித்தம் செய்யப்பட்டு விடுகிறது.இதனை TDS என்று அழைப்பார்கள். அதாவது Tax Deducting At Source.வரியைப் பிடிக்கும் அரசோ, வங்கிகளோ நம்மிடம் அது பற்றிய தெளிவான விளக்கங்களை கொடுக்காததால் நாமும் தெரியாமலே விட்டு விடுகிறோம்.இதில் என்ன விந்தை என்றால் ஒருவர் வருமான வரி விளிம்பிற்குள்ளே வந்து இருக்க மாட்டார். அவருக்கும் சேர்த்து வங்கிகள் வரியை பிடித்து விடுகின்றன.
பொதுத் தேர்வை பல முயற்சிகளில் எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் அளிக்க அரசாணை வெளியீடு



  பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை பலமுறை எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் செயலர் டி.சபிதா வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:

   அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் மூலம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச்-ஏப்ரல், ஜூன்-ஜூலை, செப்டம்பர்-அக்டோபர் ஆகிய பருவங்களில் நடத்தப்படுகின்றன.இந்தத் தேர்வு எழுதுபவர்களில் 85 சதவீதம் முதல் 90 சதவீதம் பேர் மட்டுமே ஒரே முறையில் தேர்ச்சி பெறுகின்றனர். மீதமுள்ளோர் வெவ்வேறு பருவங்களில் தேர்வு எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறுகின்றனர். இதனால், அவர்கள் 2-க்கு மேற்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை வைத்திருக்கின்றனர். இவர்கள் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழைக் கோருகின்றனர். நிரந்தரப் பதிவெண் வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடியும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளார்.
உதவி பேராசிரியர் ஆக எழுதுங்கள் ’நெட்’! 



   உதவி பேராசிரியர் பணி மட்டுமின்றி, ஆராய்ச்சி படிப்பிற்கான ஊக்கத்தொகை (ஜே.ஆர்.எப்.,) பெறவும் இத்தேர்வில் தகுதி பெற வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) சார்பாக, இடைநிலை கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ.,) நடத்தப்படும் இத்தேர்வை லட்சணக்கானோர் எழுதுவதில் இருந்தே இத்தேர்வின் முக்கியத்தை உணர்ந்து கொள்ளலாம்.


 யார் எழுதலாம்?

  தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, அரசியல் அறிவியல், மேலாண்மை என மொத்தம் 99 பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் ‘நெட்’ தேர்வு எழுதலாம். மேலும், முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. முதுநிலை இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பிஎச்.டி., படித்தவர்கள் இத்தேர்வை எழுத வேண்டிய அவசியம் இல்லை.

Wednesday, October 7, 2015

IGNOU -B.Ed பட்டம் தமிழக பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டத்திற்கு இணையானது என்ற மதிப்பீடு அரசாணை ..






தொடர்புடைய பதிவு 


ஆசிரியர்கள் அஞ்சல்வழி பி.எட் பயிலும்போது கற்றல் கற்பித்தல் பயிற்சி தாம் பணிபுரியும் பள்ளியிலேயே மேற்கொள்வது தொடர்பான அரசாணை
பள்ளிகளில் காலைநேர  இறை வழிபாட்டுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்...





Monday, October 5, 2015

வருமான வரி கணக்குத் தாக்கல்: கெடு தேதி தவறியதால் என்னென்ன பாதிப்புகள்?



   வழக்கமாக, ஆடிட்டரின் தணிக்கை தேவைப் படாத வரிதாரர்கள் அவர்களின் வருமான வரி கணக்கை,முடிந்த நிதி ஆண்டை தொடர்ந்து வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.இந்த ஆண்டு (2015) வருமான வரி புதிய படிவங்கள் வெளிவர தாமதம் ஆனதால் கெடு தேதி ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகும் அதிகம் பேர் வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்பதால் செப்டம்பர் 7-ம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டது. அப்படியும் நம்மில் பலர் வரி கணக்கை தாக்கல் செய்யாமல் இருக்கிறார்கள்.

    வரி கணக்கைத் தாக்கல் செய்யாததற்கு பல காரணங்கள் இருந்தாலும், இப்படி தாக்கல் செய்யாதவர்கள் எந்தத் தேதி வரைக்கும் வரி கணக்கை தாக்கல் செய்யலாம் என்பது குறித்து சென்னையின் முன்னணி ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார் விளக்கி சொன்னார்.“வருமான வரியை மிச்சப்படுத்த மார்ச் 31-ம் தேதிக்குள் முதலீடு செய்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் கெடு தேதிக்குமுன் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது.

   தற்போதைய சூழ்நிலையில் முடிந்த 2014-15-ம் நிதி ஆண்டுக்கு  2016 மார்ச் 31 வரைக்கும்  அபராதம் மற்றும் வழக்கு எதுவும்  இல்லாமல் வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும். வரி பாக்கி இருந்தால், அந்த வரி மற்றும்  2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு 1% தனி வட்டி சேர்த்து கட்ட வேண்டும்.  வரியைக் கட்டிவிட்டு அதன்பிறகு வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி எதுவும் கட்டத் தேவை இல்லை என்றால் நேரடியாக ரிட்டர்ன்  தாக்கல் செய்துவிடலாம்.

    அப்படியும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், 2014-15ம் நிதி ஆண்டுக்கான வரி கணக்கை மார்ச் 31, 2017 வரை தாக்கல் செய்யலாம். இதை தாமதமாக வரி கணக்கு தாக்கல் செய்தல்   (Belated Return) என்பார்கள்.  இப்படி செய்யும்போது வருமான வரித் துறை அதிகாரிகள் அபராதம் விதிக்க கூடும் அல்லது வழக்கு தொடரக் கூடும்.

    அபராதமா, வழக்கா என்பது சம்பந்தப்பட்ட வருமான வரி அதிகாரியைப் பொறுத்து இருக்கிறது. அபராதம் என்கிற போது ரூ.5,000 வரைக்கும் விதிக்கப்படலாம்.   கட்ட வேண்டிய வரி பாக்கி ரூ.25 லட்சத்துக்குள் இருக்கும் போது வழக்கு தொடரப்படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 மாதத்திலிருந்து 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப் படலாம்.
கட்ட வேண்டிய வரி ரூ.25 லட்சத்துக்கு மேல் இருந்தால் 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை இருக்கும். 2014-15-ம் நிதி ஆண்டுக் கான வரி கணக்கை  2017, மார்ச் 31-க்கு பிறகு தாக்கல் செய்ய முடியாது.
இப்படி அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப் படுவது அரிதுதான். ஆனால், கட்ட வேண்டிய வரி மற்றும் அதற்கான வட்டியை நிச்சயம் வசூலித்துவிடுவார்கள்’’ என்றவர், கெடுதேதி தவறினால் ஏற்படும் இழப்புகளை பட்டியலிட்டார்.

   வருமான வரி கணக்கு தாக்கல் கெடுதேதியைத(2014-15 நிதியாண்டுக்கு செப்டம்பர் 7) தவறவிடும்பட்சத்தில் வரிக் கணக்கு ஐடிஆர் படிவத்தில் ஏதாவது தவறு இருந்தால் அதனைத் திருத்தி, திருத்தப்பட்ட வரி கணக்கு தாக்கல் (Revised Returns) செய்ய அனுமதிக்கப் படுவதில்லை. அதனால் செய்யப்பட்ட முதலீடு அல்லது செலவுகளுக்கான  வரி சலுகையை கோரி பெற தவறி இருந்தால், அதனைப் பெறமுடியாமல் போய்விடும்.கெடு தேதிக்குள் வரி கணக்கை தாக்கல் செய்யும்பட்சத்தில், குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன இழப்பை அடுத்துவரும் 8 ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லமுடியும். இந்தக் கெடு தேதியைத் தவறவிட்டுவிட்டால் உங்களுக்கு முதலீடு மூலம் ஏற்பட்டிருக்கும் இழப்பை அடுத்துவரும் ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாது.

   வரி கணக்கு தாக்கலை தாமதமாகச் செய்யும்போது, கூடுதலாக வருமான வரி கட்டியிருக்கும் பட்சத்தில் ரீ-ஃபண்ட் கிடைக்க தாமதமாகும். ஒருவருக்கு ரீ-ஃபண்ட் இருக்கிறது என்றால், அவர் எப்போது வரி கணக்கு தாக்கல் செய்கிறாரோ அப்போதிலிருந்துதான்,  ரீ-ஃபண்ட் தொகைக்கு வட்டி கணக்கிடப்படும். எனவே,  தாமதமாக வரி கணக்கை  தாக்கல் செய்தால், ரீ-ஃபண்ட் வரவேண்டியிருந்தால் குறைவான வட்டிதான் கிடைக்கும்.

      சில சமயங்களில் வரி சலுகைக்கான ஆவணங்களை பணிபுரியும் அலுவலகத்தில் சரியான நேரத்தில் கொடுக்க முடியாமல் போய் இருக்கும். அப்போது உங்களின் வரி சலுகைக்கான முதலீடு அல்லது செலவு விவரம் முழுமையாக ஃபார்ம் 16-ல் இடம் பெறாமல் போய்விடும்.ஆனால், படிவம் 16 என்பது டிடிஎஸ் பிடிக்கப்பட்டதற்கான சான்றிதழ் மட்டுமே. ஒருவர் ஏதாவது வரி சலுகையை க்ளெய்ம் செய்ய மறந்துவிட்டால், அதனை வரி கணக்கு தாக்கல் செய்யும்போது கோரிப் பெறலாம்.

    இந்த நிலையில் ஒருவர் கெடு தேதிக்குள் வரி கணக்கு தாக்கல் செய்யும்பட்சத்தில், விடுபட்ட முதலீடு அல்லது செலவுக்கான ஆதாரங்களை (ஆயுள் காப்பீடு பிரீமியம், ஆரோக்கிய காப்பீடு பிரீமியம், வீட்டுக் கடன் திருப்பக் கட்டும் அசல் மற்றும் வட்டி, மருத்துவச் செலவு, உள்ளிட்டவை) வரி கணக்கு தாக்கல் படிவத்துடன் இணைத்துக் கொடுத்து ரீ-ஃபண்ட் வாங்கிக் கொள்ளலாம்.

   கெடுதேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், சில வரி சலுகைகளை கோரி பெற மறந்திருந்தால், ரிவைஸ்டு ரிட்டர்ன் படிவத்தில் அதனைக் குறிப்பிட்டு ரீ-ஃபண்ட் கோரலாம்.இந்த ரிவைஸ்டு ரிட்டர்ன் படிவத்தை எத்தனைமுறை வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம். முதல்முறை வரி கணக்கு தாக்கல் செய்த நிதி ஆண்டு இறுதியிலிருந்து இரு ஆண்டுகளுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் ரிவைஸ்டு ரிட்டர்ன் படிவத்தை தாக்கல் செய்யலாம்.

   வரி கணக்குத் தாக்கலை ஆன்லைனில் செய்திருந்தால் ஆன்லைனிலும், ஆஃப்லைனில் செய்திருந்தால் ஆஃப்லைனிலும்தான் ரிவைஸ்டு ரிட்டர்னை தாக்கல் செய்ய முடியும். ஆன்லைனிலே தாக்கல் செய்வது நல்லது” என்றார்.
2014-15-ம் ஆண்டுக்கான  வருமான வரி கணக்கை இதுவரை தாக்கல் செய்யாத வர்கள், 2016, மார்ச் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்வீர்கள் அல்லவா?



சரியான தேதியில் வரி படிவங்களை வெளியிட நீதிமன்றம் அறிவுறுத்தல்!

  வணிகம், வர்த்தகம் நிறுவனங்களின் டேர்னோவர் ரூ.1 கோடிக்கு மேல் மற்றும் டாக்டர், வக்கீல், ஆடிட்டர் போன்ற நிபுணத்துவம் வாய்ந்த வந்தவர்களுக்கு தொழில் வருமானம் ரூ. 25 லட்சத்துக்கு மேல் இருந்தால், ஆடிட்டர் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கெடுதேதி செப்டம்பர் 30, 2015-ஆக இருக்கிறது. இவர்கள் ஐடிஆர் 4, 5 அல்லது 6 படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

  ஆனால், இந்த படிவங்கள் ஏப்ரல் முதல் தேதியில் வெளிவர வேண்டிய நிலையில், ஆகஸ்ட் மாத கடைசியில் நாலரை மாதம் தாமதமாக வெளியிடப்பட்டது. மீதியுள்ள ஒன்றரை மாதத்தில் அனைவரும் வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை. இப்போது வரை தேதி நீடிக்கப்படவில்லை.  இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம், இனிவரும் ஆண்டுகளில் ஏப்ரல்  முதலே வரி படிவங்களை அரசு கட்டாயம் வெளியிட வேண்டுமென மத்திய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.
மனுக்கள் - அரசு ஊழியர்களின் குறைகளை தீர்க்க கோரி வரும் மனுக்களை கையாள்வதில் அரசு அலுவலகங்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து பணியாளர் நிருவாகச் சீர்த்திருத்தத்துறை உத்தரவு