1

இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பல்வேறு நண்பர்களிடமிருந்தும், பல்வேறு இணைய தளங்களிலும், செய்திதாள்கள் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் இங்கு தொகுத்து பகிரப்படுகிறது.. எனவே இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தன்மை கூற இயலாது.. இத்தகவல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது....

Thursday, May 28, 2015

பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?

வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சிலசமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச்
செல்ல நேரலாம். அப்படி செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ மீண்டும் புதியசான்றிதழை விண்ணப்பித்துப்பெற்றுக் கொள்ளவேண்டும்.

ஏனெனில் இந்தச் சான்றிதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படக்கூடிய முக்கிய ஆவணங்களாகும். மேற்படிப்பு பயில, அரசின் கடன்உதவி பெற, வேலைகளில் சேரபோன்றவற்றிற்கு மட்டுமல்லாது வயதுச் சான்றாகவும் பயன்படுகிற ஆவணங்கள் இவை. பள்ளி / கல்லூரிச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்துபோனால் எப்படிபுதிய சான்றிதழ்கள்பெறுவது எப்படி?

பள்ளி மாற்றுச் சான்றிதழ்தொலைந்து போனால்:

பள்ளி மாற்றுச் சான்றிதழ்(Transfer Certificate) தொலைந்துபோனால் உடனடியாக காவல்நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்கமுடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.

விண்ணப்பத்துடன் வட்டாட்சியரிடம் பள்ளிமாற்றுச் சான்றிதழ்தொலைந்துவிட்டது என்ற சான்றிதழை வாங்கி இணைத்துக்கொடுக்க வேண்டும். இத்துடன் பள்ளிச்சான்றிதழ் பெறுவதற்கானகட்டணத்தையும் செலுத்தி ரசீதை இணைக்க வேண்டும்.

எந்தப் பள்ளியில் படித்தீர்களோஅந்தப் பள்ளித்தலைமை ஆசிரியரிடமே விண்ணப்பிக்கலாம். இணைக்க வேண்டியஆவணங்கள்: மதிப்பெண்பட்டியல் நகல், பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல், கட்டணம் செலுத்தியரசீது.

கல்லூரிச் சான்றிதழ் தொலைந்துபோனால்:

கல்லூரி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்கவேண்டும். அவர்கள்கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.

அத்துடன் சான்றிதழ் தொலைந்ததுகுறித்து வட்டாட்சியரிடம்மனு செய்யவேண்டும். அவர்அந்தப் பகுதிவருவாய் ஆய்வாளரால்விசாரணை நடத்தியபின்னர் சான்றிதழ்தொலைந்தது உண்மைஎனச் சான்றுவழங்குவார்.

பின்னர் காவல்துறை அளித்தசான்று, வட்டாட்சியர்அளித்த சான்றுஇவற்றுடன் கல்லூரிநிர்ணயம் செய்ததேடுதல் கட்டணத்தைச்செலுத்தி கல்லூரிமுதல்வருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மதிப்பெண் சான்றிதழ்தொலைந்து போனால்:

பத்தாம் வகுப்பு மற்றும்பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துபோனால் முதலில்அந்தப் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும்.

அத்துடன் மதிப்பெண் பட்டியலின்எண், பதிவுஎண், தேர்வுநடந்த வருடம், மாதம் ஆகிவற்றைக்குறிப்பிட்டு அந்தப் பகுதியில் உள்ள ஒருமுன்னணி நாளிதழில் அறிவிப்பு விளம்பரம்வெளியிட வேண்டும்.

பின்னர் காவல் நிலையத்தில் புகாரளித்ததற்கான ரசீது, பிரசுரமான விளம்பரம் ஆகியவற்றை இணைத்து பள்ளித்தலைமை ஆசிரியர் வழியாக மாவட்டக்கல்வி அதிகாரிக்குவிண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

இதனுடன் தேடுதல் கட்டணம்வங்கி வரைவோலையாகஎடுத்து அனுப்பவேண்டும்.

மனுவைப் பரிசீலித்து மாவட்டக்கல்வி அதிகாரி மாநில பள்ளிக்கல்வித்துறைக்கு விண்ணப்பம் செய்வார்.

கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்தொலைந்து போனால்:

கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டால் கடைசியாகப் படித்த கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டகல்லூரி முதல்வர் மதிப்பெண் சான்றிதழின் எண், பதிவுஎண், தேர்வுநடந்த வருடம் ஆகியவற்றைச் சரிபார்த்து பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்குப் பரிந்துரைத்து எழுதுவார்.

இத்துடன் மதிப்பெண் சான்றிதழ்பெறுவதற்கான கட்டணத்தை வங்கி வரைவோலையாக எடுத்துஅனுப்ப வேண்டும். மனுவைப் பெற்றுக்கொண்ட தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி மதிப்பெண் சான்றிதழ் வழங்குவார்.

விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்களுக்குள் இச்சான்றிதழ்கள்கிடைக்கப்பெறும்.

தனித்தேர்வர்களுக்கு:

தனித்தேர்வர்கள் நேரடியாக தேர்வுத்துறைஇயக்குநர் அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும்அதற்கு மேற்பட்டஉயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

பின்குறிப்பு:

பள்ளி / கல்லூரி மாற்றுச்சான்றிதழ்கள், பள்ளி / கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள் புதிதாகப் பெற அந்தந்த பள்ளித்தலைமையாசிரியரையோ அல்லது கல்லூரி முதல்வரையோ அணுகி மேலதிக விவரங்களையும், கட்டண விவரங்களையும் தெரிந்துகொள்ளவும்.


பத்திரப்பதிவு செய்வது எப்படி?

ஒரு நிலத்தையோ, ஒருகட்டிடத்தையோ ஒருவரிடமிருந்து வாங்கும்போதுபத்திரப்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. பத்திரம்என்பது ஒருசொத்தானது ஒருவருக்குச் சொந்தம் என்று சொல்லக்கூடிய அடிப்படை ஆவணமே. பத்திரப்பதிவை வைத்தே பட்டா மாறுதல் செய்ய முடியும். எனவே சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முக்கிய அடிப்படை ஆவணமாக பத்திரத்தைப் பதிவு செய்வது எப்படி? பத்திரப்பதிவின் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

பத்திரப் பதிவின் அவசியம்என்ன?

பத்திரப்பதிவின் நோக்கம் ஒருவீட்டை, ஒருகடையை, ஒருநிலத்தை, ஒருசொத்தை இன்னாரிடமிருந்து இன்னார் பெற்றுக்கொண்டார் என்பதற்கான அடிப்படை ஆதாரமே. அதாவது பணம்கொடுத்துப் பெற்றுக் கொண்டதற்கான ஆவணம். ஆனால்பத்திரப்பதிவு முடிந்ததும் பட்டா மாறுதல் செய்துகொள்ளும்போதே அது முழுமையாகும்.

எங்கே பதிவு செய்வது?

சொத்தின் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர்அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

என்னென்ன இணைக்க வேண்டும்?

விற்பவர், வாங்குபவர் இருவரின்முகவரிச் சான்று
விற்பவர், வாங்குபவர் இருவரின்அடையாளச் சான்று
விற்பவர், வாங்குபவர் இருவரும்ஆளுக்கொரு சாட்சியைஅழைத்துவர வேண்டும்அல்லது வாங்குபவர்மட்டுமே இரண்டுசாட்சிகளை அழைத்துவரலாம்.
விற்பவர், வாங்குபவர்களின் சமீபத்தில்எடுக்கப்பட்ட தெளிவான புகைப்படங்கள் இணைக்கப்பட வேண்டும்.
பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான ஆவணங்களின்ஒரிஜினல்கள் அனைத்தையும் வைத்திருக்க வேண்டும்.

முத்திரைத்தாளில் என்னென்ன குறிப்பிடப்படவேண்டும்?

முத்திரைத்தாளில் சொத்து சம்பந்தப்பட்டவிவரங்கள் அனைத்தும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்து உறுதி செய்யவேண்டும்.

சொத்தை வாங்குபவர் பெயர், தந்தை பெயர், முகவரி, சொத்தைவிற்பனை செய்பவரின்பெயர், அவருடையதந்தை பெயர், முகவரி, சொத்துதொடர்பான விவரங்கள், அதை விற்பனைசெய்ய அவருக்குண்டானஅதிகாரம், விற்கசம்மதித்த விவரம், சொத்து விற்பனைக்கு பரிமாறிக்கொண்ட தொகை, சாட்சிகள் பெயர், அவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கவேண்டும்.

வாங்குகிற இடத்தின் அளவு, அது இருக்கும்திசை, அதைச்சூழ்ந்துள்ள விவரக்குறிப்புகள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

கட்டணம் எவ்வளவு?

நிலம், கட்டிடம் ஆகிய சொத்துக்களை விலை கொடுத்து வாங்கினாலோ அல்லது குத்தகைக்கு ஒப்பந்தம் செய்தாலோ முறைப்படி பத்திரப்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

பத்திரப்பதிவின்போது சொத்தின் மதிப்பு, அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு இரண்டையும் ஒப்பிட்டு அதன்படி முத்திரைத்தாளில் எழுதவேண்டும். வாங்கும் சொத்து மதிப்புக்கேற்ப முத்திரைத்தாள் பயன்படுத்தப்பட வேண்டும்.

சொத்து மதிப்பில் இருந்துஎட்டு சதவீதத்தைமுத்திரைத்தாள் கட்டணமாக செலுத்த வேண்டும் (நிலத்தின்சந்தை மதிப்பில்ஏழு சதவீதத்தொகைக்கு முத்திரைத்தாள்கட்டணமாகவும், ஒரு சதவீதம் சந்தை மதிப்புத்தொகை பதிவுக்கட்டணமாகவும்பெறப்படும்.)

சொத்து வாங்குவதாகவும் விற்பதாகவும்சிலர் ஒப்பந்தம்செய்து கொள்வதுண்டு. இதற்கு ஒப்பந்தம்செய்ய 20 ரூபாய்முத்திரைத்தாள் கட்டணமும், ஒப்பந்தத்தை ரத்து செய்ய50 ரூபாய் முத்திரைத்தாள்கட்டணமும் செலுத்தவேண்டும். பதிவுக்கட்டணமாக 50 ரூபாய் செலுத்தவேண்டும்.

சொத்தின் உரிமையாளர் பல்வேறு காரணங்களால் தனது சொத்துக்களின் மீதான உரிமையைவிற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ, பராமரிப்பதற்கோ பவர்ஆஃப் அட்டர்னியாகஒருவரை நியமிப்பதுண்டு. இத்தகைய அதிகாரம்வழங்கினால் இதற்கான முத்திரைத்தாள் கட்டணமாக அசையாசொத்துக்கு 100 ரூபாயும், பதிவுக்கட்டணம் பத்தாயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும். இதுவே அசையும்சொத்துக்கு (நகை போன்றவற்றிற்கு) முத்திரைத்தாள் கட்டணம்100 ரூபாயும், பதிவுக் கட்டணமாக 50 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும்.

பத்திரப்பதிவின்போது கவனிக்க வேண்டியவை:

*ஒருவர், தான் வாங்குகிற இடத்தின் மீது எந்த வில்லங்கமும் இல்லை என்பதை வில்லங்கச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் சரிபார்த்த பிறகே இடத்தின் விலையைப் பேசிமுடிவு செய்யவேண்டும். அதையும் வழிகாட்டி மதிப்பின்படியே பத்திரப்பதிவு செய்ய வேண்டும்.

*எந்தப் பகுதியில் இடம்அமைந்துள்ளதோ அந்த எல்லைக்குட்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்துக்குச்சென்று, அந்தஇடத்துக்கான வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்பதைத்தெரிந்துகொண்டு அந்த மதிப்புக்கேற்ப முத்திரைத்தாள் வாங்கப்படவேண்டும்.

*பின்னர் பத்திரப்பதிவு அலுவலரிடம் சென்று, பத்திரப்பதிவுக்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். பத்திரத்தில் சேர்க்கப்படவேண்டிய விவரங்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டு இருக்கிறதா? ஏதேனும் விடுபட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

*முதலிலேயே முத்திரைத்தாளில் எழுதிவிடாமல் ஒரு பேப்பரில் எழுதிப்பார்த்து, விவரங்கள் ஏதேனும் சேர்க்கவோ, நீக்கவோ வேண்டுமெனில் அதனைத் திருத்தம் செய்து கொண்டு இரண்டு மூன்று முறை படித்துப்பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் முத்திரைத்தாளில் எழுதப்பட வேண்டும்.

*முன்தொகை போக, மீதமுள்ளதொகையை பத்திரப்பதிவு செய்யும் நாளில் கொடுக்க வேண்டும். பத்திரப்பதிவு செய்யுமுன் மொத்தப் பணத்தையும் கொடுப்பதைத்தவிர்க்க வேண்டும்.

*பத்திரப்பதிவு செய்யும் சிலமணிநேரத்திற்கு முன்பாகவே சொத்தை வாங்குபவர், விற்பவர், சாட்சிகள் உள்படசம்பந்தப்பட்ட அனைவரும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்று விட வேண்டும்.

* பத்திரப்பதிவு முடிந்ததும் அதற்குரிய ரசீதைக் கேட்டுவாங்க வேண்டும். பின்னர் அந்த ரசீதை சார்பதிவாளர்அலுவலகத்தில் கொடுத்து, பத்திரத்தை வாங்கிவிட வேண்டும். அதை வாங்குவதற்கு தாமதம் செய்யக்கூடாது. அதுபோல் பத்திரம்வாங்கியதும் பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பித்து விடவேண்டும்..

Tuesday, May 26, 2015

   GST என்ற பொருட்கள் சேவைகள் வரி

   வரி விதிப்பது ஓர் அரசின் முக்கிய அதிகாரங்களில் ஒன்று. வரி விதிக்காத அரசு, அரசாக இருக்கவும் முடியாது. வரி என்பதே நாம் கட்டாயமாக அரசுக்கு செலுத்த வேண்டியத் தொகை, அதே நேரத்தில் ஒவ்வொருவரும் செலுத்திய வரிக்கு ஏற்ப தனக்கு அரசு சேவைக் கொடுக்கவேண்டும் என்று கேட்க முடியாது. ஆனால் குடி உரிமை பெற்ற ஒவ்வொருவருக்கும் அரசின் சேவை களைக் கேட்கும் உரிமை உண்டு.

எதற்கு பொருட்கள் சேவைகள் மீது வரி?

  ஒவ்வொருவரும் அவரின் வரி செலுத்தும் திறனுக்கு ஏற்ப வரி செலுத்தவேண்டும் என்பது ஒரு கோட்பாடு. வரி செலுத்தும் திறனை அறிய ஆண்டு வருமானம் ஒரு சிறந்த குறியீடு, எனவே வருமான வரி முக்கியத்துவம் பெறுகிறது.

ஆனால், ஒருவரின் வரிசெலுத்தும் திறன் முழுவதையும் வரியாக அரசு எடுத்துக்கொண்டால் அவர் மேலும் உழைப்பதற்கான ஊக்கத்தை இழக்கக்கூடும், அல்லது வரி செலுத்துவதைத் தவிர்க்கக் கூடும். வருமான வரி விகிதத்தை அதிகமாக வைக்கக்கூடாது என்பது ஒரு கருத்து.

பலரின் ஆண்டு வருமானத்தைக் கண்டறிந்து கணக்கிடுவது கடினம், ஆகையால் அவர்கள் குறைவான வருமான வரி செலுத்தலாம். இப்படி பல காரணத்தால், அரசுக்கு வருமான வரியில் இருந்து போதிய வரி வருவாய் கிடைப்பதில்லை; அரசு வேறு வரி ஆதாரங்களைத் தேடவேண்டியுள்ளது.

சொத்து வரி, (wealth tax) பரிசு வரி (gift tax) சொத்துகள் பரிமாற்றத்தின் மீது முத்திரைத் தாள் வரி (stamp duty) எல்லாமே இவ்வாறான வரி கோட்பாட்டின் அடிப்படையில் உருவானதுதான். இவையும் போதிய வரி வருவாயை பெற்றுத்தரவில்லை. இவை எல்லாமே நேர்முக வரிகள்தான், ஏனெனில், யார் வருமானம்/சொத்து பெறுகிறாரோ அவரே நேரடியாக அரசுக்கு வரியைச் செலுத்துவதால் இவை நேர்முக வரிகள்.

ஒருவரின் வரி செலுத்தும் திறனின் அடுத்த குறியீடு அவர் வாங்கும் பொருட்களின் மதிப்பு; பொருட்களின் மேல் வரி விதிப்பது அடுத்த முக்கியமான வரியாக மாறியது. பொருட்கள் கடைசி நுகர்வுக்கு வரும்போது அந்த இடத்தில் வரி விதிப்பதுதான் உத்தமம். அப்படியானால் கடைசி சில்லரை வாணிபத்தில் (retail sales tax) மட்டுமே வரி விதிக்கப்படவேண்டும்.

இந்தியா போன்ற பெரிய நாடுகளில் சில்லரை வியாபாரம் என்பது மிகச் சிறிய அளவில் பலகோடி வியாபாரிகளால் செய்யப்படுவது, எனவே சில்லரை வியாபார வரியை மட்டுமே விதித்து நமக்குத் தேவையான வரி வருவாயைப் பெறமுடியாது. உற்பத்தி முதல் சில்லரை வியாபாரம் வரை எல்லா நிலைகளிலும் வரி விதிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.

பொருட்கள், பணிகள் வரி

   பொருட்கள் மீது வரிவிதிக்கும் அதிகாரத்தை மத்திய மாநில அரசுகள் பிரித்துக்கொண்டன. இறக்குமதி மீது சுங்கவரி (customs duty) விதிப்பதை, பொருள் உற்பத்தி மீது உற்பத்தி வரி (excise duty) விதிப்பதை மத்திய அரசும், பொருள் விற்பனை மீது விற்பனை வரி (sales tax) விதிப்பதை மாநில அரசும் எடுத்துக்கொண்டன.

ஒரு மாநிலத்துக்குள்ளேயே விற்பனை நடக்கும் போது அம்மாநில அரசு விற்பனை வரி வசூலிப்பது ஏற்புடையது. ஒரு மாநில வியாபாரி மற்றொரு மாநில வியாபாரிக்கு பொருள் விற்கும் போது எந்த மாநிலம் அந்த விற்பனை மீது வரி விதிப்பது என்ற சிக்கல் எழுந்தது.

இதற்காக மத்திய விற்பனை வரி (Central Sales Tax - cst) ஒன்றை மத்திய அரசு உருவாக்கி, அதன்படி எந்த மாநிலத்தில் வியாபாரம் உருவாகிறதோ அந்த மாநில அரசுக்கு 4% வரை விற்பனை வரி செலுத்தவேண்டும் என்றது, இப்போது CST வரிவிகிதம் 2% ஆக குறைந்துள்ளது. இதுமட்டு மல்லாமல் சில மாநில அரசும் octroi, entry tax போன்ற நுழைவு வரிகளும் விதிக்கின்றன.

  1990 களுக்குப் பிறகு பல சேவைகளை வரி விதிப்புக்கு உட்படுத்தவேண்டும் என்ற யோசனை உருவானது. இந்திய அரசியல் சட்டத்தில் எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருப்பதால் அதனைப் பயன்படுத்தி மத்திய அரசு எல்லா சேவைகள் மீதும் சேவை வரி விதித்தது. சேவை வரி இன்று மத்திய அரசின் முக்கிய வரி ஆதாரங்களில் ஒன்று.

Tax Benefits of Education Loan

  Have you taken an education loan to support higher studies of yourself or of your spouse, Children or for the student of whom you are legal guardian and you are not aware of the tax benefits that you are entitled to. Here an attempt is made to explain the tax treatment of loan taken for Higher Education.

Deduction in respect of payment of interest on loan for higher studies [Sec.80E]

Deduction under section 80E is available if the following conditions are satisfied:

Condition

1 The assessee is an individual or a natural person.

2 He had taken a loan from any bank or financial institution, i.e., a banking company or notified financial institution or an approved charitable institution.Approved charitable institution means an institution approved for the above purpose of section 10(23C) or 80G2(a).
The loan includes not only tuition or college fees but also other incidental expenses for pursuing such studies like hostel charges, transport charges etc.

3 The loan was taken for the purpose of pursuing higher education.Higher Education: Means
All fields of studies (including vocational studies) pursued after passing the Senior Secondary Examination or its equivalent from any school, board or university recognised by the Central Government or State Government or Local authority or by any authority authorized by the Central Government or local authority to do so

Thus, the above definition includes loan taken for undertaking vocational training in the area of skill development, liking sewing, agriculture etc. also it further include loan taken for undertaking B. Tech, B. Com, B. Com, M.Sc, CA, etc.

4 The loan was taken by the taxpayer for the purpose of pursuing his own higher education or for the purpose of higher education of his relatives, i.e., spouse/any child /the student for whom the taxpayer is the legal guardian.Hence parent can take deduction of interest paid on education loan taken for their children.

5 Amount is paid by the individual during the previous year by way of interest on such loan.

6 Such amount is paid out of his income chargeable to tax.

Conclusion

 If all above check box are P, then deduction of interest paid on loan taken for higher education is availableIf any of the above check box is O, then deduction of interest in not available
Further, repayment of principle amount is not deductible any provision of income tax

Amount deductible –

If the above conditions are satisfied, the entire amount paid by way of interest is deductible under section 80E.

Following points should be noted –

 The above deduction is allowed in computing the taxable income of the initial (i.e., assessment year relevant to the previous year in which the assessee stars paying the interest on the loan) and 7 immediately succeeding assessment years (or until the above interest is paid in full,whichever is earlier).
From the assessment year2006-07, no deduction will be available under section 80E in respect of repayment of principal amount..

Saturday, May 16, 2015

B Ed படிப்பு அனைத்துப் பாடங்களுக்கும் பொதுவானது :


  B Ed படிப்பு அனைத்துப் பாடங்களுக்கும் பொதுவானது என்பதற்கான தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி பெற்ற கடிதம்


ஓபிசி (OBC )சான்றிதழ் - சில தகவல்கள்


  மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு 1993 முதல் வேலை வாய்ப்பிலும், 2007முதல், மத்திய அரசின் கல்வி நிலையங்களான IIT,IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

 இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கும், கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள், அதற்கான ஜாதி சான்றிதழ் அனுப்பவேண்டும். அதற்குப் பெயர் தான் ஓபிசி சான்றிதழ்.

 தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) என ஜாதி சான்றிதழ் தரப்படுகிறது. இவர்களுக்கு, மத்திய அரசில் பணியில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, ஓபிசி சான்றிதழ் அதாவது இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் என கூறப்படுகிறது.

 இந்த ஓபிசி சான்றிதழ், பி.சி., எம்.பி.சி. சான்றிதழ் வழங்கும், அதே வட்டார அலுவலரால் தான் (தாசில்தார்) தரப்படுகிறது.

 இந்த ஓபிசி சான்றிதழ், வருமானமும் சம்மந்தப்பட்ட சான்றிதழ் என்பதாலும், கிரிமிலேயர் என்கிற முறை இருப்பதாலும், இந்த ஓபிசி சான்றிதழை ஒரு ஆண்டுக்குத்தான் பயன்படுத்தமுடியும். அதாவது, ஒரு ஆண்டின், ஏப்ரல் மாதத்திலிருந்து, அடுத்த மார்ச் மாதம் வரை, இந்த ஓபிசி சான்றிதழ் பயன்படும். மேலும், தேவைப்பட்டால், மீண்டும் அதே வட்டார அலுவலகத்தில், புதுப் பித்துக் கொள்ள வேண்டும்.அதாவது, இந்த ஆண்டு 1.4.2015 அல்லது அதற்குப் பிறகு வாங்கப்படும் ஓபிசி சான்றிதழை 31.3.2016 வரை பயன்படுத்த முடியும். 

இந்த ஓபிசி சான்றிதழ் யாருக்குக் கிடையாது?

 1. தமிழ் நாட்டில், பி.சி., எம்.பி.சி. பட்டியலில் உள்ள ஜாதிகளில், சில ஜாதிகள், மத்திய அரசின் ஓ.பி.சி. பட்டியலில் இன்னும் சேர்க்கப்படாமல் இருக்கிறது. அந்த ஜாதிகளுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது. இந்த ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசின் வேலை வாய்ப்பில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, பொதுப் பிரிவில்தான் அதாவது திறந்த போட்டியில்தான் விண்ணப்பிக்க முடியும். ஓபிசியில் சேர்க்கப்பட்ட ஜாதி சான்றிதழ் விவரம், www.ncbc.nic.in என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.

 2. IAS,IPS போன்ற குரூப் ஏ பதவியில் பெற்றோர்கள் இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, இந்த ஓபிசி சான்றிதழ் கிடையாது.

 3. குரூப் சி அல்லது பி யில் பணியில் சேர்ந்து, 40 வயதுக்குள், குரூப் ஏ பதவிக்குச் சென்றாலும், அந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடையாது.

 4. பெற்றோர்களது வருமானம் மூன்று ஆண்டுகளுக்கும் சராசரியாக ஒரு ஆண்டுக்கு ரூ.ஆறு லட்சத்தைத்தாண்டி இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, ஒபிசி சான்றிதழ் பெற முடியாது. இதில், வியாபாரிகள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என தனியே நிறுவனம் அமைத்து, வருமானம் இருந்தால், அந்த வருமானம், ஆண்டுக்கு, ரூ.ஆறு லட்சத்தைத் தாண்டினால், அவர்களுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது. 

அப்படி என்றால், யாருக்கு ஓபிசி சான்றிதழ் கிடைக்கும்?

1. குரூப் ஏ, குரூப் பி போன்ற பதவி தவிர்த்து, குரூப் சி, குரூப் டி போன்ற பதவிகளில் பணிபுரிந்தால், அப்போது, அவர்களது சம்பளம், ஆண்டுக்கு, ரூ.ஆறு லட்சத்தைத்தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும்.

 2. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் பணிபுரியும், பிற்படுத்தப்பட்டோர், அவர்களது ஆண்டு வருமானம், ரூ.ஆறு லட்சத்தைத் தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும். 

3. விவசாய வருமானம் ரூ.ஆறு லட்சத்தைத் தாண்டினாலும், அந்த பிற்படுத்தப் பட்டோரின் பிள்ளைகளுக்கு, ஓபிசி சான்றிதழ் பெறலாம். 

தமிழக அரசின் ஆணை:

 ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு, பிற்படுத்தப்பட்டோரின் ஆண்டு வருமானத்தைக் கணக்கிடும்போது, மாதச் சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது; அதே போன்று, விவசாய வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என, தமிழக அரசு, ஆணை பிறப்பித்துள்ளது. இதனை, மத்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

 இந்த ஆணையின்படி, பிற்படுத்தப்பட்டோரின் பெற்றோர், அரசின் பதவிகளில் இருந்தாலும், வங்கி உள்ளிட்ட எந்த பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், அவர்களது, மாதச் சம்பள வருமானத்தை, கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை, ஜாதி சான்றிதழ் வழங்கும் வட்டார அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஓபிசி சான்றிதழக்கு எப்படி விண்ணப்பிப்பது?

 முன்னர் சொன்னபடி, ஜாதி சான்றிதழ் வழங்கும், வட்டார ஆட்சியர் அலுவல கத்தில், ஓபிசி சான்றிதழ் பெறுவதற்குரிய விண்ணப்பம் கிடைக்கும். அதனைப் பூர்த்தி செய்து, ஏற்கனவே தமிழக அரசு வழங்கியுள்ள ஜாதி சான்றிதழ் நகலையும் இணைத்திடவேண்டும்.

 அந்த விண்ணப்பப் படிவத்தில், பாரா 12-ல் 12- என்ற பாரா, வருமானம்/சொத்து பற்றிய விவரம் கேட்கப்படுகிறது. அதில் ஆண்டு வருமானம் என்பதில், மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானம் தவிர்த்து, என்றே குறிப்பிடப்பட்டிருக் கும். இந்த படிவம், www.persmin.nic.in என்ற இணைய தளத்தில், OM and Orders என்கிற பகுதியில், O.M. No.36012/22/93-Estt.(SCT), தேதி 15.11.1993 என்கிற அரசு ஆணையை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 ஆகவே, மாதச் சம்பளம் பெறுவோர், விவசாயி போன்றோர், இந்த விண்ணப்ப படிவத்தில், வருமானம் என்ற இடத்தில், மாதச்சம்பளம், அல்லது விவசாய வருமானம் என்பதை மட்டும் குறிப்பிட்டு, தமிழக அரசின் ஆணையின் நகலையும் இணைத்து, விண்ணப்பித்தால், ஓபிசி சான்றிதழ் நிச்சயம் கிடைக்கும். தற்போது, வங்கி உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில், வேலைவாய்ப்பு மிக அதிகமாக உள்ள நிலையில், வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு பயன் தங்களது பிள்ளைகளுக்கு கிடைத்திட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த விவசாய மக்களும் மாதச் சம்பளம் பெறுவோரும்,, இந்த விவரங்களைப் பயன்படுத்தி, ஓபிசி சான்றிதழ் பெறுமாறு கேட்டுக்கொள் ளப்படுகிறார்கள்.


 தமிழக அரசின் ஆணை, விண்ணப்பப்படிவம், தேவைப்படுவோர், aiobc.gk@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு செய்தி அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
மறுமதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால் அதுவே இறுதியானது:

    பிளஸ் 2 தேர்வில், மறு மதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால், அதுவே இறுதியானது' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வில், இயற்பியலில் கடந்த ஆண்டை விட, 95 சதவீதம் குறைவானோர், 'சென்டம்' எடுத்தனர்.

         வேதியியல், விலங்கியல், உயிரியல், கணினி அறிவியல், வணிகவியல், கணித பதிவியல் பாடங்களிலும், 'சென்டம்' எடுத்தோர் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது.இந்நிலையில், ஏராளமான மாணவர்கள் மறு கூட்டல், விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.


தேர்வுத் துறை வெளியிட்டுள்ள நிபந்தனைகள்:

மறு கூட்டல் செய்யக்கோரும் தேர்வரின் விடைத்தாளில், பக்க வாரியாகவும், வினா வாரியாகவும் வழங்கப்பட்ட மதிப்பெண் மறுகூட்டல் செய்யப்படும்.

மதிப்பீடு செய்யாமல் விடுபட்ட விடைகள் மற்றும் முழு மதிப்பீடு செய்யாத விடைகளை பரிசீலித்து மதிப்பெண் வழங்கப்படும்.

விடைக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட மதிப்பெண்ணை விட கூடுதலாக வழங்க முடியாது.

மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டில் மாற்றம் இருந்தால், புதிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

.* மறு கூட்டலுக்கு மட்டும் விண்ணப்பிப்பவருக்கு நகல் வழங்கப்படாது.

விடைத்தாள் நகல் பெற்றவர்களுக்கு மட்டுமே மறு மதிப்பீடு செய்யப்படும்

.* தேர்வர்களின் விடைத்தாள்களில், சம்பந்தப்பட்ட பாடத்திற்கான பாட வல்லுனர் மூவர் குழு மூலம் மறு மதிப்பீடு செய்யப்படும்.


மறு மதிப்பீட்டில் மதிப்பெண் உயர்வோ, குறைவோ ஏற்படலாம். குறைந்தால், முந்தைய அதிக மதிப்பெண் கிடைக்காதுமறு மதிப்பீடு மதிப்பெண்ணே இறுதியானது. எனவே, பாட வல்லுனர்களிடம் நன்றாக ஆய்வு செய்து, மதிப்பெண் உயரும் என்று தெளிவாகத் தெரிந்து, மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்..
இடைநிலை ஆசிரியர்,சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல் ) பதவி உயர்வுக்கு தகுதியானோர் பெயர்ப்பட்டியல் :



   இடைநிலை ஆசிரியர்,சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல் ) பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர்  பெயர்ப்பட்டியல் பெற இங்கு கிளிக் செய்யவும் ....CLICK HERE 

பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 960 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கல்வி உதவித் தொகை :

   2013-14 -ஆம் கல்வியாண்டில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் அரசுப் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு குறைந்த பட்சம் 960 மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியருக்கு மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயில கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

 மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், அரசு நடத்தும் கவுன்சலிங் முடிந்து கல்லூரிச் சேர்க்கை கடிதத்துடன் கோவை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை அலுவலகத்தில் பதிவு செய்து கல்வி உதவித் தொகையான ரூ. 25 ஆயிரத்திற்கான வரைவோலையை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், கல்லூரியில் சேர்ந்ததற்கான அத்தாட்சியுடன், அறக்கட்டளை அலுவலகத்தில் பதிவு செய்து உதவித் தொகையாக ரூ. 12,500 பெற்றுக் கொள்ளலாம்.

 உதவித்தொகை பெற தகுதியான மாணவர்கள், மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்று, சாதிச் சான்று ஆகிய நகல்கள், கல்லூரி ஒதுக்கீடு ஆணை (மருத்துவம்,பொறியியல் கல்லூரியில் சேர்பவர்களுக்கு மட்டும்), கல்லூரிகளில் சேர்ந்ததற்கான அத்தாட்சி அட்டை (கலைஅறிவியல் கல்லூரிகளில் சேர்பவர்களுக்கு மட்டும்), குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ-3 ஆகிய ஆவணங்களுடன் வர வேண்டும்.

 இந்த கல்வியாண்டில் 1200-க்கு 1080 மதிப்பெண்கள் எடுத்த கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்லூரி படிப்பிற்கான முழு கல்வி உதவித்தொகையையும் (அதிகபட்சமாக ரூ. 1 லட்சம்) எங்கள் அறக்கட்டளையே ஏற்றுக் கொள்ளும்.

 குறிப்பு : கலை , அறிவியல் கல்லூரிகளில் சேர்பவர்கள் சேர்க்கை அத்தாட்சி , மருத்துவம் பொறியியல் கல்லூரிகளில் சேர்பவர்கள் ஒதுக்கீடு ஆணை(Allotment Order) பெற்ற பிறகே தேவையான ஆவணங்களுடன் நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.

தொடர்புக்கு :

ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை

107/A , சென்குப்தா வீதி, ராம்நகர், கோவை - 641 009


Mobile : 0422 - 2207500

Saturday, May 9, 2015

பி.இ. விண்ணப்பம்: இணைக்க வேண்டிய சான்றிதழ்கள் என்ன? எங்கே பெறலாம்?

 பொறியியல் படிப்புகளில் சேரப்போகும் மாணவர்களின் வசதிக்காக பி.இ. கலந்தாய்வு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், சான்றிதழ்கள் அவற்றை எங்கே பெறுவது என்பன குறித்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

 அதன்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றுடன் பிளஸ் 2 தேர்வு நுழைவுச் சீட்டு ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

  2015 மார்ச் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்தாய்வின்போது அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இருந்தபோதும் விண்ணப்பத்துடன் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைச் சமர்பித்தால் போதுமானது.

  எலெக்ட்ரானிக் இருப்பிடச் சான்று: 8-ஆம் வகுப்பு, 9-ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகியவற்றில் ஏதாவது ஒரு படிப்பையோ அல்லது இந்தப் படிப்புகள் அனைத்தையும் தமிழகத்தில் படிக்காத தமிழகத்தைச் சொந்த மாநிலமாகக் கொண்ட மாணவர்கள் இருப்பிடச் சான்றிதழையோ விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியது கட்டாயம்.

  இந்தச் சான்றிதழை அந்தந்தப் பகுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பொதுச்சேவை மையங்களில் பெற வேண்டும். அதுவும் டிஜிட்டல் கையெழுத்துடன் கூடிய எலெக்ட்ரானிக் இருப்பிடச் சான்றிதழை (இ-சர்ட்டிபிகேட்) மட்டுமே இம்முறை சமர்ப்பிக்க வேண்டும்.

  முதல் தலைமுறை மாணவர் சான்று: குடும்பத்தில் வேறு யாரும் பட்டப் படிப்பு படிக்காத நிலையில், பொறியியல் படிப்பில் சேரப்போகும் மாணவருக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மட்டுமல்லாமல் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேரப்போகும் மாணவர்களும் இந்தச் சலுகையைப் பெற முடியும்.

  இந்தச் சலுகையைப் பெற விரும்பும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள், அதற்கான சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பொதுச்சேவை மையங்களில் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இதுவும் டிஜிட்டல் கையெழுத்துடன் கூடிய எலெக்ட்ரானிக் சான்றிதழாக (இ-சர்ட்டிபிகேட்) இருக்க வேண்டும் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

  இடஒதுக்கீடு சிறப்பு சலுகைகள்: இதர படிப்புகளைப் போன்று பொறியியல் படிப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத சிறப்பு இடஒதுக்கீடும், விளையாட்டு வீரர்களுக்கு 500 இடங்களும் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படுகின்றன. இதில் 12 இடங்கள் அண்ணா பல்கலைக்கழக துறைகளில் ஒதுக்கப்படும்.
  இதுதவிர, ராணுவத்தினரின் வாரிசுகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள், கை அல்லது கால் ஊனமுற்றவர்கள், காது கேளாதவர்கள், பார்வை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

 இவர்கள் அது சார்ந்த சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இவர்களுக்கான சான்றிதழ் படிவங்கள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அரசு தரும் டிஜிட்டல் லாக்கர்

  மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை, பொதுமக்களுக்கு தங்கள் ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திட, டிஜிட்டல் லாக்கர் வசதியை வழங்குகிறது. அது எப்படி ஆவணங்களைக் கொண்டு போய், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்கும் ஒரு லாக்கரில் வைக்க முடியும்? என்ற கேள்வி எழுகிறதா? மேலே படியுங்கள்.
 இந்த டிஜிட்டல் லாக்கர் வசதியைப் பெற உங்களுக்கென ஆதார் அட்டை மற்றும் மொபைல் போன் எண் இருக்க வேண்டும். ஆதார் அட்டை எண்ணுடன் இந்த லாக்கர் வசதி இணைக்கப்படும். இந்த லாக்கரில், உங்கள் ஆவணங்களின் மின்னணு நகல்களைப் பாதுகாப்பாக வைக்கலாம். அரசின் பல்வேறு துறைகள் உங்களுக்கு வழங்கும் டிஜிட்டல் ஆவணங்களையும் இதில் சேவ் செய்து வைக்கலாம். இதில் உள்ள ஆவணங்களில், நீங்கள் உங்கள் மின்னணு கையெழுத்தினையும் (e-signature) போடலாம்.




  இதனைப் பெற https://www.digilocker.gov.in/ என்ற தளத்திற்குச் செல்லுங்கள். உங்கள் பிரவுசர் இந்த தளத்தின் பாதுகாப்பு குறித்து சந்தேகச் செய்தி தரும். அதனைப் புறக்கணித்து தொடரவும். ஏனென்றால், அரசு இந்த தளத்திற்கான பாதுகாப்பு சான்றிதழைப் பெறவில்லை என்று தெரிகிறது.முதலில், உங்களைப் பற்றிய தகவல்கள், ஆதார் எண், மொபைல் போன் எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி போன்ற தகவல்களைத் தரவும். உங்களுக்கான டிஜிட்டல் லாக்கர் தரப்படும் பணியில் ஒன்றாக, உங்கள் மொபைல் போனுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பாஸ்வேர்ட் ஒன்று வழங்கப்படும். இந்த பாஸ்வேர்ட் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கும் வழங்கப்படும். இதனை தளத்தில் அதற்கெனத் தரப்பட்டுள்ள இடத்தில் அமைத்து on “Validate OTP” என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். உங்களுக்கான டிஜிட்டல் லாக்கர் தரப்படும். பின்னர், உங்கள் யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து, டிஜிட்டல் லாக்கரை இயக்கலாம்.
உங்கள் ஆவணங்களை மின்னணு நகலாக, XML பார்மட் பைலாக இதில் சேமித்து வைக்கலாம். சான்றிதழ் நகல்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் பெயர், பெற்ற நாள் கொண்டு பைலின் பெயரை அமைக்கவும். இதன் மூலம், நாம் நம் விண்ணப்பங்களுடன், சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டியதில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு, இந்த டிஜிட்டல் லாக்கர் எண்ணைத் தந்துவிட்டால், அவர்கள் இந்த ஆவணங்களைப் பெற்று சரி பார்த்துக் கொள்ளலாம். இதனால், தேவையற்ற வகையில் டாகுமெண்ட் நகல்களை இணைத்து எதற்கும் விண்ணப்பிக்க தேவை இல்லை.
 இதில் பதிந்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒரு Issuer ID வழங்கப்படும். இது வழங்கப்பட்ட பின்னர், அவர் தன் ஆவணங்களை XML பார்மட்டில் பதியலாம். பதியப்படும் ஒவ்வொரு ஆவணத்திற்கும் ஒரு uniform resource identifier (URI) தரப்படும். அது நம் ஆதார் எண்ணுடனும் இணைக்கப்பட்டிருக்கும். நம் ஆவணங்களைக் காட்ட விரும்புபவருக்கு இந்த முகவரியைத் தரலாம். அவர் இதே போல, பயனாளராக ஓர் அக்கவுண்ட் திறந்து ஆவணங்களைப் பார்வையிடலாம். ஒவ்வொருவருக்கும் 10 எம்.பி. இடம் கொண்ட டிஜிட்டல் லாக்கர் தரப்படுகிறது.

 அரசு அண்மையில் தான் இந்த திட்டத்தினைக் கொண்டு வந்துள்ளது. இதனைச் சோதனை முறையில் மட்டுமே பயன்படுத்திப் பார்க்கலாம். இது முழுமையான பின்னர், இது குறித்த மத்திய அரசின் ஆணை வெளியிடப்படும். இதன் வெற்றி, நம் அரசு துறைகள் மற்றும் நம்மிடம் உள்ளது.கூடுதல் தகவல்களை அறிய http://cdn.mygov.nic.in/bundles/frontendgeneral/images/beta-release-of-digital-locker-system.pdf என்னும் இணைய தளம் செல்லவும்...