1

இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பல்வேறு நண்பர்களிடமிருந்தும், பல்வேறு இணைய தளங்களிலும், செய்திதாள்கள் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் இங்கு தொகுத்து பகிரப்படுகிறது.. எனவே இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தன்மை கூற இயலாது.. இத்தகவல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது....

Thursday, September 24, 2015

 பட்டா பெறுவது அவசியம்



கிராம நிர்வாக அலுவலர் மூலமாக பட்டா மாறுதல்.

   பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல்.அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இதன்படி,

* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.
அடுக்குமாடி வீடு வாங்க 



       சென்னை, கோவை நகரங்களில் அடுக்குமாடிகள் பெருகியவண்ணம் உள்ளன. பொதுமக்களும் அடுக்குமாடி வீடு வாங்க ஆர்வம் காட்டவே செய்கிறார்கள். பல வீடுகள் சேர்ந்த ஒரு குடியிருப்பாக அடுக்குமாடி இருந்தாலும் சொந்த வீடாக இருப்பதை விரும்பவே செய்கிறார்கள். அடுக்குமாடி வீடுகள் வாங்க செல்லும்போது கார்பெட் ஏரியா, பிளிண்த் ஏரியா, பில்டப் ஏரியா, யூடிஎஸ் என ஒவ்வொன்றாகக் கூறுவார்கள். அதைப் புரிந்துகொள்வதில் பலருக்கும் பல சிரமங்கள் இருக்கும். அடுக்குமாடி வீடு வாங்கும்போது பில்டர்கள் அதிகம் உபயோகிக்கும் வார்த்தைகள் பற்றியும், அவற்றின் விளக்கங்களையும் பார்ப்போமா?
விளையாடும் பொழுது மற்றும் வகுப்பறை முதலுதவி 


முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?


1. அனைத்து ஆசிரியர்களுக்கும் முதலுதவி பற்றிய பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

2. வழக்கமான பயிற்சி முறைகளில் ஆசிரியர் முதலுதவி பற்றிய விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

3. ஆசிரியர்கள் அடிப்படையான இதயம் மற்றும் நுரையீரலுக்குரிய சுவாச மீட்சி சிகிச்சை கற்றிருக்க வேண்டும்.

Saturday, September 19, 2015


பள்ளிகல்வி - உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணிவரன் முறை / தகுதிகாண் பருவம் / தேர்வு நிலை / சிறப்பு நிலை படிவங்கள் மற்றும் அதனுடன் இணைக்க வேண்டிய படிவங்கள்..


CLICK HERE TO DOWNLOAD 

Friday, September 18, 2015

உடற்கல்வித்துறை சார்ந்த தகவல்கள்-மீள்பதிவு 

   நமது GAMESTEACHER வலைப்பதிவில் இதுவரை உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தேவையான பல்வேறு அரசாணைகள் மற்றும் செய்திகள் பதிவிடப்பட்டு வருகிறது.இதுவரை பதிவிடப்பட்ட நமது துறை சார்ந்த தகவல்கள் உங்கள் வசதிக்காக ஒரே பக்கத்தில் மீள்பதிவு செய்யப்படுகிறது...

Wednesday, September 16, 2015

முதலுதவிப் பெட்டியினுள் இருக்கவேண்டிய பொருட்கள்..



 பள்ளியிலோ அல்லது வீட்டிலோ ஆபத்து எந்த நேரத்திலும் ஏற்படலாம்.
பாதுகாப்பு  எவ்வளவு அவசியமோ, அதேபோல் முதலுதவி பெட்டியும் அவசியம்.

முதலுதவி பெட்டியில் என்னென்ன இருக்க வேண்டும்?

கிருமிநாசினி: 

 உடலில் எந்த இடத்தில் அடிபட்டாலும், அடிபட்ட இடத்தின் வழியாக கிருமிகள் உடலுக்குள் செல்வதை தடுக்க, அடிபட்ட இடத்தில் தடவுவதற்கு, கிருமிநாசினி அவசியம் வேண்டும்.

பாராசிட்டமால்: 

 தலைவலி, உடல்வலி மற்றும் சாதாரண காய்ச்சலுக்கு, எப்போதாவது, 'பாராசிட்டமால்' மாத்திரையை பயன்படுத்தலாம். இரண்டு வேளை 'பாராசிட்டமால்' எடுத்தும் நிவாரணம் கிடைக்கவில்லை எனில், மறுபடியும் 'பாராசிட்டமாலை' எடுத்துக் கொள்வது நல்லது அல்ல. ஆனால், முதலுதவி பெட்டியில் இதுவும் இருக்க வேண்டும்.

காயங்கள்:

 காயமடைந்தால், அதை சுத்தப்படுத்துவதற்கு, போவைடீன் அயோடைன் மருந்து அவசியம் வேண்டும்.


தீக்காய மருந்து: 

 தீக்காயம் ஏற்படும்போது, முதலில் குளிர்ந்த நீரில், காயம்பட்ட இடத்தை கழுவ வேண்டும். பின், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். காரணம், தீக்காயம் ஏற்படும்போது உடலில் நீர்ச்சத்து குறையும். தீக்காயம் பட்டதும், 'சில்வர் சல்பாடையாசின்' உள்ள களிம்புகளை காயத்தின் மேல் தடவ வேண்டும். பெரிய அளவிலான தீக்காயங்களுக்கு, மருத்துவமனை செல்வதே நல்லது.

மாரடைப்பு:

 மாரடைப்பு மற்றும் இதயத் தசைகளுக்கு ரத்தம் பாய்வது தடைபடுவது அல்லது மாரடைப்பு வரும் என, அறிகுறிகள் தென்படும்போது, 'ஐசோசார்பைடுடைநைட்ரேட்' 10 மி., கிராம் சாப்பிட்ட பின், உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதே நல்லது. இம்மாத்திரைகள், ரத்த குழாய் அடைப்புகளை சற்றே தளர்த்தும்.

குறிப்பு: 

 உயர் ரத்த அழுத்தத்திற்கு,  அவசரத்திற்கு மருந்துகள் கொடுக்கக் கூடாது. கண்டிப்பாக, மருத்துவரின் ஆலோசனை பெற்றே சிகிச்சை பெற வேண்டும்.

ஒவ்வாமை: 

 பூச்சிக்கடி, சாப்பிட்ட உணவு நச்சு ஆகுதல், ஒவ்வாமை போன்ற பிரச்னைகளுக்கு, 'லிவோசிட்ரிசன்' மருந்து கண்டிப்பாக இருக்க வேண்டும்.

பஞ்சு: 

காயங்கள், தோல் ஒவ்வாமை, சொறி, சிரங்கு, போன்றவை ஏற்பட்டால், அந்த காயங்களுக்கு பழைய துணிகளில் துடைத்து கட்டுப் போடுவதால், தெரிந்தே ஆபத்தை விலை கொடுத்து வாங்கி கிருமிகளை உடலுக்குள் நுழைய அனுமதி கொடுக்கிறோம். எனவே, மேற்சொன்ன பிரச்னைகளுக்கு பஞ்சை பயன்படுத்தியவுடன், உடனடியாக குப்பைத் தொட்டியில் எறிந்துவிட வேண்டும்.

பேண்டேஜ்: 

எதிர்பாராமல் ஏற்படும் சிறு விபத்துகள் மற்றும் காயங்களுக்கு, பேண்டேஜ் போட வேண்டி வரும். அப்போது, கிருமி நாசினி உதவியோடு, காயப்பட்ட பகுதியை துடைத்த பின், பேண்டேஜ் போடுவது நல்லது. அவற்றை முதலுதவி பெட்டியில் வாங்கி வைப்பது நல்லது.

கையுறைகள்:

 மருத்துவம் சம்பந்தமான வேலை செய்யும் மருத்துவ பொருட்களை கையாளுவதற்கு, தரமான கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது. கையுறை அணிவதால், கைகளில் உள்ள அழுக்குகள் அடுத்தவருக்கு பரவாது.

கத்தரிக்கோல்:

 காயம்பட்ட நேரத்தில் முதலுதவி செய்யும்போது, பேண்டேஜ் மற்றும் மருந்து பொருளின் கவர்களை கத்தரிக்க, கைக்கு அடக்கமான சின்ன கத்தரிக்கோல் அவசியம்...

ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா? நாம் என்ன செய்ய வேண்டும்..?


          ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள்.    இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுகவேண்டும்?

          இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா? இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன? என்பது குறித்து அறிய சென்னையில் இருக்கும் மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரியின்  தெளிவான விளக்கம்

ஏ.டி.எம். ஃபிட் கரன்சி!

 ஏ.டிஏம். வாயிலாக கள்ள நோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஏ.டி.எம்.-ல் ரூபாய்த் தாள்களை லோடு செய்வதற்கு முன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM fit currency) மாற்றப்படுகின்றன. இந்த செயல்பாட்டின்போதே கள்ள நோட்டுகள் பெரும்பாலும் தவிர்க்கப் பட்டுவிடும். ஆர்.பி.ஐ. சொல்லும் இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும்.
அனைத்து வங்கி ஊழியர்களும் கள்ள நோட்டுகள் தொடர்பான அனைத்து நுணுக்கங் களையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம். ஏனெனில், எந்த ரூபாயாக இருந்தாலும் அது ஒருமுறையாவது வங்கிகளுக்குள் வராமல் இருக்காது. கள்ள நோட்டுகள் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தால் முதல் முறையிலேயே அதைத் தடுத்துவிடலாம்.








எப்படி வருகிறது?


 எந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷினுக்குள் பணம் லோடு செய்யப்படுகிறதோ, அந்த வங்கியில் இருந்துதான் பணம் பெறப்பட்டு லோடு செய்யப்படுகிறது. Cash In Tranceit போன்ற பெரும்பாலான ஏஜென்சிகள் இந்தச் சேவையை வங்கிகளுக்கு செய்து வருகின்றன. இவர்களின் பணி வங்கியிலிருந்து மொத்தமாகப் பணத்தைப் பெற்று, அந்தப் பணத்தை அந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷின்களுக்குள் லோடு செய்வதுதான். இவர்களின் உண்மைத்தன்மையையும், தரத்தையும் சோதனை செய்த பின்னரே அவர்களிடம் இந்த வேலையைத் தருகின்றன வங்கிகள்.


யாரை அணுகுவது?


 வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ள நோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப் படுத்துவதற்கு முன்னர், ஏ.டி.எம். சென்டருக்குள் இருக்கும் சி.வி.வி. கேமராவில் சந்தேகத்திற்குரிய ரூபாய் தாள்களில் உள்ள நம்பர்களைக் காட்டுவது அவசியம். ஏனெனில், ஏ.டி.எம். மெஷினுக்குள் போடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும் எண்கள் ஸ்டோர் ஆகாது. அதனால் சந்தேகத்திற்குரிய தாள்களை கேமராவில் காண்பிப்பதன் மூலம், வங்கியானது உங்களைப் பற்றி விசாரிக்கும்போது உங்களின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.

பின்னர் ஏ.டி.எம். லிங்டு பேங்க் (ATM Linked Bank) அதாவது, அந்த ஏ.டி.எம். எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். ஏ.டி.எம். சென்டருக்கு உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும் பிரசுரங்களில் இந்த ஏ.டி.எம். தொடர்பான பிரச்னைகளை இந்த வங்கியில் மட்டுமே தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லி தொடர்பு எண்களைத் தந்திருப்பார்கள். அதை பயன்படுத்தி தொலைபேசி மூலம் தெரியப்படுத்திவிட்டு, நேரில் சென்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.


வங்கி நடைமுறைகள்


 ஏ.டி.எம்-ல் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை மாற்றித் தருவதில் வங்கியில் இருக்கும் நடைமுறை என்ன என்று பார்ப்போம். ஏ.டி.எம்-ல் இருந்து பணம் எடுத்த ரசீதுடன் (ரசீது மிகவும் முக்கியம்) சந்தேகத்திற்குரிய ரூபாய்த்தாளுடன் வங்கியை அணுகியதும், அவர்கள் அந்த ரூபாய் கள்ள நோட்டுதானா என்று பரிசோதிப்பார்கள். அது கள்ள நோட்டு இல்லை எனில், அந்தப் பணத்தை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். கள்ள நோட்டுதான் என்று தெரியவந்தால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ரூபாய் தாளில் இருந்த எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன்றை தருவார்கள். உங்களிடம் பெறப்பட்ட ரூபாய்த் தாள் அந்த வங்கியின் ஏ.டி.எம்-ல் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்று விசாரித்து தெரிந்துகொண்டு (நீங்கள் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பணம் எடுத்ததாகச் சொல்லும் ஏ.டி.எம்.-ல் இருந்து சி.வி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோவைப் பார்ப்பதன் மூலமும், உங்களின் பின்புலன்களை விசாரிப்பதன் மூலமும் நீங்கள் உண்மையானவர் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு) அந்தக் கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய்த் தாளை தருவார்கள். இந்த விசாரணையில் கள்ள நோட்டை கொண்டு வந்தவர் மீது சந்தேகம் வந்தால் அவர் மீது வங்கியானது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கத் தயங்காது.


எஃப்.ஐ.ஆர். ஃபைல்


 பொதுவாக வாடிக்கையாளர்கள் அவர்களின் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ அல்லது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து பணத்தை எடுத்து அந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய்த் தாள்கள் கள்ள நோட்டுகளாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே அவர்களின் மீது வங்கி உடனடியாக காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். ஃபைல் செய்யும். அப்படி இல்லாமல் நான்கு அல்லது அதற்கு குறைவான தாள்கள் கள்ள நோட்டுகளாக இருந்தால் அந்தத் தாள்களை வங்கியானது வாங்கி வைத்துக்கொண்டு விசாரிக்கும். தனது ஏ.டி.எம்-ல் இருந்துதான் அந்த ரூபாய் நோட்டு வெளியேறி இருக்கிறது என்று நிரூபணமானால் உண்மையான தாள்கள் திருப்பித் தரப்படும். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை அந்தந்த மாத இறுதியில் காவல் நிலையத்தில் தெரிவிக்கவேண்டும்.

ஆர்.பி.ஐ.-ன் உதவி 

 வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து நீங்கள் எடுக்கும் ரூபாய்த் தாள்களில் மூன்று தாள்கள் கள்ள நோட்டாக இருக்கலாம் என்று சந்தேகித்து வங்கியை அணுகும்போது, அதில் இரண்டு உண்மையான தாள்கள், ஒன்று மட்டும் கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகும் உங்களுக்கு சந்தேகம் நீடித்தால் அந்த வங்கியினது கரன்சி செஸ்ட் கிளைக்கு (Currency chest branches) சென்று உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதற்கு அடுத்தும் உங்களின் சந்தேகம் நீடித்தால் ஆர்.பி.ஐ.யை அணுகி ரூபாய்த் தாள் உண்மையானதுதானா என்பதை பரிசோதித்து தெரிந்துகொள்ளலாம். இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு, www.rbi.org.in, www.paisabolthahai.rbi.org.in என்கிற ஆர்.பி.ஐ. இணையதளங்களை நாடலாம்.”

  மேலும் விவரங்களுக்கு:   கள்ள நோட்டை கண்டறிவது எப்படி?

 இனியாவது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு இருப்பது தெரிந்தால், பதற்றப்படாமல் முறைப்படி வங்கியை அணுகி, நஷ்டப்படுவதைத் தவிருங்கள்!
தேர்வுநிலை பெறுவதற்கு முன்னரே பதவி உயர்வு பெற்றவர், தேர்வுநிலை பெற்ற பின்னர் பதவி உயர்வு பெற்றவர், மூத்தோர்- இளையோர் ஊதிய விகிதம் சமன் செய்யும் அரசு ஆணை


அரசாணையை தரவிறக்கம் செய்ய இங்கு click செய்யவும்...


நன்றி : KALVISEITHI..



ஆசிரிய நண்பர்களுக்கு ஒரு எளிய ஆலோசனை


 நமது GAMES TEACHER தளத்தினை ஒவ்வொரு நாளும்  இணைய உலாவியினுள்(BROWSER) சென்று பார்வையிடுவது சற்று சிரமமான செயலாக இருப்பதால் உங்களுக்கு ஒரு எளிதான வழியினை நான் எற்கனவே அறிமுகப்படித்தியுள்ளேன்.


மீண்டும் ஒருமுறை இத்தகவலை பகிர்கிறேன்.அதாவது நீங்கள் இந்த முறையினை பின்பற்றினால் நமது gamesteacher தளத்தில் பதியப்படும் ஒவ்வொரு பதிவும் உங்கள் mail க்கு வந்துவிடும்.அதனை எளிதாக சொடுக்கி தகவல்களை பார்வையிடலாம்..

கீழ் உள்ள link கினை  click செய்து அதன் விவரங்களை பின்பற்றவும்..

 http://gamesteacher.blogspot.in/2015/04/games-teacher.html


அல்லது 


  உங்கள் MOBILE NUMBER ஐ எனது whats up எண்ணிற்கு அனுப்புவதன் மூலமும் பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்..



புதிய கேஸ் இணைப்பு எடுக்க இன்டர்நெட் மூலம் எளிய வழி



  புதிதாக கேஸ் இணைப்பு எடுப்பதற்கு அரசு ஒரு எளிய ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் பெயர் ஷாகஜ் எல்பிஜி திட்டம் (Sahaj LPG)


  தற்போது அணைத்து கேஸ் நிறுவனங்களின் டீலர்களையும் ஆன்லைன் வழியாக ஒருங்கிணைத்துள்ளனர். இந்த திட்டத்தின் பெயர் Sahaj LPG.

 அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால்,
முதலில் http://mylpg.in/docs/KYC.pdf என்ற இணைப்பில் படிவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
பிறகு mylpg.in என்ற தளத்தில் சென்று நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தையும், தேவையான அடையாள அட்டைகளையும் ஸ்கேன் செய்து ஏற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்த இரண்டு நாட்களில் தானாகவே உரிய டீலர்களை தேர்ந்தெடுத்து ஒரு ஐடியும் மின் அஞ்சலில் கொடுப்பார்கள்.





  ஐடி கிடைத்த பிறகு ஆன்லைனில் புதிய இணைப்பிறகு தேவையான கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம்.
அதன் பிறகு மூன்று அல்லது நான்கு நாட்களில் டீலர் வீட்டிற்கு வந்து சிலிண்டரை கொடுத்து செல்வார்.
ஆக, மொத்தம் ஒரு வாரத்தில் நமக்கு தேவையான இணைப்பு வீட்டை விட்டு வெளியே செல்லாமலே கிடைத்து விடும்.

அதிலும் டீலர்களுக்கு தேவையற்ற லஞ்சம் கொடுப்பதும் இதனால் ஒழியும்.

நடைமுறையில் கொஞ்சம் தாமதமானாலும் ஒரு நல்ல எளிய வழிமுறையாக மாற வாய்ப்புள்ளது.

மோடி அரசின் இத்தகைய டிஜிட்டல் தொடர்பான திட்டங்கள் வரவேற்கத்தக்க ஒன்றே!

Saturday, September 5, 2015

 உடற்கல்வி ஆசிரியர்கள் B.P.Ed, M.P.Ed உயர்கல்வி பயின்று இருந்தால் ஊக்க ஊதியம் பெறுவதற்கான அரசாணை



GO NO:95 -







GO NO:324


















Thursday, September 3, 2015

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் சிறப்புப்படி ரூபாய் 500 மற்றும் 750 பெறுவதற்கு தணிக்கை  தடை செய்யப்பட்டிருப்பின் தணிக்கை தடை நீக்குவதற்கான  விண்ணப்பம் 


விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்...