1

இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பல்வேறு நண்பர்களிடமிருந்தும், பல்வேறு இணைய தளங்களிலும், செய்திதாள்கள் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் இங்கு தொகுத்து பகிரப்படுகிறது.. எனவே இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தன்மை கூற இயலாது.. இத்தகவல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது....

Friday, July 24, 2015

பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் தொடர்பான அரசாணை:


CLICK HERE-G.O.No. 270 Dt : July 10, 2012- SURPLUS TRS DEPLOYMENT- G.O REG
பான் கார்டு முகவரியை ஆன்லைனில் எளிமையாக மாற்றுவது எப்படி?




  ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் புது முகவரிக்குச் மாற்றினால், அதை உடனே பான் கார்டில் பதிவு அல்லது சரி செய்யவேண்டியது அவசியம். பான் கார்டில் உள்ள முகவரி வருமான வரித்துறை பதிவு செய்யப்படுவதால் இதனை உடனடியாகத் திருத்துவது சாலச்சிறந்தது. இதனை நீங்கள் எளிமையாக ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம். ஆன்லைனில் பான் கார்டு முகவரியைத் திருத்தும் வழிகள்

இணைய முகவரி-  https://tin.tin.nsdl.com/pan/changerequest.html

 அந்த இணைய முகவரிக்குச் சென்று PAN Data Request Form என்ற தொடர்பில் மாற்றம் அல்லது திருத்தம் தொடர்பான (changes or correction) வசதியை பயன்படுத்த வேண்டும். இந்த விண்ணப்பத்தில் “update communication address” என்ற கோரிக்கையில் டிக் செய்ய மறந்து விடாதீர்கள்.




முக்கிய விபரங்கள்:

மாற்றங்களுக்கு விண்ணப்பத்தில் அனைத்து கட்டாய விவரங்களையும்   (* குறியிடப்பட்ட விவரங்கள்) பூர்த்தி செய்து மாற்றம் தேவையான இடங்களில் எதிரே இடது புறம் கொடுக்கப்பட்டிருக்கும் பெட்டியில் தேர்வு (செலக்ட்) செய்யவேண்டும்.

கட்டணம்:

உங்கள் தொடர்பு முகவரி இந்தியாவிற்குள் இருந்தால் பான் கார்டை அனுப்ப ரூபாய் 105 செலுத்த வேண்டும் (93 ருபாய் மற்றும் 12.36 சதவிகிதம் சேவை வரி).


கிரெடிட் கார்டுக்கு கூடுதல் கட்டணம்:

கட்டணத்தை டிமாண்ட் டிராப்ட், காசோலை, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது இணைய வங்கிதளம் மூலமாகச் செலுத்தலாம். கிரெடிட் கார்டு உபயோகத்திற்கு 2 சதவிகித கூடுதல் கட்டணம் உண்டு.

ரசீது:

கட்டணம் செலுத்துகை முடிந்த பிறகு அதற்கான ரசீது (acknowledgement) திரையில் தெரியும். அதனை நீங்கள் உங்கள் கணினியில் பதியவோ அல்லது பிரிண்ட் செய்தோ வைத்துக்கொள்ளலாம்

புகைப்படங்கள்:

தனி நபர் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின் இடதுபுறத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தங்களுடைய அண்மையில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்களை ஒட்டி பாதிப் புகைப்படத்திலும் பாதி விண்ணப்பத்தில் வருமாறும் கையொப்பமிட வேண்டும்.

விண்ணப்பம்

 இந்த ரசீது அல்லது விண்ணப்பத்தைப் புகைப்படத்துடன் கையொப்பமிட்ட பின்னர் (தனி நபர்களுக்கு மட்டும்) அதனுடன் கட்டணத்திற்கான டிடி அல்லது காசோலை (ஆன்லைனில் செலுத்தாதமல் நேரடியாகச் செலுத்த விரும்புவோர்) மற்றும் தற்போதுள்ள பான்கார்டின் நகல், முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றிற்கான அடையாளச்சான்று ஆகியவற்றுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

முகவரி

NSDL e-Governance Infrastructure Limited,
 5th floor, Mantri Sterling, Plot No. 341,
 Survey No. 997/8, Model Colony,
 Near Deep Bungalow Chowk,
 Pune – 411016′.

பின் குறிப்பு: நீங்கள் அனுப்பும் விண்ணப்ப கவரின் மீது ‘APPLICATION FOR PAN CHANGE REQUEST-Acknowledgment Number’ என்று குறிப்பிடவும் (உதாரணம்: APPLICATION FOR PAN CHANGE REQUEST-881010200000097).


Source :- tamil.goodreturns.in
ஐந்து வருட குறைவு விலையில் தங்கம், வாங்கலாமா?


  கடந்த இரு வாரங்களாக தங்கத்தின் மதிப்பு மிக வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது.


அதற்கு இரு முக்கிய காரணங்கள் குறிப்பிடப்படுகிறது.

ஒன்று,அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் கூட்டலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அதனால் தங்கத்தில் உள்ள முதலீடுகள் டாலர் நோக்கி திருப்பப்படும் வாய்ப்பு உள்ளன.

பொதுவாகவே அமெரிக்க டாலர் மற்றும் தங்கம் என்ற இரண்டுமே எதிர்மறை தொடர்பு உடையவை. டாலர் மதிப்பு கூடும் போது தங்கம் குறைந்து விடும்.

இந்த காரணத்தால் உலக அளவில் தங்க விலை குறைந்து கொண்டே செல்கிறது.

இது போக உலக அளவில் தங்கத்தை அதிக அளவில் வாங்கி குவிக்கும் இரு நாடுகள் என்பது இந்தியா மற்றும் சீனாவே.

இதில் சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பணத் தேவையை அதிகரித்துள்ளது. அதனால் அங்குள்ள தங்க முதலீட்டாளர்கள் வேகமாக தங்கத்தை விற்று வருகின்றனர்.

இது தங்க வீழ்ச்சிக்கு இரண்டாவது காரணமாக பார்க்கப்படுகிறது.






  இந்தியாவை பொறுத்தவரை தற்போது திருமண சீசன் என்பது இல்லை. அதனால் இங்கும் வாங்குபவர்கள் குறைந்து விட்டார்கள்.

இது போக, ஒரு சிலர் இன்னும் குறையலாம் என்று காத்து இருக்கின்றனர்.

இப்படி பல வித காரணங்கள் ஒன்று சேர்ந்து தங்க விலையை ஐந்து வருடம் பின்னோக்கி தள்ளி விட்டது.

தங்கம் ஒன்றும் எப்பொழுதும் உயர்ந்து கொண்டே செல்லும் உலோகம் அல்ல என்று தற்போது பலருக்கு புரிந்து இருக்கும். முக்கியமாக பெண்களுக்கு...

எப்பொழுதம் நமது மொத்த முதலீட்டில் 10% அளவாவது தங்கத்தில் வைத்து இருந்தால் முதலீடு சமநிலையில் இருக்கும்.

அதனால் இந்த விலை வீழ்ச்சியை தங்கத்தை சிறிது சிறிதாக வாங்கும் தருணமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனாலும் இன்னும் தங்க விலை குறையும் என்றும், உயரலாம் என்றும் சரி சம விகிதத்திலே கருத்து நிலவுகிறது. ஆனால் பெரிதளவு குறைவுக்கு வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.

அதனால் மொத்தமாக வாங்காமல் ஒவ்வொரு கிராமாக அல்லது ஒவ்வொரு பவுனாக தங்கத்தை நாணயங்களில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்...
சேலம் விநாயக மிஷின் பல்கலைக்கழகத்தில் படித்த -உயர்கல்விக்கு பதவி உயர்வு வழங்க நீதிமன்ற ஆணை நகல்.


சேலம் விநாயக மிஷின் பல்கலைக்கழகத்தில் படித்த -உயர்கல்விக்கு பதவி உயர்வு வழங்க நீதிமன்ற ஆணை நகல் பதிவிறக்கம் செய்ய
இங்கு CLICK செய்யவும்..

Friday, July 17, 2015

Physical Education – Bharathiar Day Games [BDG] / Republic Day Games [RDG] / Republic Day Sports [RDS] competitions for boys & girls in High & Higher Secondary Schools – Permanent instructions – Revised Rules     


                                         



Rc. No. 032845/M/S4/2015, Dated : 04.06.2015  பெற இங்கு CLICK செய்யவும்..

Rc. No. 58726 / M-E4 / 2013, dated: 03.12.2013 பெற இங்கு CLICK செய்யவும்..







பள்ளிக்கல்வித்துறை-உடற்கல்வியை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைப்படுத்துதலுக்கான அரசாணை 


  உடற்கல்வியை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைப்படுத்துதலுக்கான அரசாணை பெற இங்கு CILCK செய்யவும்.

அரசாணை -232-நாள்-10.07.2015-பள்ளிகல்வி ஆசிரியர் பொது மாறுதல் -2015-2016 ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறி முறைகள் -ஆணை-வெளியிடப்படுகிறது





















Friday, July 10, 2015

Public Services-Preparation of panel for appointment by promotion-Consolidated Instructions –Re-issued


 Lr. No. 18824/S/2005-2  Personnel and  Administrative Reforms (S) Department dated  7.10.2005 
ஆதரவின்றிச் சுற்றித்திரியும் குழந்தைகள் பற்றி தகவல் தெரிவிக்க, 

   ஆதரவின்றிச் சுற்றித்திரியும் குழந்தைகள் பற்றி தகவல் தெரிவிக்க, தொலைபேசி எண்அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், காணாமல் போன மற்றும் ஆதரவின்றிச் சுற்றித்திரியும் குழந்தைகளைக் கண்டுபிடிக்க, 'புன்னகையைத் தேடி' என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

  இதன்படி, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், குழந்தைகள் நலனோடு தொடர்புடைய துறைகள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் அடங்கிய, ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுவினர், ஜனவரியில், 3,000 குழந்தைகளைக் கண்டுபிடித்தனர். இந்நிலையில், இந்த மாதத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு மற்றும் அரசு சாரா அலுவலர்கள் அடங்கிய குழுக்கள், கோவில்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலாத் தலங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஆதரவின்றி திரியும் குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன.


 தங்கள் பகுதியில் காணாமல் போன மற்றும் ஆதரவின்றிச் சுற்றித்திரியும் குழந்தைகள் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்க விரும்பினால், 044 - 2595 2450 என்ற தொலைபேசி எண்ணையோ அல்லது, '1098' என்ற, 'சைல்டு லைன்' இலவச எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.